நிமிர்ந்து நில்லுங்கள் உடன்பிறப்புகளே...! தேர்தல் அலுவலகம் திறந்த துரைமுருகன் கர்ஜனை!
சேலம் அயோத்தியாப்பட்டினத்தில் தி.மு.க ஏற்காடு தேர்தல் அலுவலகம் துரைமுருகனால் திறக்கப்பட்டது. எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி உட்பட முக்கியமானவர்களும், 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க இதில் பேசிய துரைமுருகன்,
"அவர்களிடம் பண பலம், அதிகாரபலம் இருப்பதைக்கண்டு யாரும் அஞ்சவேண்டாம். நம்மிடம் உழைப்பு உள்ளது. இது அண்ணன் வீரபாண்டியார் மாவட்டம். அவர் மீதான உங்கள் உணர்ச்சிகள் எனக்கு தெரியும். அவர் ஊட்டிய வீரத்தை ஏற்காடு வெற்றிக்காக செலுத்த வேண்டும். அதிகாலையிலே பிரசாரத்துக்கு செல்லுங்கள். அவர்களோடு ஒருவராக பேசுங்கள். இந்த ஆட்சியின் பிரச்சனைகளை விளக்குங்கள். நிமிர்ந்து நில்லுங்கள் வெற்றி நமக்கே' என்றார்.
எ.வ.வேலுவோ, 'சட்டமன்றத்திற்கு செல்ல எங்களுக்கு துணையாக வாருங்கள் தம்பி மாறா' என்றவர் தொடர்ந்து 'அங்குள்ள ஒவ்வொரு மந்திரிகளும் எங்களின் ஒரு கிளை கழக செயலாளர்க்கு கூட சமமில்லாதவர். செயல்வீரர்கள் இங்குண்டு. எனவே வெற்றி நமதே' என்றார்.
பங்கேற்ற அனைவரும் 'இது தளபதியின் தேர்தல். தளபதி மடியில் ஏற்காடு வெற்றிக்கனியை நாம் பரிசாக்குவோம்' என்றனர்.

டி.எம்.செல்வகணபதி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், வீரபாண்டி ராஜா மற்றும் உள்ளூர் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment