வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



18/11/2013

இஸ்லாமிய மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயராம் ரமேஷ் பேச்சால் காங்கிரஸ் அதிர்ச்சி
இஸ்லாமிய மக்களிடம் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதையடுத்து, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் வகுப்பு மோதலில் பெற்றோர்களை ப-க்கொடுத்த இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார். 
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது பேச்சுக்காக இஸ்லாமிய மக்களிடம் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். 
அமைச்சரின் பேச்சார் அதிர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, இது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை தொடர்பாளர் மீம் அப்சல் கூறியதாவது, ஜெய்ராம் ரமேஷ் என்ன சொல்-யிருந்தாலும் அது அவரன் சொந்த கருத்தே தவிர, கட்சியின் கருத்தல்ல என்றார்.
ஜெயராம் ரமேஷ் பேச்சு பற்றி பாஜகவின் மூத்த தலைவர் சித்தார்நாத் சிங், தனது பேச்சால் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளை ராகுல்காந்தி அவமதித்துவிட்டார். அந்தப் பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். ஆனால் ராகுல்காந்தி இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்பாரா அல்லது இவ்வாறு கூறியதற்காக, ஜெய்ராம் ரமேஷ்  ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். 
முன்னதாக, ராகுல்காந்தியின் பேச்சு நன்னடத்தை விதிகளை மீறியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. குற்றச்சாட்டை மறுத்து ராகுல்காந்தி அளித்த பதிலை பரிசீ-த்த தேர்தல் ஆணையம், பொதுக்கூட்டங்களில் பொறுப்புடன் பேச வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment


Labels