ஏற்காடு இடைத்தேர்தல்; தலைமைதேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார் மனுஏற்காடு இடைத்தேர்தல் சம்பந்தமாக தி.மு.க. சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து புகார்மனு அளித்தார். அதில்,ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் விதிகள் அனுமதிக்கும் வாகனஎண்ணிக்கைக்கு மாறாக 10–க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க வேட்பாளர் பி.சரோஜா ஆகியோர் ஏற்காடு ஒன்றியம் காக்கம்பாடி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.அரசு ஊழியர் ஒருவர் செய்துள்ள மிகமோசமான விதிமுறை மீறலாக 10–11–2013 அன்று காக்கம்பாடி கிராம ஆதாரப் பள்ளியின் சத்துணவுத் திட்ட அமைப்பாளரான லோகநாதன் என்பவர் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் அமைச்சர் பழனிசாமியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் ஆளுங்கட்சி தொடர்ந்து அவற்றைமீறி வருவதை எங்கள் கட்சித்தங்களிடம் புகாராக அளித்து வருகிறது.இவற்றிற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் லோகநாதன் போன்ற அரசு ஊழியர்களுக்கு ஆளுங்கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்ளஎந்த விதமான தார்மீக அச்சமும் ஏற்படாது.எனவே தாங்கள் நேரடியாகத் தலையிட்டுஉடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment