அதிமுகவினர் கொடுக்கும் காமாட்சி விளக்கை வாங்கிக்கொள்ளுங்கள்; மின் வெட்டின் போது உதவும்: மு.க ஸ்டாலின்
ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து இரண்டாம் நாளாக சனிக்கிழமை பிரச்சாரம் மேற்க்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள பேளூர் பகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்றிவரும் திமுக பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தேர்தல் பணியில் இன்னும் சிறப்புடன் பணியாற்ற ஆலோசனைகளை வழங்கினார்.
போகும் வழியில், உள்ள உடையாபட்டி, அயோத்தியாபட்டணம், ஜலகண்டாபுரம், கூட்டத்துப்பட்டி, நீர்மூழ்கிகுட்டை போன்ற ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அங்கே, இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் பணியாற்றிவரும் பொறுப்பாளர்களை சந்தித்துப்பேசி அவர்களை உற்ச்சாகப்படுத்தினார்.
அவர் பேசுகையில், வான்வழியாக வந்து ஒன்பது இடங்களில், மட்டும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்துவிட்டு போன, ஜெயலலிதாவுக்கு ஆயிரக்கணக்கான போலீசார் தரையில் நின்று பாதுகாப்பு பாதுகாப்பு கொடுத்தனர் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
இந்த தொகுதியில், உள்ள வாக்களர்களுக்கு அதிமுகவினர் வாக்களிக்க பணமும், காமாட்சி விளக்கும் கொடுப்பதாக எங்கள் கட்சிகாரர்கள் மூலம் தெரிந்துகொண்டேன், அவர்கள் கொடுக்கும் காமாட்சி விளக்கை நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த தொகுதியில், இப்போது தேர்தல் நடப்பதால், தடையில்லாமல் மின்சாரம் வந்துகொண்டுள்ளது. நான்காம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், கட்டாயம் மின்சாரம் வராது, இப்போது, தமிழகம் முழுவதிலும் உள்ளது போலவே ஏற்காடு தொகுதியில் உள்ளவர்களுக்கும் பத்து மணிநேரம் கட்டாய மின் தட்டுப்பாடு வரும். அப்போது, அதிமுகவினர் கொடுத்துள்ள காமாட்சி விளக்கு உங்கள் வீடுகளில் விளக்கேற்றுவதற்கு பயன்படும் என்று பேசினார்.
ஏற்காடு தொகுதியில், வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த பகுதியில், பா.ம.க தேர்தலில் போட்டியிடாத நிலையில், அந்த காட்சியின் வாக்குகளை கவரும் வகையில், தமிழகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியின்போது இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் வன்னியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 40,000 பேர் மீது, அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்ததுடன், போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50% மாக இருந்ததை பிரித்து, வன்னிய மக்களின் கோரிக்கையை ஏற்று, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக 20% இட ஒதுக்கீட்டை ஏற்ப்படுத்திக் கொடுத்தது திமுக ஆட்சிதான் என்பதை குறிப்பிட்டார்.
மேலும், இதனால் தான் அதிகளவில் வன்னியர்கள் நீதிபதிகள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசின் உயர் பதவிகளை அடைய முடிந்தது. தொடர்ந்து 1996-ம் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது, 40,000 வன்னியர்கள் மீதும் போடப்பட்டிருந்த வழக்கை இரத்து செய்தது. தவிர, அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 23 வன்னியர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டதுடன், அந்த குடும்பங்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, வன்னியர் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திமுக செயல்பட்டு வந்துள்ளதை மக்கள் உணர வேண்டும்.
நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும், திமுக தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்க படுபட்டுக்கொண்டுதான் இருக்கும் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படாமலும், விவசாயம் நசிந்து வருவதற்கும் மின் தட்டுப்படுதான் முக்கிய காரணம் என்று வெள்ளாளகுண்டம் பிரிவு, சிங்கிபுரம், திருமனூர், காரிப்பட்டி, சின்னகவுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசினார்.
No comments:
Post a Comment