தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணி செயலாளரும் ஆன தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா மார்ச் 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 11 நாட்கள் இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. முதல்நாள் விழா மார்ச் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது.
சினிமா பாடகர் வேல்முருகன், பாடகி மாலதி ஆகியோர் தளபதி வாழ்த்து பாடுகிறார்கள். அதைத் தொடர்ந்து டாக்டர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் வாழ்த்தரங்கம் நடக்கிறது. இதில் கவிஞர் வைரமுத்து, டாக்டர் அவ்வை நடராஜன், சுகிசிவம், சரஸ்வதி ராமநாதன், நடிகர் ராஜேஷ், எம்.பி.நிர்மல் ஆகியோர் பேசுகிறார்கள். 2-வது நாள் (2-ந்தேதி) சைதாப்பேட்டை தேரடி திடலில் பாடகர் மாணிக்க விநாயகம், பாடகி தஞ்சை செல்வி அய்யப்பன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
அதைத் தொடர்ந்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திருமாவளவன் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், சுப. வீரபாண்டியன், காதர் மொய்தீன் ஆகியோர் பேசுகிறார்கள். 3-ம் நாள் அடையாறு, பள்ளிப்பட்டு சேவாசமாஜம் குழந்தைகள் இல்லத்தில் துரைமுருகனும், 4-ம்நாள் நரிக்குறவர் பள்ளியில் வி.பி.துரைசாமியும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். 5-ம் நாள் முன்னாள் துணைவேந்தர்களின் பார்வையில் தளபதி என்ற தலைப்பில் கோட்டூர் மார்க்கெட் திடலில் திறந்த வெளி கருத்தரங்கம் நடக்கிறது.
இதில் க.ப,அறவாணன், அவ்வை நடராஜன், அ.ராமசாமி, ம.ராஜேந்திரன், சபாபதிமோகன் ஆகியோர் பேசுகிறார்கள். 6-ம்நாள் ஆலந்தூரில் 600 ஆதரவற்ற பெண்களுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கு கிறார். 7-ம் நாள் ரங்கபாஷ்யம் தெருவில் 600 ஆதரவற்ற முதியோர்களுக்கு மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
8-வது நாள் ஈக்காட்டு தாங்கலில் 100 மாற்று திறனாளிகளுக்கு மத்திய மந்திரி காந்திசெல்வன் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 9-ம் நாள் கொத்தவால் சாவடியில் 600 பேர் ரத்த தானம் வழங்குகிறார்கள். இதை வாகை சந்திரசேகர் தொடங்கி வைக்கிறார். 10-ம் நாள் சின்னமலை கருணை இல்லத்தில் எஸ்.பி.சற்குணபாண்டியன் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குகிறார். 11-ம் நாள் காலை 9 மணிக்கு சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் இலவச மருத்துவ முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

No comments:
Post a Comment