தியாகராயர் நகரில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுத் தீர்மான விளக்கப்
பொதுக்கூட்டத்தில் நான் நிகழ்த்திய உரை...! தென்சென்னை மாவட்டக் கழகம்
சார்பில் தியாகராயர் நகரில் நேற்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுத்
தீர்மான விளக்க மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்
கலைஞர் அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா என்னை தீய சக்தி என்கிறார்.
யார் `தீய சக்தி’ என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் என்றும், அதிகாரம்
கிடைத்தால் எங்கள் இஷ்டத்துக்கு தான் ஆட்சி நடத்துவோம் எனக்கூறி, கழக
ஆட்சியில் மக்களுக்காகச் செய்யப்பட்ட நல்ல திட்டங்களை,
பணிகளையெல்லாம் அழித்துவிட வேண்டுமென்று எண்ணிச் செயல்படுகிற
தீய சக்தி ஜெயலலிதாவை வளரவிடலாமா? ஆதரிக்கலாமா? என எண்ணிப்
பாருங்கள்! என்றும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களிடையே கேள்வி
எழுப்பினார். கழகப் பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில்
தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- தமிழகம் முழுவதும்
தி.மு.க. பொதுக்குழுவினுடைய தீர்மானங்களை விளக்குகின்ற வகையிலே
பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானித்து, அந்த வகையில், அந்த
வரிசையில் நடைபெறுகின்ற கூட்டமாக இந்தக் கூட்டம்
தென்சென்னையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மாலையிலே நான் வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த மேடைக்கு வருகின்ற வரையில் எழுச்சிக் கோலத்தைக் கண்டேன். என்னுடைய தம்பிமார்கள் மகிழ்ச்சி பூத்திட எங்களை வரவேற்ற காட்சிகளைக் கண்டேன். இங்கே தாய்மார்களும், பெரியோர்களும், பாட்டாளி மக்களும், ஏழை எளியவர்களும், அன்றாடம் வேலை செய்து அரை வயிற்றுக்கு உணவு இருந்தால் போதும் என்று அகம் மகிழ்கின்ற ஏழை எளிய நலிந்த மக்களும், அவர்களு டைய துன்ப துயரங்களை எல்லாம் மறந்துவிட்டு என்னைக் கண்டபோது தங்களுடைய சகோதரனைக் கண்ட அந்த மகிழ்ச்சியிலே ஆடிப்பாடி வரவேற்றுக் களித்ததை நான் மறக்க முடியாது. இந்த வட்டாரத்திலே நான் எல்லாச் சாலைகளிலும் உங்களைச் சந்திக்கின்ற வாய்ப்பை பல்லாண்டு காலமாகப் பெற்று வருபவன். இன்றைக்கும் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன் என்று சொன்னால், இந்த வாய்ப்புக்கு வழிவகுத்த நம்முடைய கழக முன்னோடிகள், தென்சென்னை மாவட்டக் கழகத்தினு டைய தீரர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக் களையும், வாழ்த்துக்களையும் குவிக்க விரும்புகின்றேன். இங்கே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கருணாநிதியும், கழகத்திலே உள்ள சிலரும் பேசுகிறார்கள்; எங்கே சட்டம் ஒழுங்கு கெட்டது என்று எங்களுக்குச் சவால் விடுகின்ற வகையிலே இன்று நடைபெறுகின்ற ஆட்சியிலே உள்ளவர்கள் - முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பேசுகிறார்கள்; கேள்வி கேட்கிறார்கள்; கிண்டல் செய்கிறார்கள்; சாபம் கொடுக்கிறார்கள்; எங்களை எந்த அளவிற்கு வசைமாரி பொழிய வேண்டுமோ அந்த அளவிற்கு வசைமாரி பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கும் உங்களுக்கும் தெளிவு படுத்துவதற்காக ஒரு புள்ளி விவரத்தைச் சொல்லுகின்றேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு கெட்டுவிட்டது என்பதற்கு