வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



10/11/2013


திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு அதிகளவில் ஊக்கமளித்தோம்: கலைஞர்

திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு அதிகளவில் ஊக்கமளித்ததாக அக்கட்சியின் தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக செஸ் போட்டியைத் தொடங்கி வைத்து, விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். திமுக ஆட்சியிலும் விளையாட்டு மேம்பாட்டுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டது. 2007-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இரண்டாம் முறையாக உலக சாம்பியன் பட்டம் வெற்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.25 லட்சம் வழங்கி பெருமைப் படுத்தினேன்.
மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 5-ஆம் முறையாக உலக சாம்பியன் பெற்றபோது, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் விஸ்வநாதன் ஆனந்துக்கு 2001-ஆம் ஆண்டு பாராட்டு விழாவும் நடத்தினேன். தெற்காசிய விளையாட்டு நகரில் ரூ.40 லட்சம் மதிப்பிலான ஏ வகை குடியிருப்பையும் வழங்கினேன்.
செஸ் விளையாட்டுப் போட்டிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் விளையாட்டு கலையை வளர்க்க மிகுந்த அக்கறையோடு பல்வேறு பணிகளை நிறைவேற்றினோம். கிராமப்புற இளைஞர்களிடம் புதைந்து கிடக்கும் விளையாட்டுத் திறன்களை ஊக்குவித்து வளர்க்கும் நோக்கத்துடன் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள 12,618 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதி அனுமதிக்கப்பட்டது. அதன் மூலம் கிராமங்களில் சமுதாய விளையாட்டு மையங்களை ஏற்படுத்தி, விளையாட்டு கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தோம். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels