இன்று திண்டுக்கல் திணறிவிட்டது! திண்டுக்கல் திருவிழா நடந்து முடிந்தது. பல்லாயிரம் திமுக தொண்டர்கள் புடை சூழ ஒரு திறந்த ஜீப்... அதிலே பளீர் வெள்ளுடை, கருப்பு கண்ணாடி சகிதம் தளபதியார். அருகே கோவைப்பழ நிறத்தில் , அண்ணன் "ஐம்பத்தி அஞ்சாயிரம்" அவர்கள் மக்களை பார்த்து வணங்கிய படியே வர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என மாடிகள், வீட்டு கூறைகள் என நின்றபடி பதில் வணக்கம் சொல்ல... அதற்கு முன்பாக ஒரு ஸ்கார்ப்பியோ காரின் "எஸ் டி எஸ்"க்கு சொந்தமான இடத்தில் தொங்கி கொண்டு கழுத்தில் வெள்ளை பட்டையும் நீதிமன்ற கோட் சகிதம் ஒரு வக்கீல் தளபதி மீதி சிறு துரும்பும் விழுந்து விடக்கூடாது என தவிப்புடன் தொங்கி கொண்டு முகம் முழுக்க வியர்வையுடன், நெஞ்சம் முழுக்க படபடப்புடன்.... அவர் மாநில இளைஞர் அணி துணை செயலரும், வழக்கறிஞருமான திரு ஐ.பி.எஸ்(Jr) அவர்கள்!
நாடாளுமன்ற தேர்தல் தான் வந்து விட்டதோ என மக்கள் நினைக்கும் அளவு தளபதி ஏன் இன்று திண்டுக்கல் உலா என பார்ப்பின்... ஒன்றுமில்லை ஜெண்டில் மேன் ஒன்றுமில்லை. தளபதி மீது அவதூறு வழக்கு இன்று ட்ரையல்க்கு வந்தது. அதில் 'வா...ய்தா" எதும் கேட்காமல் வந்து ஆஜாராக வந்தார் தளபதி அவர்கள்.
இரு நாட்கள் முன்பாக தளபதியை வரவேற்று நீதிமன்ற வாசலில் வைக்கப்பட்ட பேனர்கள் அதிமுகவினரால் கிழிக்கப்பட்டு அராஜகம் நடந்து முடிந்தது. "நாங்கள் பிடிப்பது என்னவோ கொடிதான்.. அதை திருப்பி பிடிச்சா என்னான்னு எங்களுக்கும் தெரியும்" என பாலைவன ரோஜாக்கள் படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு வசனம் எழுதி இருப்பார். நேற்று எங்கள் திண்டுக்கல் திமுக தோழர்கள் திருப்பிப் பிடித்தனர். அதன் காரணமாக பயந்து போன அதிமுகவினர் இன்று கூலிக்கு ஆள் வைத்து கொண்டனர். ஆம்...போலீசார், தளபதி நீதிமன்றத்தின் உள்ளே இருக்கும் போது வெளியே திமுக தொண்டர்கள் மீது "பலப்பிரயோகம்" செய்தனர். இதற்கெல்லாம் அஞ்சும் காக்கா கூட்டம் இல்லை அது. எதற்குமே அஞ்சாத, அஞ்சுகத்தாய் பெற்ற 'முக' கூட்டம் இது!
அட மானம் கெட்ட அதிமுகவினரே! "தில்" இருந்தா எங்கள் தளபதி போல வாய்தா வாங்காமல் உங்கள் தலைவியை முதலில் நீதிமன்றம் செல்ல அறிவுருத்தும் தைரியம் உள்ளதா உங்களிடம்? இன்று நீதிமன்றம் சென்று விட்டு வெளியே வந்த தளபதி பேட்டி கொடுக்கின்றார் ஊடகங்களுக்கு... "நான் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள இங்கே வந்துள்ளேன். நான் எனக்கு எதிராக வாதாட குறிப்பிட்ட அரசு வக்கீல் தான் வேண்டும் என கேட்க மாட்டேன். குறிப்பிட்ட நீதிபதி தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என கெஞ்சப்போவதில்லை. சட்டப்படி என் வழக்கை எதிர்கொள்வேன்" என சொன்னாரே... இதை விட வேறு என்ன செருப்படி
வேண்டும் உங்களுக்கும் உங்கள் தலைவிக்கும்???????
நன்றி: அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

No comments:
Post a Comment