உதாரணங்கள்! தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு; இந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி ஆகியிருக்கிறது என்பதற்கு, நான் படிக்கின்ற பட்டியல் ஒரு உதாரணம் ஆகும். கொலைகள் மாத்திரம் இந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் 3231. கொள்ளைகள் 1170 வழிப்பறி மோசடிகள் 691 செயின் பறிப்புகள் 652 3231 கொலைகள் நடைபெறக் காரணமான இந்த ஆட்சியைப் பற்றியா, சட்டம் ஒழுங்கைப் பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என்று எங்களை ஏகடியம் செய்கின்ற அ.தி.மு.க. நண்பர்களுக்கு, அ.தி.மு.க.வின் தலைவி யாருக்கு இந்த எண்ணிக்கையை நான் சமர்ப்பிக் கின்றேன். இல்லை என்று மறுத்தால் நான் அதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால், இரண்டரை ஆண்டுக் காலத்திலே சட்டம் ஒழுங்கு இந்த பாடுபட்டிருக்கிறது என்றால், மூவாயிரத்து இருநூறு கொலைகள் நடந்திருக்கின்றன. என்றால், அதற்கு என்ன காரணம்? எப்படி இது நடைபெற்றது? இந்த ஆட்சியிலே 3200 கொலைகளும், 1000க்கு மேற்பட்ட கொள்ளைகளும், 690க்கு மேற்பட்ட வழிப்பறிகளும், 652 செயின் பறிப்புகளும் நடைபெற் றிருக்கின்றன என்றால், இதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டாமா என்று ஜெயலலிதா அம்மையார் கேட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்களைப் பற்றி - அதிலே என்னை மிக மோசமாக, தரக்குறைவாகக் குறிப்பிட்டு வசை பாடியிருப்பதைப் பற்றி எனக்கு முன்னால் பேசிய அருமைத் தம்பி கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் இங்கே எடுத்து விளக்கினார். தி.மு. கழகத்தினுடைய பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் நாகரிகத்தையும், எடுத்தாண்ட பண்பாட்டையும் எடுத்துக்காட்டி, அ.தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையும் ஒப்பிட்டுக் காட்டி, இந்த இரண்டு படங்களையும் பாருங்கள், எது பண்பார்ந்த படம், எது அறிவார்ந்த படம், எது அரசியல் ரீதியான படம் என்பதை உங்களிடத்திலே அவரும் விளக்கியிருக்கின்றார். நம்முடைய தம்பி அன்பழகனும் விளக்கியிருக்கின்றார். நம்முடைய இளங்கோவனும் விளக்கியிருக்கின்றார். இன்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக என்னைப் பற்றி, என்னுடைய பொது வாழ்க்கையைப் பற்றி, நான் ஆட்சி புரிந்த திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பற்றி, என்ன சாதித்தீர்கள்? என்று ஜெயலலிதா இன்றைக்கும் கேட்கிறாரே? அதைப்பற்றியெல்லாம் அவர்கள் விளக்கிக் கூறி னார்கள். நான் அவர்களுக்குப் பதில் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் சென்னை மாநகரத்தைப் பார்ப்ப வர்கள், தமிழகத்திலே இருக்கின்ற நிலைமையை உணர்ந்தவர்கள், மின்சாரப் பற்றாக்குறையினால் அவதிப்படுகின்ற மக்களுடைய அல்லலை எண்ணு கின்றவர்கள் , இந்த ஆட்சியை எப்படிப் பாராட்ட முடியும், எப்படிப் போற்ற முடியும், எப்படிப் புகழ முடியும் என்பதை நன்றாக நீங்கள் அறிவீர்கள். என்னை முழுக்க அர்ச்சனை செய்து நிறைவேற்றப்பட்டுள்ள அ.தி.மு.க. தீர்மானம்! 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றார்கள், அவர்கள் இப்பொழுது நடத்திய அ.தி.மு.க. பொதுக் குழுவில். அதிலே மிக நீண்ட தீர்மானம் என்னை முழுக்க முழுக்க அர்ச்சனை செய்து நிறைவேற்றப் பட்ட தீர்மானம். நான் இந்த அர்ச்சனைகளுக் கெல்லாம் மனம் கலங்குகின்றவன் அல்ல. ஏனென்றால் எவ்வளவு மகா மோசமான அர்ச்சனைகளை யெல்லாம் கேட்டுக் கேட்டுப் பழகித்தான் இந்த இயக்கத்தை ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வளர்த்து இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு வயது 90ஐ தாண்டி விட்டது. 