வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



22/11/2013

தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி பதில்கள்:


சென்னை: ஒரு லோடு மணல் விலை ரூ. 40 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளன என்று தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி பதில்கள்:

ஒரு லோடு மணல் விலை ரூ 40 ஆயிரமாக உயர்ந்திருக்கிறதாமே?தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குவாரிகளில் இருந்து மணல் அள்ளுவ தற்காக வந்த ஒப்பந்ததாரர்களால் முறைகேடுகள் அதிகரித்ததாக புகார்கள் வந்தன. இது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றம் எடுத்தநடவடிக்கை விளைவாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக் டர் மற்றும் சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். புதிய கலெக்டர், மாவட்டத்தில் மணல் குவாரிகளையும் மூடுவதற்கு ஆணை பிறப்பித்தார். மற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களும், தங்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணியோ என்னவோ, அனுமதி காலம் முடிந்த நிலையில் இருந்த அனைத்து மணல் குவாரிகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள 90 குவாரிகளில் 70க்கும் மேற்பட்டவை மூடப்பட்டு விட்டன. 

எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று மாவட்டங்களில் மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைக்காமல், 6 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் விலை ரூ. 40 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட சம்பவத்தையொட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நெடுமாறன் உட்பட சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று டெசோ சார்பில்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையே? டெசோ சார்பில் நாங்கள் அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால், சிறையில் இருந்து நாங்கள் வெளியே வர மாட்டோம் என்று நெடுமாறன் அறிக்கை விட்டிருப்பார். அதனால்தான் நாங்கள் அறிக்கை விடவில்லை.ஏனென்றால், முள்ளிவாய்க்கால் முற்ற திறப்பு நிகழ்ச்சிக்கு கலைஞருக்கு அழைப்பு அனுப்பப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட நேரத்தில், ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என்று பதிலளித்தவர் பழ.நெடுமாறன். நல்லவேளையாக நீதிமன்றம் அவர்களுக்கு இன்று ஜாமீன் வழங்கிவிட்டது. மேலும் கொஞ்ச காலமாக அதிமுக ஆட்சியை நெடுமாறன் பாராட்டிக் கொண்டுதான் வந்தார். ஆனால் திடீரென்று முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் அளித்த பேட்டியில், நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்தின் முன்னாலும் முறையிட்டு இந்த அரசின் முகமூடியைக் கிழித்து எறிவோம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் போடு வது, அறிக்கைகள் வெளியிடுவது என்பது போன்ற நாடகங்களில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆனால் அவரு டைய வன்நெஞ்சம் என்ன என்பதை இந்த இடிப்பு, தகர்ப்பு வேலை நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்திற்குள் சிறப்பு யாகம் செய்யப்பட்ட நிகழ்ச்சி புகைப்படத்தோடு ஏடுகளில் வெளிவந்திருக்கிறதே? மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் மாத்திரமல்ல தமிழகம் முழுவதிலுமே ஏராளமான கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தலைமைச் செயலகத்திற்குள்ளேயே சிறப்பான யாகம் நடத்தலாம். இப்போது முதல்வர், நிகழ்ச்சிகளில் உரையாற்றும் போது அண்ணா நாமம் வாழ்க என்றும், எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க என்றும் சொல்கிறார் அல்லவா இனிமேல் பெரியார் நாமம் வாழ்க என்றும் சேர்த்துக் கொள்ளலாம். காவல் நிலையத்தை யாகசாலையாக மாற்றிய காவல் துறையினருக்கும் ரொக்கப் பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கலாம். தமிழர்களே, இதற்காகத்தானே அதிமுகவுக்கு வாக்களித்தீர்கள். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels