ஏற்காடு தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி என்பது தோல்விக்குச் சமமானது! கி.வீரமணி அறிக்கை!
நடந்து முடிந்த ஏற்காடு தேர்தல் முடிவினை மய்யப்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி என்பது தோல்விக்குச் சமமானது என்று கூறி, அதே நேரத்தில் ஆளும் கட்சியின் அத்துமீறல்களையும் கடந்து தி.மு.க. பெற்ற கணிசமான வாக்குகள் பாராட்டத்தக்கவை; தோல்வி என்பது புதிய அனுபவம் என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் கருத்தை உள்வாங்கி தி.மு.க. தமது இலட்சிய பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்;
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்; நேரடியான போட்டியால் ஆளுங் கட்சி பண பலம், அதிகார பலம், பல்வேறு வகை அதிகார அத்துமீறல்கள், பொய் வழக்குகள் - இவைகளையெல்லாம் எதிர்கொண்டு தி.மு.க. கணிசமான அளவில் வாக்குகளைப் பெற்றிருக்கிறது!
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்த பல அறிக்கைகளில் அவ்வப்போது நடைபெற்ற சட்டமீறல்கள், அராஜக நிகழ்வுகள் பற்றியும் அறிக்கைகள் தந்து வந்தார்; இறுதியில் தேர்தல் முடிவு இப்படி வந்ததற்கான காரணங்களையும்கூறி, விளக்கியிருந்தார்கள்.
பாராட்டிப் போற்றத்தக்க வெற்றியா?
மனசாட்சியோடும், நடுநிலை உணர்வோடும் இந்த முடிவை நோக்கும் எவருக்கும் ஆளுங் கட்சியின் இந்த வெற்றி உண்மையிலேயே பாராட்டிப் போற்றத்தக்க வெற்றியா என்பது புரியும்.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. Pyrrhic Victory என்று இதற்குப் பொருள்; ‘பெருமைப்பட முடியாத வெற்றி அல்லது தோல்விக்குச் சமமான வெற்றி’ என்பதே!
தி.மு.க.வின் துணிச்சல்
நாம் விடுத்த முந்தைய அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளோம்; போட்டி சம போட்டி அல்ல; என்றாலும் மற்ற கட்சிகள் அஞ்சி தயங்கி பின்வாங்கிய நிலையில், தி.மு.க. துணிந்து களத்தில் இறங்கி, எதிர்நீச்சல் அடிப்பதுபோல் தேனீக்களாகி அத்தொகுதியில் பணியாற்ற முன்வந்ததன்மூலம் அதற்குள்ள உறுதியை உலகத்திற்கு அறிவித்தது!
எந்த வசதி வாய்ப்புகள் கூடுதலாக ஆளுங் கட்சிக்கு இருந்தது என்பதை நாம் பட்டியலிடத் தேவையில்லை. உலகறிந்த உண்மைகள் அவை!
எந்த வசதி வாய்ப்புகள் கூடுதலாக ஆளுங் கட்சிக்கு இருந்தது என்பதை நாம் பட்டியலிடத் தேவையில்லை. உலகறிந்த உண்மைகள் அவை!
அவையெல்லாம் மீறிய நிலையில்,
வாக்கு இந்தளவு திமுக பெற்றது என்றால் அது எளிதானதல்ல.
தி.மு.க. பொருளாளர் தளபதி அவர்கள், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப, மிகக் கடுமையாக உழைத்தார்; கழகப் பொறுப்பாளர்களும் உழைக்க, நல்லதோர் பயிற்சியைத் தந்து ஒரு முன்னோட்டத்தை தந்தார்!
தி.மு.க. பொருளாளர் தளபதி அவர்கள், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப, மிகக் கடுமையாக உழைத்தார்; கழகப் பொறுப்பாளர்களும் உழைக்க, நல்லதோர் பயிற்சியைத் தந்து ஒரு முன்னோட்டத்தை தந்தார்!
2014 மக்களவைத் தேர்தலில்
உண்மையான எதிர்க்கட்சி தமிழ்நாட்டில் தி.மு.க. தான் என்று உலகத்திற்கே நிரூபித்துக் காட்டப்பட்டுவிட்டது.
இன்னும் 5 மாதங்களில் வருகின்ற 2014 மக்களவைத் தேர்தலுக்கு, பொதுத் தேர்தலுக்கு இது ஓர் ஒத்திகை - அவ்வளவே!
என்னதான் பணபலம், அதிகார பலத்தை ஆளும் அணி நம்பினாலும், பொதுத் தேர்தலில் பல கட்சி அணிகள் போட்டியிட இருக்கும் நிலையில், தி.மு.க. தனித்து நின்றாலும் தன்னுடைய உறுதியான நிலையில் தோழமைக் கட்சிகளோடு நின்று வென்று காட்டும் என்பது உறுதி.
அதன் வெள்ளி முளைத்த விடியல் துவங்கி விட்டது; தேவையற்ற சுமைகளையோ, அல்லது 2016இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் நிலைத்த வெற்றியைப் பெற தடையான பழிகள் சூழாமலும் ‘‘தம்பிஉடையான் படைக்கஞ்சான்’’ என்பதாலும், கட்டுப்பாடு காத்தால் வெற்றிதானே வந்து கதவைத் தட்டும் என்ற இயல்பான வரலாற்றாலும் வாகை சூடிடுவது உறுதி! உறுதி!!
அதனால் வெற்றி பெற்றவர்களை முந்திக் கொண்டு, மக்களுக்கு நன்றியறிவிப்பை வேட்பாளர் மாறன் தொடங்கி, 17ஆம் தேதி தளபதியும் கலந்து கொண்டு நன்றி கூறும் எடுத்துக்காட்டான ஏற்பாடு!
தி.மு.க. தோழர்கள் சோர்வோ, களைப்போ கொள்ளத் தேவையில்லை.
தி.மு.க. தோழர்கள் சோர்வோ, களைப்போ கொள்ளத் தேவையில்லை.
தோல்வியல்ல - புதிய அனுபவம்
‘தோல்வி அல்ல; ஒரு புதிய அனுபவம்’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் கூறுவார். அதை தி.மு.க. தோழர்கள் நினைவுபடுத்திக் கொண்டு தங்களது லட்சியப் பயணத்தை, கட்டுப்பாடு காத்து வேக நடை போட்டால் வெற்றி புரியை எளிதில் அடையலாம்.
No comments:
Post a Comment