91ஐ தாண்டி விட்டது என்றெல்லாம் சொன் னாலும் கூட, அதிலே என்னுடைய பொதுவாழ்வுக்கு வயது 70க்கும் மேற்பட்ட வயதாகும். இந்த 70க்கும் மேற்பட்ட வயதில் பொது வாழ்வில் நான் கேட்காத அர்ச்சனை இல்லை. நான் பார்க்காத, நான் உணராத, நான் சந்திக்காத, என்னை துன்புறுத்தாத நிலைமைகள் இல்லை. அவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், திராவிட முன்னேற்றக் கழகம் என்னுடைய உயிர், என்னுடைய மூச்சு, அந்தக் கழகத்தைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதற்காகக் கவலைப்படாமல், கழகத்தி னுடைய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற என்னைப் பற்றி யார் எவ்வளவு தாக்கினாலும், ஏன் என் மீது காறி உமிழ்ந்தாலும்கூட, அதையும் துடைத்துக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்ற (கைதட்டல்) ரத்தம் சிந்தக் கூடியவன்தான் (பலத்த கைதட்டல்) இந்தக் கருணாநிதி என்பதை நான் அவர்களுக்கும் தெரிவிக்கின்றேன். உங்களுக்கும் ஞாபகப்படுத்துகின்றேன். திராவிட இயக்கத்தை உருவாக்கி - அதற்குப் பாடுபட்டோர் பட்டியலில் என் பெயர் இருக்கும்! இன்று நேற்றல்ல, நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களைச் சந்தித்த அந்தக் காலம் தொட்டு, 1941, 42ல் திருவாரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அந்தத் தேதியிலே தொடங்காவிட்டாலும், திராவிடர்களுடைய எழுச்சியை, திராவிடர்களுடைய உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற பெரியாருடைய எண்ணங் களுக்கு வலிவு சேர்க்கின்ற வகையிலே அன்றைக்கே மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம் இவைகளை யெல்லம் உருவாக்கிப் பாடுபட்ட அந்தப் பட்டியலிலே என்னுடைய பெயர் உண்டு. அப்பொழுது இவர்க ளுடைய பெயரெல்லாம் கிடையாது. அப்பொழுது இவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. அறிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள், ``தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்று சொன்னாலும்; அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும், இரண்டையும் சமமாகக் கருதுகிறவன்தான் என்னுடைய தம்பி கருணாநிதி"" என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதை விடவா ஜெயலலிதா எனக்குக் கொடுக்கின்ற பட்டம் பெரிது? அதை விடவா இந்தப் புகழுரை பெரிது? அதைவிடவா இந்தப் பாராட்டு எல்லாம் எனக்குப் பெரிது?. என்னை தீய சக்தி என்கிறார் ஜெயலலிதா. தம்பி துரைமுருகன் வருத்தப்பட்டார். கனல் கக்க அதை மறுத்துப் பேசினார். நான் தீய சக்தியா, நீ தீய சக்தியா என்பது நாட்டுக்குத் தெரியும். நான் இந்த வயதிலும், ஜெயலலிதா போன்றவர்களால் தீய சக்தி என்று வர்ணிக்கப்படுகின்ற அளவிற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றால் யாருக்கு நான் தீய சக்தியாகத் தெரிகிறது? யாருடைய கொடூரமான செயல்களால், யாருடைய நச்சுத் திட்டங்களால், யாருடைய நாட்டை அழிக்கின்ற செயல்களால், தமிழ்நாட்டு மக்கள் அல்லல்படுகிறார்களோ, தமிழ் நாட்டு மக்கள் அவதிப்படுகிறார்களோ, அவர்களை யெல்லாம் அத்தகைய செயல்களிலிருந்து காப்பாற்ற, அவர்கள்மீது நெருப்பை உமிழ வேண்டும் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட சக்திகள் மீது நெருப்பை