தொழிலாளர்கள் ஊதிய உயர்வு;இன்னுமா கேள்விக்குறி!
கலைஞர் கடிதம்
கலைஞர் கடிதம்
திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம்:
’’உடன்பிறப்பே,போக்குவரத்துக் கழகங்களிலே பணி யாற்றும் அலுவலர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வராததைத் தொடர்ந்து, மின்வாரியத்தில் ஊதிய உயர்வு என்ன நிலைமை என்பதைப் பற்றியும் விளக்குகிறேன். மின்வாரியத்தில் மின்வெட்டு எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பது குறித்து கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பத்திரிகைகள் எல்லாம் எழுதி வருகின்றன. ஆளுங்கட்சி யின் ஆதரவு ஏடுகள் அதனை மறைக்க முயற்சித்த போதிலும், பத்திரிகாதர்மம் போற்றும் ஒருசில நாளேடுகள் மின்வெட்டு நிலை குறித்து வெளிப்படையாகவே எழுதித்தான் வருகின்றன.
போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படுவதைப் போல, மின்வாரியத் தொழிலாளர்களுக்கு நான்காண்டுகளுக்குஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். மின்வாரிய தொ.மு.ச. பொதுச் செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி இதற்காக ஓர் அறிக்கையே இரண்டு நாட்களுக்கு முன்புவிடுத்திருந்தார். ஆனால் அ.தி.மு. க. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்ட தாகத்தெரியவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதிய உயர்வு என்பதே முதன் முதலில் 1969ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் வழங்கப்பட்டது. மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர்களை 25-5-1970 அன்று முதல்வராக இருந்த நானே அழைத்துப் பேசினேன். அதற்கு பிறகுதான் 27-5-1970 அன்று முதல் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் போடப்பட்டு, ஊதிய உயர்வு 1-12-1969 முதல் வழங்கப்பட்டது.
இரண்டாவது ஊதிய உயர்வு ஒப்பந்த நாள் 18-2-1977. நெருக்கடி கால நிலையில் அந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஊதிய உயர்வு 1-12-1975 முதல் வழங்கப்பட்டது. மூன்றாவது ஊதிய உயர்வும்,நான்காவது ஊதிய உயர்வும் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்டது. ஐந்தாவது ஊதிய உயர்வும், ஏழாவது ஊதிய உயர்வும், நான் முதலமைச்சராக இருந்த போது போடப்பட்டது.
ஏழாவது ஊதிய உயர்வு 1-12-1996 முதல் வழங்கப்பட்டது. ஒப்பந்த நாள் 8-7-1998. அப்போது 40 சதவிகிதம் ஊதிய உயர்வு தரப்பட்டது. மேலும் 1-12-1996 அன்று 7 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வும் வழங்கப்பட்டது. அதுபோலவே 17 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுயர்வும், 27 ஆண்டுகள் முடித்தவர் களுக்கு மூன்று ஆண்டுயர்வும்,37 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு நான்கு ஆண்டுயர்வும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
ஏழாவது ஊதிய உயர்வு 1-12-1996 முதல் வழங்கப்பட்டது. ஒப்பந்த நாள் 8-7-1998. அப்போது 40 சதவிகிதம் ஊதிய உயர்வு தரப்பட்டது. மேலும் 1-12-1996 அன்று 7 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வும் வழங்கப்பட்டது. அதுபோலவே 17 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுயர்வும், 27 ஆண்டுகள் முடித்தவர் களுக்கு மூன்று ஆண்டுயர்வும்,37 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு நான்கு ஆண்டுயர்வும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
எட்டாவது ஊதிய உயர்வு அ.தி.மு.க. ஆட்சியில் 1-12-2000 முதல் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 24 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. 15-10-2005 அன்றுதான் ஒப்பந்த நாள். தலா மாதம் 100 ரூபாய் வீதம் 24 மாதங்களுக்கு 2400 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது.
ஒன்பதாவது ஊதிய உயர்வுதான் தி.மு. கழக ஆட்சியில் 1-12-2007 முதல் வழங்கப்பட்டது. ஒப்பந்த காலம் நான்காண்டுகள். ஊதிய உயர்வு ஏற்கனவே கழக ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போலவே 40 சதவிகிதம் வழங்கப்பட்டது. 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுயர்வு. அந்த ஒப்பந்தம் 2011ஆம் ஆண்டோடு முடிவடைந்த பிறகு, இரண்டாண்டுகளாகிவிட்டது.
மின்வாரியத்தில் பணியாற்றும் இந்த 80 ஆயிரம் பேருக்கும் 1-12-2011 முதல் மின் வாரியம் புதிய ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும்.
மின்வாரியத்தில் பணியாற்றும் இந்த 80 ஆயிரம் பேருக்கும் 1-12-2011 முதல் மின் வாரியம் புதிய ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும்.
