வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



23/12/2013


மோடி அலை ஒரு பிரமை!- தி.மு.க எம்.பி 

டி.ஆர்.பாலு!


சென்னை: நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஏதோ ஒரு அலை இருக்கிறது என்பது போன்ற பிரமை உருவாக்கப்படுகிறது என்று தி.மு.கவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி கூறியுள்ளார். நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் ஆதரவைக் கேட்கும்போது  இது பற்றி ஏன் திமுக யோசிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் கேட்டிருப்பது குறித்து,பதிலளித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ” இதில் முரண்பாடு ஒன்றும் இல்லை, காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும்  திமுக தொண்டர்களின் உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். எனவே, காங்கிரஸ் சட்டமன்றஉறுப்பினர்களின் ஆதரவைக் கோர திமுகவுக்கு உரிமை இருந்தது”, என்றார்.இதே போல உரிமை காங்கிரஸுக்கும் இருந்திருக்கும், ஆனால் அவர்கள் ராஜ்ய சபாதேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் கூறினார்.
பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலுக்குப் பிறகு ஆட்சிஅமைக்க திமுக ஆதரவளிக்குமா என்று கேட்டதற்கு பதிலளித்த பாலு, இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதிதான் பொதுக்குழுவின் ஆலோசனையுடன் முடிவுசெய்வார், இப்போது இது போன்ற ஊகங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.
மேலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஏதோ ஒரு அலை இருக்கிறது என்பது போன்ற பிரமை உருவாக்கப்படுகிறது என்று கூறிய பாலு, உண்மையில் பாஜகவால், தற்போது நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட அதிகம் பெற முடியாது என்றார்.பாஜகவின் மிகப் பிரபலமான தலைவர் வாஜ்பாய் அவர்களாலேயே தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்ற போது, மோடியால் அந்த அளவுக்குக் கூட வெற்றியைப் பெறமுடியாது என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், திமுகவுக்கென்று சுமார் 23 சதவீத வாக்குகளே இருக்கும் நிலையில், இந்த வாக்குகளை மட்டும்வைத்து திமுக தனியாக எப்படி நிற்க முடியும் என்று கேட்ட்தற்கு,திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி இல்லாத்தால் ஏற்படும் இழப்பைவிட, அதிமுகவுக்கு தேமுதிக கூட்டணி இல்லாததால் ஏற்படும் இழப்பு அதிகம் என்றார். மேலும் திமுக தொண்டர்கள் திமுக தனித்துப் போட்டியிடும்போதுகாட்டும் உற்சாகமே தனி, இது திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.

No comments:

Post a Comment


Labels