சேலம் மாவட்ட ஆட்சியர் அதிமுக மாவட்டச் செயலாளர்போல் செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சேலம் மாவட்ட ஆட்சியர் அதிமுக மாவட்டச் செயலாளர்போல் செயல்படுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஏற்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தேர்தல் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கக் கூடிய சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஒரு அதிமுக மாவட்டச் செயலாளர் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் பொறுப்பாளரான மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் பற்றி தமிழக தேர்தல் அதிகாரியிடமும், டெல்-யில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திலும் திமுக சார்பில் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முறையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் ஜனநாயக முறைப்படி ஏற்காடு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்றார்.

No comments:
Post a Comment