தோல்வி கண்டு துவளாமல் தொடர்ந்து பணியாற்றுவோம்!
ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் வேட்பு மனுத்
தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எப்படிப்பட்ட அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடத் தயாராகிவிட்டது என்பது பற்றி 27-10-2013 அன்றே நான் ஒரு அறிக்கை
விடுத்திருந்தேன்.
இதுவரை நடைபெற்ற எந்தவொரு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காவது; தேர்தல்
பணிக்குழு பொறுப்பாளர்களாக முதலில் 52 பேரையும், அதற்குப் பிறகு மேலும் 9 பேர்களைச் சேர்த்து
மொத்தம் 61 பேரை நியமித்த வரலாற்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிலும் தனது
அமைச்சரவையிலே உள்ள 31 அமைச்சர்களையும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்தார்கள்.
மேலும் கட்சியின் அவைத் தலைவர், அமைப்புச் செயலாளர்கள், வாரியத் தலைவர்கள், அணிகளின்
செயலாளர்கள் என்று மொத்தம் 61 பேர் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்
பட்டிருக்கிறார்கள். அப்போதே நான் எழுதிய "உடன்பிறப்பு" மடலில் இத்தனை பேரும் இணைந்து
கட்டவிழ்த்து விடும் அராஜகங்களையும் நம்மால் சமாளிக்க முடியுமா, எதிர் கொள்ள முடியுமா என்பதும்
கேள்விக் குறியாக உள்ளது என்றே எழுதியிருந்தேன். அது தற்போது உண்மையாகி விட்டது.
அவ்வளவுதான்!
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு. கழக வேட்பாளரை நிறுத்த கழகத்தின்
சார்பில் முடிவெடுக்கப்பட்டவுடன், முறைப்படி அதற்கு ஆதரவு கேட்டு தமிழகத்திலே உள்ள பெரும்பாலான
கட்சித் தலைவர்களுக்கும் நான் நேரடியாகக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், "வருகிற 4-12-2013
அன்று நடைபெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டி யிடுவதென முடிவெடுத்துள்ளோம். ஆளுங்கட்சி யான
அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை
செய்கின்ற வகையில், இந்த இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும்
உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்கபூர்வமானதென்று நினைத்து இந்த முடிவினை
எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும்
மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக
வேட்பாளருக்குத் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று
எழுதியிருந்தேன்.
இந்தக் கடிதத்திற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தங்கள் மேலிடத்தைக் கலந்து கொண்டு முடிவு
தெரிவிப்பதாகக் கடிதம் எழுதி னார்கள். கடைசி வரை ஆதரவைத் தெரிவிக்க வில்லை. மேலும் சிலர்
பதிலே தெரிவிக்கவில்லை. ஆனால் நம்முடைய கட்சியின் முன்னணியினரும், பல்வேறு மாவட்டக்
கழகத்தின் செயலாளர்களும், கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சியின் தோழர்களும் இந்தத்
தேர்தலில் இரவுப் பகல் பாராது அரும்பாடுபட்டார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால்
ஆளுங்கட்சியின் அராஜகம், வாக்குகளுக்காக வாரி வழங்கிய தொகை, அமைச்சர்களின் அதிகார
துஷ்பிரயோகங் கள் ஆகியவற்றுக்கு முன்னால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான்
உண்மை.
இதற்கிடையே ஆளும் அ.தி.மு.க.வின் சார்பில், அந்தத் தொகுதியில் மாவட்ட ஆட்சியரின்
ஒத்துழைப்போடு என்னவெல்லாம் நடைபெற்றது என்பதை ஏடுகளே தொடர்ந்து எழுதியிருந்தன.
தேர்தல் நடத்தை விதிகள் அந்தத் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று தலைமைத் தேர்தல்
ஆணையம் அறிவித்தது. ஆனால் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், தேர்தல்
நடத்தை விதிகள் மாவட்டம் முழுமைக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார்கள். அந்த அடிப்படையில் சேலம்
மாவட்டம் முழுவதும் இருந்த கழகக் கொடிக் கம்பங்களை, எவ்வித முன்னறிவிப் பும் இல்லாமல் மாவட்ட
தி.மு.க. நிர்வாகத்திற்கே தெரிவிக்காமல், அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால்
ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கொடிக் கம்பங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்டோபர் 5ஆம் தேதி முதல் சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல்
நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த பிறகும், ஏற்காடு
தொகுதிக்கு உட்பட்ட தும்பல், பாப்பநாய்க் கன்பட்டி, வெள்ளாளப்பட்டி உட்பட பல கிராமங் களில் பள்ளி
மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்-டாப் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரின்
அனுமதி இல்லாமலா இவை வழங்கப்பட்டன?
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வாழப்பாடி காவல் நிலையத்தில் கழக வேட்பாளர் வி.மாறனுக்கு எதிராக
ஒரு புகாரினைத் கொடுத் தார்கள். இதைப்பற்றி காவல் துறை கண்காணிப் பாளர் கூறும்போது, வாழப்பாடி கிராம
நிர்வாக அதிகாரி புகாரினைக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகார் மனுவில்,
தி.மு. கழக வேட்பாளர் வாழப்பாடியி லிருந்து ஆத்தூருக்கு 22-10-2013 அன்று பிரச்சாரத்திற்காகச் சென்ற போது பத்து
வாகனங் களுக்கு மேல் சென்றதாக கூறப்பட்டது.
