வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



03/12/2013

திமுக தொண்டர் உடல் மறு பிரதே பரிசோதனை!
கூர்மையடையும் தி.மு.க போராட்டம்! 


இதுகுறித்து சேலம் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழரசன் கூறும்போது ,’அமைச்சர் மோகன் உட்பட்ட கோஷ்டியினர் நேற்று தளபதி ஸ்டாலின் வந்த கருமந்துறை கூட்டத்திற்காக திரண்டு இருந்த எங்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் புகுந்து அவதூறாக பேசினர். எங்களை தாக்கினர்.


அப்போது முருகன் அடிபட்டார்.  அதில்தான் அவர் கொடி கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்து இறந்தார்.  அவரை தாக்கிய கும்பல் மீதும், அமைச்சர் மோகன், எம்.பி லட்சுமணன், சின்னசாமி எம்.எல்.ஏ,சேர்மன் ராஜசேகர், வெங்கடேசன் உட்பட்டோர் மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தினர் என்று கருமந்துறை காவல் நிலையத்திலும், எஸ்.பி அலுவலகத்திலும் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே எங்கள் கட்சி தலைவர்கள் இங்கு குழுமியுள்ளனர்.  எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என்றார்.
அதேசமயத்தில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், வீரபாண்டி ராஜா ஆகியோர் எதிர் எதிர் துருவமாக இருப்பதால் இருவரும் விலகி தனி தனியாக நின்றுகொண்டு இருந்தனர். பின்பு எஸ்.ஆர்.சிவலிங்கமும், டி.எம்.எஸ் அவர்களும் வீரபாண்டி ராஜா அவர்களை அழைத்தனர்.


பின் நான்கு பேரும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் ‘முருகன் மரணம் குறித்து விளக்கங்களை கேட்டனர். பின்பு மேற்கண்ட அ.தி.மு.க வினர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று தி.மு.க வினர் கேட்க,’விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என காவல்துறை ஒப்புதல் கொடுக்க உடலை பெற்றுக்கொண்டு திரும்பினர் தி.மு.கவினர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கிரிராஜன் என்பவர் மனு தாக்கல் செய்ய அதை ஏற்றுகொண்ட நீதிமன்றம் மூன்று நாள் கழித்து மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே தற்போது விழுப்புரம் சென்ற முருகனின் உடல் மீண்டும் சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வரப்படுகிறது.

No comments:

Post a Comment


Labels