கேள்வி :- தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்
செயலகத்தையும், சட்டப்பேரவை யையும் கட்டி முடித்ததோடு, அந்த அலுவலகத் திற்குப் பக்கத்திலேயே,
அதே வளாகத்தில் தலைமைச் செயலகத்தின் வேறுபல அலுவல கங்கள் இயங்கிட, மற்றொரு
கட்டிடத்தை எழுப்பினீர்களே, அந்தக் கட்டிடம் முடிவடைந்து விட்டதா?
பதில் :- தமிழகத் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில்
கடந்த 56 ஆண்டுக் காலமாக இயங்கி வருகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை மிகவும்
பழமை வாய்ந்ததாக இருந்ததாலும் இட நெருக்கடி இருந்ததாலும், வேறு இடங்களில் அ.தி.மு.க. ஆட்சியில்
முயற்சிகளை மேற்கொண்டு, பூஜை புனருத்தாரணங்கள் எல்லாம் செய்து அதன் பிறகு அந்த இடங்களில்
தலைமைச் செயலகமே கட்டப்படாமல் விடப்பட்ட நிலையில், தி.மு. கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு
தலைமைச் செயலகத்திற்காக புதிய கட்டிடம் கட்டப்படுமென்று நான் அறிவித்தேன். 450 கோடி ரூபாயில் புதிய
தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு மார்ச் திங்களில் பிரதமர் மன்மோகன் சிங்,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை அழைத்து என் முன்னிலையில் திறப்பு விழாவும்
நடைபெற்று, அங்கே தலைமைச் செயலகமும், சட்டப்பேரவைக் கூட்டமும் நடைபெற்றன. ஆனால் 2011ஆம்
ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தாமல், மீண்டும் புனித
ஜார்ஜ் கோட்டை யிலேயே சட்டப்பேரவையையும், தலைமைச் செயலகத் தையும் ஜெயலலிதா இயங்கச் செய்தார்.
புதிய தலைமைச் செயலகத்தினை பல்நோக்கு மருத்துவமனை யாக மாற்றப் போவதாகவும் ஜெயலலிதா
அறிவித்தார்.
ஓர் ஆட்சியில் பல கோடி ரூபாய்ச் செலவில் மிக நேர்த்தியான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அங்கே ஒரு சில
மாதங்கள் பணிகளும் நடைபெற்ற பிறகு, அந்த அலுவலகத்தை மாற்றுவது என்பது எப்படிப்பட்ட எதிர்மறைச்
செயல் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். அந்தக் கட்டிடத்திற்கு அருகிலேயே மற்றொரு பெரிய
கட்டிடம், """"பி பிளாக்"" என்ற பெயரில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 900 சதுர அடிப் பரப்பில், ஏழு மாடிகள் கொண்ட
நான்கு கட்டிடங்களாகக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதனுடைய பணிகளும் கழக ஆட்சியிலேயே
2009ஆம் ஆண்டில் துவங்கின. இந்த """"பி. பிளாக்"" கட்டிடத்திற்கு கீழ்த்தளம் அமைக்கும் பணிக்காக தூண்கள்
எழுப்பப்பட்டன. சில இடங்களில் 10 அடி உயரமும், சில இடங்களில் சிமெண்ட் தூண்கள் அமைப்பதற்காகக் 3
கம்பிகளும் கட்டப்பட்டு விட்டன. ஆனால் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு """"பி. பிளாக்"" கட்டிடப்
பணிகள் அனைத்தும் அப்படியே கிடப்பிலே போடப்பட்டு விட்டன. இரண்டரை ஆண்டுக் காலமாக அந்தப்
பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால், கட்டிடத்தில் ஆங்காங்கே இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துக்
கிடக்கின்றன. இதுபோல ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கடந்த கால ஆட்சியினர் கட்டிய கட்டிடங்களைப்
பாதியிலே போட்டு விடும் கலாச்சாரம் தொடர்ந்தால் அது எந்த அளவிற்கு நிர்வாகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்
என்பதையும் நாட்டு மக்கள் கருதிப் பார்க்கவேண்டும். """"ஏ பிளாக்"" கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றப்
போவதாக அறிவித்த போதிலும், இரண்டரை ஆண்டுக் காலமாக என்ன பணிகள் நடக்கின்றன என்றும்
தெரியவில்லை. அவ்வளவு பெரிய கட்டிடமே இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவும்
நடைபெற்று விட்டது. அதிலே ஒரு சில மாற்றங்களை இந்த ஆட்சியினர் இரண்டரை ஆண்டுக் காலமாகச்
செய்து வருகிறார்களாம். """"என்னமோ நடக்குது இந்த ஆட்சியிலே"" என்றுதான் பாட வேண்டும்.

No comments:
Post a Comment