உமிழவும், அப்படிப்பட்ட காரியங்களிலே, நானே என்னை பலி கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், அதற்குத் தயாராகவும் இருப்பவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். திருவாரூர் வீதியிலே தமிழ்க்கொடி ஏந்தி நான் போராடிய காலத்தில் ஜெயலலிதா பிறக்கவே இல்லை! அவர்களுடைய பொதுக்குழுத் தீர்மானத்திலே சொல்லியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தில், ``மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கேற்றபோதும், எந்த ஒரு நற்செயலையும் செய்யாமல், உலகத் தமிழர்களின் உள்ளமெல்லாம் வேதனை கொள்ளும் வகையில் துரோகங்களை இழைத்த தீய சக்தி கருணாநிதியை வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்க தமிழக வாக்காளர்களுக்கு அன்பான வேண்டுகோள்"" - இதற்குப் பெயர் அன்பு வேண்டுகோளாம். எவ்வளவு அன்பான வேண்டுகோள் பாருங்கள். எனக்கு வாக் களிக்காமல் இருக்க வேண்டுமென்று அன்பு வேண்டு கோள் விடுக்கிறார் அம்மையார். என்ன காரணங் களைச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நான் திருவாரூரில் ``ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே"" என்று முழங்கி, கையிலே புலி, வில், கயல் பொறித்த தமிழ்க் கொடியைப் பிடித்துக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே ஈடுபட்ட காலத்தில்; பிறக்கக் கூட இல்லை இந்த அம்மையார். அவர்களுக்கு என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்ற அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது. எண்ணம் வாய்த்திருக்கிறது. நான் நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களல்ல, எல்லா மக்களுமே என்னைப் புறக்கணித்தாலும்கூட, நான் செய்த காரியங்களை, நான் ஆற்றியப் பணிகளை, நான் ஈடுபட்ட போராட்டங்களையெல்லாம் கவலைப்படா மல் மறந்துவிட்டு இன்றைக்கு மக்கள் நம்மைப் புறக்கணித்து விட்டார்கள் என்றால், இப்படி ஒரு ஓய்வு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றைக்கும் ஏற்படாது. அந்த ஓய்வை அவர்கள் தரமாட்டார்கள். நான் இந்த உடலிலே உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிற வரையில், என்னுடைய உடல் மயானத்திற்குச் செல்கின்ற வரையில், என்னுடைய கடைசி மூச்சை நான் விடுகின்ற வரையில், திராவிட மக்களுக்காக, தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக நான் பாடுபடுவேன், பணியாற்றுவேன் (பலத்த கைதட்டல்) என்பதை மாத்திரம் இங்கே குழுமியிருக்கிற தாய்மார்களுக்கும், பெரியோர் களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய உடன் பிறப்புகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசில் நாம் அங்கம் வகித்து தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என பித்தலாட்டத் தீர்மானம்! அதுமாத்திரமல்ல, மத்தியப் பேரரசிலே அங்கம் வகித்தபோது, பங்குபெற்ற போது தமிழ்நாட்டிற்காக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஒரு தீர்மானமாக வடித்திருக்கிறார்களே? அது உண் மையா? அல்லது பித்தலாட்டமா? அல்லது பொய்யா, புளுகா என்ற இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்கு நான் தருகின்ற ஆதாரத்தை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ``மாபாதகன்’’, ``சுயநலவாதி’’, ``தீயசக்தி’’, ``தமிழ் இனத்துரோகி’’ என்று இப்படியெல்லாம் என்மீது விமர்சனம். இது ஜெயலலிதா என் மீது பொழிந்திருக் கின்ற அன்பான