வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



03/01/2014

2004 வரலாற்றை 2014ல் மீண்டும் திமுக படைக்கும்;
40 தொகுதிகளையும் கைப்பற்றும் : கே.என்.நேரு. பேச்சு


 கடந்த 2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியால் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. திமுகவுக்கான அந்த வரலாறு 2014-ல் மீண்டும் படைக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.
  திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு குறித்து  புதுக்கோட்டையில் திமுக அலுவலகத்தில்  வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அவர் பேசியது:
’’அதிமுக அரசின் குறைகளை திமுக தலைவர் கலைஞர்,  அறிக்கையின்  வாயிலாக சுட்டிக்காட்டிய பிறகுதான் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி விவாதித்து நிறைவேற்றுகிறார். அந்த அளவுக்கு திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும்  அரசை வழிநடத்துகிறது.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றதும் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வருவாய் குறைந்துள்ளது. வேலை வாய்ப்பு இல்லை. இயற்கை கூட வஞ்சிக்கிறது, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு அதிமுக அரசு மீது வெறுப்பான மனநிலை உருவாகியுள்ளது.
திமுகவுக்கு ஆதரவான அலை வீசும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பலத்தை நிரூபிக்கும் விதமாக திருச்சி மாநாடு அமைய வேண்டும். அதற்கு இம்மாவட்டத்தில் இருந்து கட்சியினர் ஒத்துழைப்பு தரவேண்டும்’’என்றார்.

மாவட்ட அவைத் தலைவர் த. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலர் பெரியண்ணன்அரசு, முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி உள்ளிட்டோர் பேசினர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பிப். 15,16-ல் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில் அதிகளவிலான திமுகவினர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment


Labels