வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



14/01/2014

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தலைவர் கலைஞர் மிலாதுநபி வாழ்த்துச் செய்தி!

இஸ்லாமிய சமுதாய மக்களின் நலனில் எக்காலத்திலும் அக்கறை செலுத்தி வரும் தி.மு.கழகத்தின் சார்பில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுத் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் வேளையில் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த பொன்னா ளாகிய "மிலாது நபி" திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வா...ழ்விலும் நன்மைகள் பொங்கிக் குலுங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

கருவில் இருக்கும் போதே தந்தையாரையும், பிறந்து ஆறு வயதாகும் போது தாயாரையும் இழந்து, சிறு வயது முதல் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்தவர் நபிகள் நாயகம். அவர் இஸ்லாமியத் தத்துவத்தை ஒரு வாழ்க்கை நெறியாகவே மக்களுக்குப் போதித்தார்; போதித்தபடியே வாழ்ந்து காட்டினார். அவர் தமது வாழ்நாளில் பொய் பேசியதில்லை; வாக்குறுதிகளில் இருந்து மாறியது இல்லை; மது அருந்தியதில்லை; சூதாடியதில்லை; ஏசிப்பேசி, இகழ்ந்து பிறர் மனத்தைப் புண்படுத்தியதில்லை; புறங்கூறிப் பழி தூற்றியதுமில்லை; எவரையும் சபித்ததும் இல்லை; தனக்குத் துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்கியதும் இல்லை; அவர் எப்பொழுதும் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார்; அனாதை களுக்கு ஆதரவு தந்தார்; துன்பத்தில் சிக்கிக் கொண்ட வர்களின் துயர்களைத் துடைத்தார்; விதவைப் பெண்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்!

இத்தகைய மனிதநேயமிக்க மாண்புகள் கொண்ட அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளாகிய "மிலாது நபி" நன்னாளை இஸ்லாமியச் சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக முதன் முதலாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 1969ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் செயல்படுத்தினேன். அந்த மிலாது நபி நாள் விடுமுறையை 2002ஆம் ஆண்டில் அன்றைய அ.தி.மு.க அரசு ரத்து செய்ததையும், 2006இல் அமைந்த கழக அரசு, மிலாது நபித் திருநாளுக்கு மீண்டும் "அரசு விடுமுறை" வழங்கியதுடன்; அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்க்கு மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது உட்பட பல்வேறு சலுகைகள் நல்கியதையும் நினைவுகூர்ந்து; தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலனில் எக்காலத்திலும் அக்கறை செலுத்திவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment


Labels