வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



05/01/2014

6 வயது மகளுடன் விபத்தில் சிக்கிய பெண்! காரை நிறுத்தி உதவிய மு.க.ஸ்டாலின்!

 


திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (05.01.2013) கோவை சென்றார்.  விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கவிருக்கும் அரங்கிற்கு செல்லும் வழியெங்கும் மு.க.ஸ்டாலினை காண பொதுமக்கள் கூடியிருந்தனர்.     
சுங்கம் பைபாஸ் சாலையில் மு.க.ஸ்டாலின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது இரண்டு டூவீலர்கள் மோதிக்கொண்டன. பைக்கிலிருந்து தாயும் குழந்தையும் கீழே விழுவதை கண்டவுடன் தன்னுடைய காரை நிறுத்தச் சொல்லி வாகனத்திலிருந்து இறங்கி அடிபட்ட ஷோபனா மற்றும் அவரது 6 வயது மகள் ஸ்ரூதி ஆகியோரிடம் விசாரித்தார்.
உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்த நின்றுகொண்டிருந்த அவர்கள் இருவரையும், கோவை மாநகர முன்னாள் துணை மேயர் கார்த்திகேயனுடன் காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உடனிருந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும் அறிவுறுத்தி அனுப்பினார்.    
இளைஞரணி கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்திலும் சிகிச்சைக்கு சென்றவர்கள் சிகிச்சை முடித்து நலமுடன் இருக்கிறார்கள் என்கிற செய்தியை கேட்டறிந்தார். 
துணை முதல்வராக இருந்தவர் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் ரோட்டில் நடக்கிற ஒரு விபத்துக்காக காரை நிறுத்தி உரிய உதவியினை செய்ததை அந்த பகுதி மக்கள் மிகவும் வியந்து பாராட்டினார்கள்.


No comments:

Post a Comment


Labels