ஏற்காடில் மு.க. ஸ்டாலின் 4 நாள் தேர்தல் பிரசாரம்
ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் மாறன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா உள்பட 11 பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.
மாறனுக்கு ஆதரவாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 29ம் தேதி முதல் டிசம்பர் 2 வரையில் அவர் பிரசாரம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி மாலை மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை கங்கன்காலனியில் இருந்து தொடங்குகிறார்
No comments:
Post a Comment