வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



06/01/2014



தளபதி அவர்களின் மனிதநேயம்:


பேஸ்புக் மூலம் அறிந்து ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி: குழந்தைக்கு பெயரும் 

சூட்டினார் மு.க.ஸ்டாலின்!

தி.மு.கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 


நாள்தோறும் தன்னிடம் நேரில் அளிக்கப்படும் 

கோரிக்கை மனுக்களுடன், இணையத்தளத்திலும், 

முகநூல் வழியாகவும் வரும் கோரிக்கைகளையும் 

கவனித்து உரிய நடவடிக்கைகளை 

மேற்கொள்வது 

வழக்கம்.


சில வாரங்களுக்கு முன், கோவை 

சோமையம்பாளையத்தைச் சேர்ந்த நசீர் அகமது 

என்பவர் ஒரு கோரிக்கையை மு.க.ஸ்டாலினின் 

முகநூல் பக்கத்திற்கு அனுப்பியிருந்தார்.


நசீர் அகமதுவின் மனைவி முபாரக் ஜான் 


கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு சுகப்பிரசவம் 

ஆக வாய்ப்பில்லை என்றும் மிகச் 

சிக்கலானதொரு 

அறுவை சிகிச்சை மூலமே தாயையும் 

குழந்தையையும் காப்பாற்ற முடியும் என்றும் 

மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமைச் 

சூழலில் உள்ள நசீர் அகமது, தனது மனைவியின் 

சிகிச்சைக்கு உதவி கோரி அரசு அதிகாரிகள் 

பலருக்கும் மனு அளித்தும் உதவிகள் கிடைக்காத 

நிலையில், மு.க.ஸ்டாலினின் முகநூல் 

பக்கத்திற்கு தனது நிலையை விளக்கி கோரிக்கை

அனுப்பினார்.

நசீர் அகமதுவின் கோரிக்கையைப் படித்த 


மு.க.ஸ்டாலின் உடனடியாக, கோவை மாநகர 

திமுக செயலாளர் வீரகோபாலை தொடர்பு 

கொண்டு உரிய உதவி செய்ய அறிவுறுத்தினார். 

அதன்படி, நசீர் அகமதுவின் மனைவிக்குத் 

தேவைப்படும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

அடிக்கடி வீரகோபாலைத் தொடர்பு கொண்டு 


சிகிச்சை விவரங்களையும் மு.க.ஸ்டாலின் 

கேட்டறிந்தார். 2013, டிசம்பர் 5-ம் தேதியன்று நசீர் 

அகமதுவின் மனைவி முபாரக் ஜான் உரிய 

நேரத்தில் சிகிச்சை பெற்று, நல்லமுறையில் ஒரு 

பெண் குழந்தை பிறந்தது என்பதையும், தாயும் 

சேயும் நலமாக இருக்கிறார்கள் என்பதையும் 

அறிந்து நிம்மதியும் மகிழ்வும் கொண்டார்.

உரிய நேரத்தில் உதவி செய்த மு.க.ஸ்டாலினுக்கு 


நன்றி சொல்வதற்காகவும், குழந்தைக்கு பெயரிட 

வேண்டும் என்றும், அதனால் சென்னையில் வந்து 

மு.க.ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பு அளிக்கும்படி 

நசீர் அகமது – முபாரக் ஜான் தம்பதியர் மீண்டும் 

கோரிக்கை வைத்தனர். பச்சிளம் குழந்தையுடன் 

சென்னைக்கு வந்து சந்திக்கும் வீண் அலைச்சல் 

வேண்டாம், கோவைக்கு வரும் போது 

சந்திக்கலாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்து 

இருந்தார்.

அதன்படி ஜனவரி-5 அன்று கோவையில் 


நடைபெற்ற தி.மு.க இளைஞரணி 

அமைப்பாளர்கள் 

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றத் 

மு.க.ஸ்டாலினை, நசீர் அகமது தம்பதியினர் 

நேரில் சந்தித்து, தங்களுக்கு உரிய நேரத்தில் 

மருத்துவ உதவி கிடைக்கச் செய்தமைக்கு 

தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் 

தெரிவித்துக் கொண்டதுடன், தங்கள் குழந்தைக்கு 

ஒரு பெயரிடுமாறு கேட்டுக் கொண்டனர். 

பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க அந்தப் 

பெண் 

குழந்தைக்கு ”மஹபூப் சஃப்ரா “ எனப் பெயரிட்ட 

மு.க.ஸ்டாலின், குழந்தையை வாழ்த்தினார்.


நன்றி : நக்கீரன் இனையதளம்.

No comments:

Post a Comment


Labels