அர்ச்சனை. நான் அதற்காக மகிழ்ச்சியடைகின்றேன். ``சுயநலவாதி’’ என்றும், ``மாபாதகன்’’ என்றும், ``இனத்துரோகி’’ என்றும், ``தீயசக்தி’’ என்றும் அவர்கள் வாரியிறைத்திருக்கின்ற வார்த்தைகளைப் பார்த்தால் எனக்கு ஒரு வகையிலே அந்த அம்மையாரைப் பாராட்டவும் தோன்றுகிறது. இனத் துரோகி என்று சொன்ன காரணத்தால், """"இனம்"" என்று ஒன்று இருப்பதை இந்த அம்மையார் தெரிந்தோ தெரியாமலோ ஒத்துக் கொண்டிருக் கிறாரே என்ற அந்த எண்ணம்தான். ``மாபாதகன்’’, ``சுயநலவாதி’’, ``தீயசக்தி’’, ``தமிழ் இனத்துரோகி’’ என்று சொல்லுகின்ற காரணத்தால் """"தமிழ்"" என்று ஒன்று இருப்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதிலே எனக்கு மகிழ்ச்சிதான். எப்படி மகிழ்ச்சி என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே மத்தியிலே இல்லாவிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலே இருந்த அரசோடு நட்பு கொண்டு, பங்கு பெற்றுப் பணியாற்றி னாலும் அந்தக் கழகத்தினுடைய சாதனைகளாக சோனியா காந்தி அம்மையாரிட.த்திலே எங்கள் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேட்டு வாதாடி, போராடி அதைப் பெற்றுத் தந்த பெருமை எனக்கு அல்ல, என்னை வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. (கைதட்டல்) தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை, விருதினை நாம் பெற்றிருக்கிறோம் என்றால், அந்தத் தமிழுக்கு, அந்தப் பெருமையை நாம் இன்றைக்கு உருவாக்கி யிருக்கிறோம் என்றால், அதைப் பாராட்ட, மகிழ்ச்சி யோடு வரவேற்க வேண்டிய தமிழகத்தின் முதல மைச்சர் ஜெயலலிதா அதையே மறந்து விட்டு, என்னை ``தமிழ் இனத் துரோகி"" என்று சொல்லு கிறார். பிற்காலத்தில் ஜெயலலிதாவைப் போன்ற ஒருவர் தமிழ்நாட்டின் சரித் திரத்தை எழுதுவாரே யானால் - வேண்டாம், அந்த விபரீதம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் - ஒரு வேளை எழுதுவாரேயானால் - அவர் என்ன எழுத வேண்டும்? தமிழ்நாட்டிற்கு, தமிழுக்கு புது அந்தஸ்தை, செம்மொழி என்ற அந்தஸ்தை, நூறாண்டு காலமாக பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம், வல்லுநர்கள் எல்லாம் கேட்ட அந்தத் தகுதியைப் பெற்றுத் தந்தவன் கருணாநிதி என்ற அந்தக் கருத்தை எழுதும்போது, இவர்கள் என்ன செய்வார்கள்? ஜெயலலிதா அப்போது இருந்தால், நானும் இருந்தாலும் என்னைப் பாராட்டுவார்களா? பாராட்ட மாட்டார்களா? ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு போற்றுகின்ற, புகழுகின்ற, பாராட்டுகின்ற ஒரு காரியத்தை நான் செய்தேன் என்பதற்காக பாராட்டுகின்ற குணம் ஜெயலலிதாவுக்குக் கிடையாது. இல்லாத காரணத்தி னால்தான், இங்கே சென்னை மாநகரத்திலே செம்மொழிப் பூங்கா என்று நான் அமைத்த ஒரு அருமையான பூங்காவை இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக மறைக்கச் செய்தார். மூடச் சொன்னார். செம்மொழிப் பூங்கா அங்கே இல்லை. தற்போதும் அங்கே பராமரிப்பே இல்லாத நிலைதான் உள்ளது. அண்ணா நூற்றாண்டு நினைவு மாபெரும் நூலகத்தையே பாழடித்தவர்கள்! அதைப் போலத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட் டுள்ள மிகப் பெரிய நூலகம், இந்தியாவிலே மாத்திர மல்ல, இந்தியாவைச் சுற்றியுள்ள மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலே கூட இப்படிப்பட்ட பெரிய நூலகம் இல்லை என்று எல்லோராலும் புகழப்பட்ட நூலகம் அது. சோனியா காந்தி அம்மையார் பார்த்து விட்டு, பாராட்டிய