வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



05/01/2014

2013- ல்
தன் உழைப்பால், கட்சியில்
தன் இடத்தையும் தமிழ்நாட்டில்
கட்சியின் இடத்தையும்
வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கருணாநிதிக்குப் பின்
திமு கழகத்தை வழி நடத்தப்
போவது யார் என்பதில்
இப்போது திமுக
தொண்டனுக்கோ, தமிழக
வாக்காளர்களுக்கோ எந்த
சந்தேகமும் இல்லை
2013-இல் சுமார் ஒரு லட்சம்
கிலோ மீட்டர் தூரம்
பயணித்திருக்கிறார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட
கட்சியினரின்
திருமணங்களை நடத்தியிருக்கிறார்,
ஃபேஸ்புக் போன்ற சமூக
ஊடகங்களின் மூலம்
தொண்டர்களின்
நிலை அறிந்து உதவியிருக்கிறார்.
டெசோ சார்பாக நியூயார்க் மற்றும்
ஜெனீவா நகரங்களுக்குப்
பயணித்து இலங்கைத் தமிழர்
பிரச்சினை தொடர்பான
மனு அளித்திருக்கிறார். கடந்த
வருடத்தின் 365 நாட்களிலும்
தன்னை ஊடகங்கள் மற்றும் மக்கள்
முன் கவனம் பெறும் வகையில்
இயங்கியிருக்கிறார்.
2014 அவருக்கு இன்னும் பெரிய
சவால்களை முன் வைக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல்
வரவிருக்கிறது. திமுக
தனித்துப்
போட்டியிடவிருக்கிறது.
அதில் அது பெறவிருக்கும்
வெற்றி தோல்விகள்
அவரது கட்சியின்
எதிர்காலத்தைத்
தீர்மானிப்பதில் முக்கியப்
பங்கு வகிக்கும்
2014-ஆம் ஆண்டில் உங்கள்
செயல்திட்டம் என்ன?
நாடாளுமன்றத் தேர்தல்
நெருங்குகிறது.
திருச்சியில் கழக மாநில
மாநாடு நடக்கப் போகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில்
சட்டமன்றத் தேர்தல். லட்சியப்
பாதையில் எதிர்கொள்ளும்
இடையூறுகளைக்
களைந்து சிறப்பான
பயணத்தை மேற்கொள்வோம்.
பொதுமக்களின்
ஆதரவை மேலும் பெருக்கும்
வகையில் கழகத்தைப்
பலப்படுத்துவோம். சமூக
வலைத்தளங்களைப்
பயன்படுத்தி கல்வி-மருத்துவ
உதவிகள், வேலைவாய்ப்புப்
பயிற்சிகள்
என்று திட்டமிடுகிறோம்.
நூற்றாண்டு கால திராவிட
இயக்கத்தின்
லட்சியங்களை தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்லும் பணியில்
தலைவருக்கு உறுதுணையாக
இருந்து அவரது கட்டளையை நிறைவேற்றுவேன்"
என்கிறார் ஸ்டாலின்

புதிய தலைமுறை

No comments:

Post a Comment


Labels