வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



29/11/2013

பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகும் போதெல்லாம் தி.மு.க. ஆட்சியின் மீது குற்றம் சுமத்துகிறார் ஜெயலலிதா: கலைஞர்

அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்காலும், அக்கறையின்மையாலும் ஏற்படும் பிரச்சினைகள் முற்றி நெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகும் போதெல்லாம், திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடு, ஜெயலலிதா மத்திய அரசின் மீதோ அல்லது தி.மு.கழக ஆட்சியின் மீதோ குற்றம் சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று கலைஞர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் 28.11.2013 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம் “தமிழகத்தை இருளில்தள்ள டெல்லி சதி” என்று ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதோடு, முந்தைய தி.மு.க. அரசின் தொலை நோக்கின்மை, செயலின்மை என்றெல்லாம்உங்களையும் குறை கூறியிருக்கிறாரே?
கலைஞர் :- கடந்த 25-10-2013 அன்று சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு குறித்து, அந்தத் துறையின் அமைச்சருடைய கவனத்தை ஈர்த்து; கொண்டுவந்த தீர்மானத்திற்கு, முதல் அமைச்சர் ஜெயலலிதா நீண்ட விளக்கமளித்தார். அந்தப் பதிலுக்கு அ.தி.மு.க. ஆளுங்கட்சியின் நாளேடு குறிப்பிட்ட தலைப்பு “சொன்னதைச் செய்து சாதனை படைத்திடும் சத்தியத் தாய்! தமிழகம் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்மிகை மாநிலமாகத் திகழும்! பேரவையில் முதல்வர் அம்மா உறுதி” என்பதாகும். பெரும்பாலும் அனைத்து நாளேடுகளுமே “தமிழகம் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்மிகை மாநிலமாகத் திகழும்” என்பதைத்தான் தலைப்பாக வெளியிட்டிருந்தன.
ஜெயலலிதாவின் அந்த உரையில் தேவையில்லாமல், “முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூடிநகியது” என்று குற்றம் சுமத்திய காரணத்தால் - அதற்கு மறுநாளே, அம்மையாரின் குற்றச்சாட்டுகளுக்கு “அக்கறை யின்மை, தொலைநோக்கற்ற பார்வை; யாருக்கு?” என்ற தலைப்பில் “உடன்பிறப்பு மடலில்” - கழக ஆட்சியில் என்னென்ன மின் திட்டங்கள் தொடங்கப் பட்டன, அவற்றின் நிலை என்ன, எந்த அளவிற்கு தொலைநோக்கோடு, நிர்வாகத் திறமையோடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதையெல்லாம் சுமார் 2 பக்கங்களுக்கு விரிவாக எழுதியிருந்தேன்.
மேலும் குறிப்பாக என்னுடைய அந்தப் பதிலில், “அ.தி.மு.க. ஆட்சி 2011இல் தொடங்கி இரண்டரை ஆண்டுகளாகிறதே, இதுவரை எத்தனை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு பணி தொடங்கப்பட்டுள்ளது? 2011-2012ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில், வடசென்னை நிலை 3, வட சென்னை நிலை 4, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா நீரேற்று புனல் மின் நிலையத் திட்டங்கள் 28,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012ஆம் ஆண்டு பணி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தீர்களே? இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பணி தொடங்கப்பட்டுள்ளதா? கொள்கை விளக்கக் குறிப்பில்,  பக்கம் 12இல், 8000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களைத் தொடங்கப் போவதாக அறிவித்ததில், ஏதாவது ஒரு திட்டமாவது இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கிறதா? சொல்லத் தயாரா? சென்ற சட்டமன்றத் தொடரில் நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாடீநு மதிப்பீட்டில் 2000 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும் என்றாரே; அதற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? யாரை ஏமாற்ற இந்தத் திட்ட அறிவிப்புகள்?” என்றெல்லாம் கேட்டிருந்தேன். 
எந்தப் பதிலும் இல்லை.
தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழும் என்று முதலமைச்சர் 25-10-2013 அன்று அறிவித்த காரணத்தாலோ என்னவோ, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து, நாளேடுகள் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதியிருந்தன. அதையெல்லாம் தான் 25-11-2013 அன்று “கேள்வி-பதில்” பகுதியிலே குறிப்பிட்டு தமிடிநநாடு “மின் மிகை மாநிலமா? மின் பகை மாநிலமா?” என்று கேட்டிருந்தேன்.
நான் அவ்வாறு எழுதியதும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 26-11-2013 அன்று, முக்கிய அதிகாரிகளையெல்லாம் அழைத்துப் பேசி விட்டு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், “பெல்” நிர்வாகத்தின் கீடிந உள்ள என்.டி.பி.சி., போன்ற கூட்டுத் திட்டங்கள்யாவும் ஒரே நேரத்தில் இயல்பாகச் செயலிழந்துவிட்டன என்பதைத் தமிழக மக்களால் சுலபமாக நம்பமுடியவில்லை; மத்திய பொதுத் துறை நிறுவனங்களால்தான் தமிடிநநாட்டில் மின் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது என்பதால் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய அரசு சதி செய்துள்ளது என்ற முடிவுக்குத் தமிழக மக்கள் வரக்கூடும்” என்று, மத்திய அரசின் மீது ஒரு பெரிய சதிக் குற்றத்தைச் சுமத்தியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு, மாநில அரசின் சார்பில் முதல்வர் கடிதம் எழுதுவதைப் பற்றி நமக்கொன்றும் இல்லை. ஆனால் தேவையில்லாமல், கடந்த அக்டோபரில் பேரவையில் விளக்கம் அளித்த போது தி.மு. கழக ஆட்சியின் மீது சாட்டிய குற்றச்சாட்டையே, திரும்பவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும், “முந்தைய தி.மு.க. அரசின் தொலைநோக்கின்மை மற்றும் செயலின்மை காரணமாக மின்சார தேவைக்கும், அளிப்புக்கும் இடையே 4,000 மெகாவாட் பற்றாக்குறை காணப்பட்டது” (The State was experiencing a severe power crisis with a demand supply gap of about 4000 MW primarily due to the lack of foresight and inaction on the part of the previous DMK Government) என்று எழுதியிருக்கிறார். அக்டோபரில் முதலமைச்சர் இதே குற்றச்சாட்டினைப் பேரவையிலேயே கூறி, அதற்கு மறுநாளே நான் விரிவாகப் பதிலளித்த பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டினை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எழுதியிருக்கிறார் என்றால், அதற்கு என்ன பெயர் என்று சொல்வது?
அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்காலும், அக்கறையின்மையாலும் ஏற்படும் பிரச்சினைகள் முற்றி நெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகும் போதெல்லாம், திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடு, ஜெயலலிதா மத்திய அரசின் மீதோ அல்லது தி.மு.கழக ஆட்சியின் மீதோ குற்றம் சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்!

No comments:

Post a Comment


Labels