வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



03/12/2013

கேப்டன் டிவி நிருபர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை
 வன்மையாகக் கண்டிக்கிறேன் : கலைஞர் பேட்டி

தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
கேள்வி:– நேற்றையதினம் அ.தி.மு.க.வினர் நடத்திய மோதல் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஏற்காட்டில் பலியாகியிருக்கிறாரே?
பதில்:– அவரது மறைவுக்குக் காரணம், அ.தி.மு.க.வா, வேறு யாராவதா என்று நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. பொதுவாக போலீசார் தி.மு.கழகக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதே இடத்தில் அ.தி.மு.க.வினர் ஊர்வலம் வர எப்படி அனுமதித்தார்கள்? 
தி.மு. கழகக்கூட்டம் நடைபெற்ற அதே இடத்திற்கு அ.தி.மு.க.வினர் ஊர்வலம் வர காவல்துறை அனுமதி கொடுத்த காரணத்தால்தான், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் தி.மு.கழகத்தைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார்.
இது காவல் துறையினரின் கவனக்குறைவா அல்லது இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரே நேரத்தில் அனுமதி கொடுத்து அல்லது வழிவிட்டு நடத்த அனுமதித்ததன் விளைவா? இதற்குக் காரணமாக போலீசார் இருந்ததால் ஒரு இளைஞனைத் திராவிட முன்னேற்றக் கழகம் பலி கொடுத்திருக்கிறது.
கேள்வி:– தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்து விட்டதே; சென்னையிலேயே அன்றாடம் இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே?
பதில் :– சந்தோஷம்.
கேள்வி:– ஆனால் மின்வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதல்– மைச்சர் ஜெயலலிதா அதற்கு தி.மு.கழகத்தின் மீது பழிபோடுகிறாரே? மேலும் மத்திய அரசும், தி.மு.கழகமும் சேர்ந்து சதி செய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?
பதில்:– அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழிபோடுவது என்பது இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.
கேள்வி:– “கெயில்” எரிவாயு குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இருதரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறதே?

பதில்:– நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக இயந்திர மயம் என்ற பெயரால் சில காரியங்கள் நடக்கின்றன.
அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறை காட்ட வேண்டும். அதனால்தான் இரு சாராரும் பேச்சுவார்த்தை நடத்தி அதனை ஒருமுனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.
கேள்வி:– மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றது பற்றி வருகின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்று சொல்கிறார்களே?
பதில்:– அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படு மானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள்.
கேள்வி:– நேற்றையதினம் “கேப்டன்” தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒரு குழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல் துறையினர் தொலைக்காட்சி நிறுவனத் தைச் சேர்ந்தவர் களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்கு மேல் பத்திரிகையாளர் களை போலீசார் கைது செய்திருக்கிறார்களே?
பதில்:– இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

No comments:

Post a Comment


Labels