ஆனால் அந்தப் புகாரை மூன்று நாட்கள் கழித்து தாக்கல் செய்வதற்கான காரணத்தை கிராம நிர்வாக
அதிகாரி தெரிவிக்கவில்லை என்றும், அந்த கிராம நிர்வாக அதிகாரி கழக வேட்பாளருடன் பத்து
வாகனங்கள் சென்றதற்கான எந்த ஆதாரத் தையோ, அதாவது கார்களின் பதிவு எண் என்ன என்பதற்கான
"வீடியோ" தொகுப்பையோ சாட்சி யமாகத் தாக்கல் செய்யவில்லை என்றும் காவல் துறை கண்காணிப்பாளர்
தெரிவித்தார்.
இதுபோலவே; தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகும், அ.தி.மு.க. அரசின் சார்பில்
பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஏற்காடு தொகுதி அமைந்துள்ள சேலம் மாவட்டம் முழுவதும்
நடத்தினார்கள். இதுகுறித்து சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சிவலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர்
மற்றும் மாவட்டக் காவல் துறை உயர் அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்தும் அந்தப் புகார்
அலட்சியப்படுத்தப்பட்டதே தவிர, எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. சேலம் மாவட்டத் திற்கு வரும்
அமைச்சர்கள், அரசுக்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. ஆனால் 14-10-2013 அன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தமிழ்நாடு
அரசு முத்திரை மற்றும் சிகப்பு விளக்கு பொருத்திய காரில் பந்தாவோடு பயணம் செய்திருக்கிறார்.
இதுபற்றியும் புகைப்படத் தோடு கூடிய புகாரை தேர்தல் ஆணையருக்கு கழகத்தின் சார்பில் தரப்பட்டது.
மாநிலத்தில் புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தல் என்ற போர்வையில் அரசுப் பணம், பொது
நிர்வாக இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்தப் பேருந்தில் அ.தி.மு.க. தேர்தல் சின்னத்தை யும்
வரைந்து மக்கள் மனங்களில் பதிய வைத்துச் செல்வாக்கு தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
30-10-2013 தேதிய "தினமலர்" நாளேட்டிலேயே சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே
அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம் தொகுத்து வாக்காளர்களின் பார்வைக்காக
வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக் கிறார்கள்.
ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ள
ஜெயலலிதா படம் மறைக்கப்படவே இல்லை. மினரல் வாட்டரில் ஜெயலலிதா படம், அரசு சார்பில்
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விளம்பரம் என எங்கும் ஜெயலலிதா படங்களைத் தாராளமாக
அனுமதித்தார்கள். அ.தி.மு.க. அரசின் இரண் டாண்டு சாதனை என்ற விளம்பரப் பலகைகள், மாவட்ட
ஆட்சித் தலைவர் அலுவலகம் உட்பட, அனைத்து இடங்களிலும் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித் தலைவரோ நடுநிலையோடு ஒரு தேர்தல் அதிகாரி போல நடக்காமல், அ.தி.மு.க.
மாவட்டக் கழகச் செயலாளரைப் போல வெளிப் படையாகவே நடப்பதாக புகார் கழகத்தின் சார்பில்
கூறப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளைச் சிறிதும் பிறழாமல் அனுசரித்து, அதன்படிக் கண்காணித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த அதிகாரியே, வேலியே பயிரை மேய்வதைப் போல, சேலம் மாவட்டம்,
ஓமலூர் பழைய நீதிமன்றம் எதிரே, ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு, 2 கோடியே 52 இலட்சம் ரூபாய்ச்
செலவில் கட்டிடம் கட்ட 6-11-2013 அன்று காலை 10.45 மணிக்கு வைதீக முறைப்படி பூஜைகள் நடத்தி
அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி, மேட்டூர் துணை
ஆட்சியர், ஓமலூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுப்பணித் துறை (கட்டுமானம்) உதவிச்
செயற் பொறியாளர்கள் கலந்து கொண் டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றிப்
பாதுகாத்திட வேண்டிய மாவட்ட முதன்மை அதிகாரியே, தேர்தல் நடத்தை விதிகளைத் துச்சமென
நினைத்து, அவற்றை மீறி நடந்தால், அதை யாரிடம் சென்று முறையிடுவது?
வாக்காளர் துணைப் பட்டியலில் புதிதாக 18 வயது நிரம்பியவர்களை மட்டுமே சேர்க்க முடியுமென்ற
நிலையில், தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத 40 வயது நிரம்பியவர்களை அ.தி.மு.க. வினரின் வீட்டு
முகவரியில் வசிப்பதாகக் கூறி, அதுபோல 15 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு
அறிவிக்கப்பட்டார்கள்.
