நேற்று (05-01-2014) திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் நமது தளபதியார்:
முதல்வராக இருப்பவர்களுக்கு ஓய்வு என்பது அவசியம்தான். அது ஒரு நாள், இரண்டு நாள் அல்லது அதிமான ஓய்வு தேவையெனில் ஒரு வாரமாக இருக்கலாம். ஆனால் தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 மாத ஓய்வு எடுக்கிறார்.
நான் கேட்கிறேன்,
சென்னையில் இருந்து கொடநாட்டுக்குச் சென்று இவர் உறங்கி கொண்டிருந்தால், அதிகாரிகள் என்ன செய்வார்கள் ? சென்னையில் இருந்து கோப்புகளை எடுத்துக் கொண்டு, விமானம் பிடித்து கோவை வரை வந்து, பிறகு அங்கிருந்து கொடநாட்டுக்கு காரில் சென்று கோப்புகளில் கையெழுத்து பெறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு 10 அதிகாரிகள், 10 அமைச்சர்கள் இப்படி வந்து செல்கிறார்கள் என்றால், அதற்கு செலவாகும் தொகை எவ்வளவு ? அந்தப் பணம் என்ன அவர்களுடைய சொந்தப் பணமா ? அல்லது ஜெயலலிதாவுடைய பணமா ? இப்படி வீண் செலவுகளுக்காக பாழடிக்கப்படுவது மக்களின் வரிப்பணம்,
நேற்று ஜெயலலிதா ஒரு விழா நடத்தினார். அதற்காக அரசு பேருந்துகளில் எல்லாம் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்ததால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இப்படி மக்களைப் பற்றி எந்தவிதத்திலும் கவலைப்படாத ஜெயலலிதா, தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
தமிழக மாவட்ட ஆட்சியர்கள் - காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், அமைதி பூங்காவாக தமிழகம் மாறியுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த சில வாரங்களில் நடைபெற்றுள்ள கொலை-கொள்ளை பட்டியலை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
வேடசந்தூரில் ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தவரை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கொன்றுவிட்டு, 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர், வத்தலகுண்டில் 27 பவுன் தங்க நகைகளும், 35 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது, ஒட்டன்சத்திரத்தில் 40 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் பணம், ஒரு மோட்டார் சைக்கிள், லேப்டாப் பட்டப்பகலில், ஒட்டன்சத்திரத்தில் 1770 கிலோ இரும்பு கம்பிகள் கொள்ளை, நத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் 26 லேப்டாப்கள், 6 லட்சம் ரொக்கம், திண்டுக்கல்லில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகள், திண்டுக்கல்லில் வீட்டில் புகுந்து அனைவரையும் தாக்கிவிட்டு, 50 ஆயிரம் பணம் கொள்ளை, ஆயர்குடியில் 5 லட்சம் கொள்ளை, நிலக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 2.30 லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருட்கள் கொள்ளை, ஆதனூரில் 22 பவுன் தங்கம், ஆயர்குடியில் 2 லட்சம் பணம் கொள்ளை, ராஜனூரில் 27.5 பவுன் தங்கம் கொள்ளை என தொடர்ந்து கொலை - கொள்ளைகள் நடந்து வருகின்றன.
இப்படியொரு மோசமான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வரும் ஜெயலலிதா, தான் இந்தியாவின் அடுத்த பிரதமராகப் போவதாக சொல்லி வருகிறார்.

No comments:
Post a Comment