வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/12/2013

!!நிச்சயம் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும்...தளபதி!! 

தியாகதுருவம் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜமுருகன் (32) ஏற்காடு தேர்தல் களத்தில் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொறையூரில் உள்ள முருகனின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று காலை 8 மணிக்கு திமுக பொருளாளர் தளபதி அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைமைக் கழகத்தின் சார்பாக ரூபாய் 2 லட்சமும், மாவட்டம் மற்றும் ஒன்றியம் சார்பாக ரூபாய் 8 லட்சம் என மொத்தம் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை ராஜமுருகனின் மனைவி திலகவதியிடம் தளபதியார் வழங்கினார். பின்னர் 8.45 மணி அளவில் ராஜமுருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தளபதி அவர்கள்
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆர்வமாக பணியாற்ற வந்த தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ராஜமுருகன் அ.தி.மு.க.வினரின் அராஜகம் காரணமாக மின்சாரம் தாக்கி இறந்தது வேதனையளிக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அங்கிருந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆதாரத்தோடு எடுத்து கூறியும் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். இதற்கு நிச்சயமாக நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும். ராஜமுருகன் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளோம்.

தலைவர் கலைஞர் அறிவித்தபடி தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ரூ.2 லட்சமும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.7 லட்சமும், மாணவர் அணி சார்பில் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் ராஜமுருகன் குடும்பத்துக்கு வழங்கி உள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment


Labels