14-11-2013 அன்று காலை 11 மணி அளவில் அனைத்துத் தொழிற் சங்கங்களையும் மின்வாரி யத்தின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழைத்துப் பேசினர். அப்போது வாரியம், பணிச்சுமையினை தற்சமயம் 40 சதவிகித உயர்விலிருந்து 20 சதவிகிதமாகக் குறைத்துவிட்டது என்றும், மேலும் 1-12-2011 முதல் மின்வாரி யத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வாக அடிப்படைச் சம்பளத்தில் அனைவருக்கும் 5 சதவிகித உயர்வினை வழங்குவதுடன், யாரெல்லாம் 30-11-2011 அன்று 15 ஆண்டுப் பணியினை முடித்துள்ளார்களோ, அவர்களுக்கு ஓராண்டு உயர்வாக 3 சதவிகித உயர்வும் வழங்கப்படுமென்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கு மின்கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், மற்றும் பண்டகச் சாலைப் பணியாளர் சங்கம், ஊர்தி ஓட்டுனர் சங்கம் என்று அனைத்துச் சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்து, “அதனை ஏற்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்கள். மேலும் கடைசியாக 2007ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபோது, நான் முதலமைச்சராக இருந்த நிலையில், 40 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டதையும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுயர்வு வழங்கப்பட்டதையும் எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள்.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என்றிருந்ததை தி.மு.கழக ஆட்சியில் தான் 1989ஆம் ஆண்டு நான்காண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டது. ஆனால், இதனை அ.தி.மு.க. ஆட்சியில் 1-12-2002 முதல் ஊதிய உயர்வாக 6 சதவிகிதம் அடிப்படைசம்பளத்தில் வழங்கப்பட்ட போது, ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள் என்று மீண்டும் உயர்த்தினார்கள்.
ஆனால் 2007ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் இந்த ஒப்பந்தக் காலம் நான்காண்டுகளுக்கு ஒருமுறை என்றும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதுமாத்திரமல்ல; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மின்சார வாரியத்தில்பணியாற்றும் ஏறத்தாழ 75,720 ஊழியர்களும், 68,518 ஓய்வூதிய தாரர்களும் பயன்பெறும் வகையில் 125 கோடி ரூபாய்ச் செலவில் 1.8.2006 முதல் 50 சதவீத அகவிலைப்படி; அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2007ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் இந்த ஒப்பந்தக் காலம் நான்காண்டுகளுக்கு ஒருமுறை என்றும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதுமாத்திரமல்ல; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மின்சார வாரியத்தில்பணியாற்றும் ஏறத்தாழ 75,720 ஊழியர்களும், 68,518 ஓய்வூதிய தாரர்களும் பயன்பெறும் வகையில் 125 கோடி ரூபாய்ச் செலவில் 1.8.2006 முதல் 50 சதவீத அகவிலைப்படி; அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
2-7-2007 அன்று தி.மு. கழக ஆட்சியில் மின்வாரியப் பொன்விழா சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் வாரியப் பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும்,ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்பஓய்வூதிய தாரர்களுக்கும் ஆக மொத்தம் 1,45,813 தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் மொத்தம் 14,58,13,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது.
இவ்வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசாக ஒரு ஊக்க ஊதிய உயர்வு 1.7.2007 முதல் வழங்கப்பட்டது.
இவ்வாரியத்தில் பணியாற்றும் 21,401 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், 5,646 பகுதி நேரத்தொழிலாளர் களுக்கும் ஆக மொத்தம் 27,047 தொழிலாளர்களுக்குத் தலா 500 ரூபாய் வீதம் 1,35,23,500 ரூபாய் ரொக்கப் பரிசாக அளிக்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலேதான். 2006-2007ஆம் ஆண்டிற்கு, தி.மு.க. ஆட்சியில் 66,066 மின்சார வாரிய ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை (போனஸ் - 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை11.67 சதவீதம்) பெற்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஏறத்தாழ 25,065 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கும் ரூ.1,000 கருணைத் தொகையாக வழங்கப்பட்டது.
இதனால் மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூபாய் 57.95 கோடி ஆகும். மேலும் 9,190 அலுவலர்களுக்கு ரூ.1,000 வீதம் கருணைத் தொகையாக வழங்கப்பட்டது. இதனால், மின்சார வாரியத்திற்கு ரூ.91.90 லட்சம் செலவானது.
2007-2008ஆம் ஆண்டிற்கு 69,556 மின்சார வாரிய ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை (போனஸ் - 8.33 சதவீதம் மற்றும் கருணைத்தொகை 11.67 சதவீதம்) பெற்றனர். இதனால் வாரியத்திற்கு ரூ.58.43 கோடி செலவு ஏற்பட்டது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஏறத்தாழ 20,387 ஒப்பந்தத் தொழி லாளர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கும் ரூ.1,000 கருணைத் தொகையாக வழங்கப்பட்டது.