நூலகம். ஏன், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், சென்னைக்கு வந்த போது, அதைப் பார்த்து விட்டுப் பாராட்டியபோது நாம் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அது இந்த அம்மையாருக்குப் பொறுக்கவில்லை. அந்த நூல கத்தை மருத்துவ மனையாக மாற்றுவதற்குத் திட்டம் போட்டார். நாம் எதிர்ப்போம் என்ற காரணத்தால், எதிர்த்து நின்றோம் என்ற காரணத்தால், நாம் மாத்திரமல்ல, மாணவர்கள் படையும் அதை எதிர்த்து களம் அமைத்த காரணத்தால், அதை பாழாக விட்டி ருக்கிறார்களே தவிர, நான் அதைத் திறந்து நடத்த விட மாட்டேன் என்ற வகையிலே அதைப் பாழ்படுத்தி வருகிறார்கள். பராமரிப்பு இல்லாமல் அந்த நூலகம் இன்று இயங்கி வருகிறது. எப்பொழுதுமே நான் சொல்லுகிறேன், உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒரு நாட்டில் பல கட்சிகள் ஆட்சிக்கு வரலாம். அப்படி வந்த கட்சிகளில் ஒன்று தான் தி.மு.க. எங்களுக்கு அடுத்து அ.தி.மு.க. வந்திருக் கிறது. இதற்கு முன்பு பெருந் தலைவர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ், அடுத்து பக்தவத் சலம் தலைமையிலே காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி யிருக்கிறது. இந்த ஆட்சிகள் மாறிய பிறகு, எங்கள் இஷ்டத்திற்குத்தான் ஆட்சியை நடத்துவோம் என்று, எங்களுக்கு முன்பாக ஆட்சியிலே இருந்தவர்கள் செய்த காரியங்களையெல்லாம் எதையும் நாங்கள் புறக்கணித்து, அவைகளையெல்லாம் அழித்து ஒழித்து மக்களை மறக்கச் செய்து, அந்தப் பணிகளையெல் லாம் கேவலப் படுத்தியது கிடையாது. ஒரு ஆட்சி போனால், அந்த ஆட்சி செய்த நல்ல காரியங்களை யெல்லாம் தொடர்ந்து செய்வது அடுத்து வருகின்ற ஆட்சிக்கு அழகு. ஏன், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் சத்துணவுத் திட்டம் ஒன்றை நடத்தினார். நான் ஆட்சிக்கு வந்தவுடன், இது எம்.ஜி.ஆர். தொடங்கிய திட்டம் ஆயிற்றே, அந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதா, தொடர்ந்து நடத்துவதா என்று எண்ணவில்லை. அதை மேலும் வளர்க்க வேண்டும், விரிவு படுத்த வேண்டுமென்று சத்துணவுத் திட்டத்திலே முட்டையும் வழங்குவோம் என்று முட்டையும் கொடுத்து, வாரத்திற்கு ஐந்து முட்டை என்று மாணவர்களுக்குக் கொடுத்து, சத்துணவு என்றால், அது உண்மையிலேயே சத்துண வாக இருக்க வேண்டுமென்ற வகையிலே அந்தத் திட்டத்தை விரிவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. கழக ஆட்சியில் உருவாக்கிய நல்ல திட்டங்களை மூடுவதே ஜெயலலிதாவின் திட்டம்! அதைப் போல போக்குவரத்துக்கு ஒரு ஆட்சி சாலைகளை அமைத்தால், அடுத்து வருகின்ற ஆட்சி அந்தச் சாலைகளை விரிவுபடுத்தி, அகலப்படுத்தி மேலும் அதை அழகுபடுத்தும் அந்தப் பணியிலே தான் ஈடுபட வேண்டும். ஆனால் இந்த அம்மையாருடைய ஆட்சியில் நமக்கு முன்பிருந்த ஆட்சி என்னென்ன செய்ததோ, அவைகளை எல்லாம், அந்தத் திட்டங் களையெல்லாம் மூடுவதுதான் முதல் வேலை என்று, திட்டமிட்டு, தீர்மானித்து அதைச் செய்து கொண் டிருக்கிறார் ஜெயலலிதா என்பதை எண்ணும் போது எனக்கு மிக மிகக் கவலை. அண்ணா அவர்கள் கொண்டு வந்த திட்டம் இருமொழித் திட்டம். அந்தத் திட்டத்தில் ஆங்கிலம் அறவே புறக்கணிக்கப்படாமல், தமிழும் சிறப்பான இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அண்ணா அவர்கள் இருமொழித் திட்டத்தை அன்றைக்கு நடைமுறைப்படுத்தினார். அந்த இருமொழித் திட்டம் வந்த பிறகு, இந்திக்கு அங்கே வேலையில்லை. அண்ணா அவர்கள் அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத் தியது