போலி வாக்காளர்களை உடனடியாக நீக்க வேண்டுமென்று இந்தியத் தலைமைத் தேர்தல்
ஆணையருக்கு தி.மு.க. சார்பில் கடிதம் எழுதப் பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு வாகனங் களைப் பயன்படுத்தக் கூடாது, அரசு விருந்தினர்
விடுதியில் தங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளபோதிலும், ஒரு சில
அமைச்சர்களும், வாரியத் தலைவர்களும் இவற்றை மீறி நடந்து கொண்டார்கள்.
அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும்,
அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள்.
ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான
மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11-11-2013 தேதிய
"தினமலர்" நாளேடே வெளியிட்டிருந்தது.
ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்க ளின்
பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடவே
இல்லை.
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க. கொடி கட்டிய காரில்
வந்தபோது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு
அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர்.
அ.தி.மு.க. வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, நாற்பதுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.
கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதி முறைகளை மீறி வந்தன. 13-11-2013 அன்று பகல் 12 மணியளவில்
அனைத்து அமைச்சர்களும், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களும் அயோத்தியாப்பட்டணத்தில்
அ.தி.மு.க. கட்சி அலுவலகத் திறப்பு விழாவிற்கு நூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. கொடி கட்டிய வாகனங்களில் வந்ததோடு,
அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தின் பாதுகாப்பு வேலியை அகற்றி விட்டு, வாகன நிறுத்தத்திற்குப் பயன்படுத்தி உள்ளனர். அமைச்சர்களுடன்
சென்று வாக்குச் சேகரித்த அரசு அலுவலர், சத்துணவு அமைப்பாளர் ஒருவரின் புகைப்படமே ஏடுகளில் வெளிவந்தது.
விதிமுறைகளை மீறி சேலம் மாவட்டம் முழுவதும் முதலமைச்சர் படத்துடன் அம்மா உணவகம், இரட்டை
இலைச் சின்னம் பொறித்த அம்மா குடிநீர் விற்பனைக் கடை, தொகுப்பு வீடு களில் முதலமைச்சர் படம்
ஆகியவை அகற்றப் படாமல் இருந்தன.
தேர்தல் விதிகளை மீறி அமைச்சர் வீட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் என்ற அரசு அதிகாரி சென்று
ஆலோசனை நடத்தினார். அவருடன் மற்றொரு அதிகாரியும், 2 உதவியாளர்களும் தமிழக அரசு
வாகனத்தில் சென்றிருக்கிறார்கள்.
மின்னாம்பள்ளி கிராமத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை மினி பேருந்து மூலமாக அமைச்சர்கள்
அழைத்து வந்து உப்புமா, பொங்கல் வழங்கியதோடு, அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து
ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் வீதம் வழங்கியிருக்கிறார்கள். இதை படம் எடுக்கச் சென்ற பறக்கும்
படையினரை, விரட்டி யடித்திருக்கிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் உச்சக்கட்டமாக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2000
ரூபாயும் வழங்கப்பட்டதாக ஏடுகளி லேயே வெளிப்படையாக செய்திகள் வந்தன. தொலைக்காட்சியிலே
அந்தக் காட்சிகள் காட்டப்பட்டன.
முதலமைச்சர் அந்தத் தொகுதியிலே பிரச்சாரம் செய்து ஏராளமான வாக்குறுதிகளையெல்லாம் வாரி
வழங்கினார். தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு வாக்குறுதிகளை ஆட்சியில் இருப்போர் வழங்குவது தவறு
என்று கழகத்தின் சார்பில் புகார் தரப்பட்டு, அதனை விசாரித்த தலைமைத் தேர்தல் ஆணையம் முதல்
அமைச்சர் ஜெயலலிதா அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று எச்சரிக்கையை மாத்திரம் செய்ததே
தவிர, முதலமைச்சரே வாக்குறுதிகளை அளித்ததும், அவ்வாறு வாக்குறுதி அளிக்கவில்லை என்று தேர்தல்
ஆணையத்திற்கு உண்மைக்கு மாறான தகவலை விளக்கத்திலே எழுதிக் கொடுத்ததும் எவ்வளவு பெரிய
தவறு என்ற போதிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இத்தனையையும் மீறித்தான் இந்தத் தேர்தலில் கழகம் போட்டியிட்டது. ஆனால் பணநாயகம், அராஜகம்,
அதிகாரம் ஆகியவற்றுக்கு முன்னால் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பினை இழக்கக் கூடிய நிலை
ஏற்பட்டுவிட்டது. பெண்ணாகரத் தில் "டெபாசிட்" தொகையை இழந்து மூன்றாவது இடத்திற்குத்
தள்ளப்பட்ட அ.தி.மு.க.தான் தற்போது தமிழகத்தின் ஆளுங்கட்சி! எனவே நான் நேற்று கூறியதைப் போல
இது வாக்காளர் களுக்கு ஏராளமாக பணம் வழங்கி, அ.தி.மு.க. பெற்ற வெற்றியாகும்; இதுபோன்ற
தோல்விகளை எதிர்கால வெற்றிக்கு ஏணிப்படிகளாக ஆக்கிக் கொண்டு, தோல்வியைக் கண்டு
துவளாமல், தொடர்ந்து பணியாற்றிடுவோம்!
தலைவர் கலைஞர்

No comments:
Post a Comment