மாத்திரமல்ல, அண்ணா அவர்களுடைய காலத்திலேதான், திராவிட முன்னேற்றக் கழக அரசு, எதிர் காலத்திலே மாணவர்களுக்கு விகிதாச்சாரத்திலே இன்னின்ன அளவுக்குப் பங்கு தர வேண்டும் என்ற அந்த நடைமுறைகளையெல்லாம் அண்ணா அவர்கள் சட்டப் பேரவையிலே எடுத்துரைத்து, நம்முடைய போதாத காலம், அவர்கள் மறைந்து விட்ட பிறகு, அவர் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தாரோ, அவைகளையெல்லாம் தொடர்ந்து நிறைவேற்றுகின்ற அந்தப் பணியிலே நாம் நம்மை ஈடுபடுத்திக்கொண்டோம். அப்படி ஈடுபடுத்திக் கொண்டதுதான், இட ஒதுக்கீடு. இருபது சதவிகித இட ஒதுக்கீடு என்றி ருந்தால், அதை முப்பது சதவிகித மாக ஆக்கினோம். வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் இடம் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு தனி இட ஒதுக்கீடு இல்லை என்றால், அவர்களுக்கு தனியாக இருபது சதவிகிதம் என்று ஒதுக்கி, அதிலே வன்னியப் பெருமக்கள் அதிகமாக இடம் பெற்றதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி யிலேதான். ஜெயலலிதா போன்ற தீய சக்தி வளரலாமா? ஆதரவு தரலாமா? எதற்காக இவைகளையெல்லாம் சொல்லுகிறேன் என்றால், ஒரு ஆட்சி விட்டு விட்டுப் போகின்ற பணிகளை, அடுத்து வருகின்ற ஆட்சி அந்தப் பணிகளை எல்லாம் தொடர் பணிகளாக ஆக்கி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமே அல்லாமல், மக்களுக்குச் செய்யப்பட்ட பணிகளையெல்லாம் தன்னுடைய ஆட்சிக் காலத்திலே அழித்து விட வேண்டுமென்று எண்ணினால், அவர்களைப் போன்ற தீய சக்திகள் யாரும் இருக்க முடியாது. அந்தத் தீய சக்தியின் பட்டியலிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதா, நம்மைப் பார்த்து தீய சக்தி என்று சொல்கிறார். ஜெயலலிதா போன்ற அந்தத் தீய சக்திகள் வளரலாமா, அந்தத் தீயசக்திகளுக்கு நாம் ஆதரவு தரலாமா, ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க லாமா என்பதை எண்ணிப் பார்த்து நீங்கள் உங்களு டைய ஆற்றலை, அறிவை, உங்களுடைய விருப்பத்தை எதிர்காலத்திலே, தமிழன் வாழ, தமிழ்நாடு செழிக்க, திராவிடம் மலர்ந்திட, மலர்ந்த திராவிடத்தில் பகுத்தறிவு மணம் கமழ்ந்திட, இருந்திட நீங்கள் உங்களுடைய தொடர்பணிகளை ஆற்றிட வேண்டும். இன்றைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மாத்திரமல்ல, இந்த வரவேற்புக்குப் பின்னால் மறைந்திருக்கின்ற எழுச்சி, அந்த எழுச்சி எதிர்காலத்திலே, தமிழகத்தில் நடைபெறுகின்ற செயல்களிலே மாத்திரமல்ல, திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சியிலும் அவைகள் எல்லாம் இடம் பெற வேண்டும், அப்படி இடம் பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எனவே இன்றைக்கு நீங்கள் அளித்த வரவேற்பும், நீங்கள் காட்டுகின்ற இந்த ஆதரவும், தமிழ்நாட்டிலே, சென் னையிலே ஒரு இடத்திலே மாத்திரமல்ல, தமிழகம் முழுவதும் இன்றைக்குப் பூத்துக் குலுங்கு கின்ற அளவுக்கு, அத்தகைய எழுச்சியை நாம் உருவாக்கி யிருக்கிறோம், அதற்கு நடந்து முடிந்த கழகத்தின் பொதுக் குழு ஒரு காரணம் என்பதால், அந்தப் பொதுக்குழுவின் தீர்மானங்களை எடுத்து விளக்கும் கூட்டத்திலே உங்களையெல்லாம் சந்திக்கும் நல்ல வாய்ப்பினை நான் பெற்றமைக்காக, இந்த வாய்ப்பை அளித்த தென்சென்னை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து இந்த அளவில் விடைபெற்றுக் கொள்கிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.

No comments:
Post a Comment