2008-09 ஆம் ஆண்டிற்கு 64,772 மின்சார வாரிய ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை (போனஸ் - 8.33 சதவீதம் மற்றும் கருணைத்தொகை 11.67 சதவீதம்) பெற்றனர். இதனால் வாரியத்திற்கு ரூ.54.41 கோடி செலவு ஏற்பட்டது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஏறத்தாழ 22,018 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கும் ரூ.1,500 கருணைத் தொகையாக வழங்கப்பட்டது.
வாரியப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2009-10ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கியதில் வாரியத்திற்கு ரூ.60.75 கோடி கூடுதல் செலவானது. ஊதிய மாற்றக் குழு அமைக்கப்பட்டதன்பேரில் அக்குழு தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின், இறுதியாக அன்றைய மின்துறை அமைச்சர், ஆர்க்காடு வீராசாமி, 9.11.2009 அன்று தொழிற் சங்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ள தக்க வகையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின் படி ஊதிய மாற்றம் 1.12.2007 முதல் அமல்படுத் தப்படும்; அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படிகளின் விகிதமானது. தமிழக அரசை பின்பற்றியே இருக்கும்; பணியாளர்கள் ஏற்கெனவே பெற்று வரும் இதர சிறப்பு ஊதியம் மற்றும் படிகளின் வீதமானது 1.9.2009 முதற்கொண்டு இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது.
தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அறிவிப்பின்படி, தமிடிநநாடு அரசு அதன் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை ஒவ்வொரு முறை மாற்றி அமைக்கும்போதும் அதே விகிதத்தில் வாரியப் பணியா ளர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 2005ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது, மின் வாரியத் தொழிலாளர்களுக்கு 6 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கியதையும் எடுத்துக் காட்டியிருக் கிறார்கள். அதற்குப் பிறகு தி.மு. கழக ஆட்சியிலே 40 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டதற்கு மாறாக - தற்போது 5 சதவிகித ஊதிய உயர்வு என்று கூறுவதை தொ.மு.ச. ஏற்காது என்றும், அதனை உயர்த்திட வேண்டு மென்றும் கூறியிருக்கிறார்கள். ஏனென்றால், தொ.மு.ச. சார்பாக ஏற்கனவே ஊதிய உயர்வாக 30 சதவிகிதமும், மற்ற அலவன்ஸ்களில் 20 சதவிகித உயர்வையும் வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்வாரியம், 5சதவிகித ஊதிய உயர்வை மட்டும் அறிவித்துவிட்டு, மற்ற அலவன்ஸ்களில் ஒரு ரூபாய் கூட ஏற்கமாட்டோம் என்று தெரிவித்திருப்பது மின்வாரியத் தொழிலாளர் களுக்கு அதிர்ச்சியையும், பெருத்தஏமாற்றத் தையும் ஏற்படுத்தியுள்ளது.
மின் வாரியத் தொழிலாளர்களுக்குரிய ஊதிய உயர்வினைத் தர மறுக்கின்ற அ.தி.மு.க. அரசு அதேநேரத்தில், வீட்டு மின் இணைப்புகளுக்கு முன் அறிவிப்பு இல்லாமல், வைப்புத் தொகை வசூலிப்பதாகவும், மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் குடும்பத்துப் பெண்களிடம் பேட்டி கண்டு ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. குடியிருப்பு வீடுகளில் ஏற்கனவே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 100 ரூபாடீநு கட்டியவர்கள் தற்போது சப்தமின்றி உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்துவதாகவும் - 5000 ரூபாய இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தினால், கூடுதல் வைப்புத் தொகை 2,500ரூபாய் செலுத்த வலியுறுத்தப் படுவதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித் திருக்கிறார்கள்.
அரசுவிதிக்கும் இந்தக் கூடுதல் தொகையை நுகர்வோரிடமிருந்து வசூலித்துக் கொடுக்கும் மின்வாரிய அலுவலர்களுக்கு தரப்பட வேண்டிய ஊதிய உயர்வினைத் தருவதற்கு மட்டும் அரசு மறுப்பது ஏன்? பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்காகவும், பக்கம் பக்கமாக விளம்பரங்களைத் தருவதற்காகவும், அரசாங்கப் பணத்தைக் கோடி கோடியாக அள்ளி வீசிச் செலவழிக்கும் அ.தி.மு.க. அரசு, உண்மையாகப் பாடுபடும் தொழிலாளர்களின் வயிற்றில் இப்படி அடிக்கிறதே என்று மின்வாரியப் பணியாளர்கள் குமுறுகிறார்கள். குறைந்தபட்சம் 25 சதவிகித அளவிற்காவது அடிப்படை ஊதியத்தை உயர்த்திடவும், அலவன்ஸ்களைக் கணிசமாக உயர்த்திட வேண்டுமென்றும் தொழிலாளர்கள்வலியுறுத்துகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் நேற்றையதினம் 25 சதவிகித அளவி ற்கு ஊதிய உயர்வினை அளிக்க வேண்டுமென்று அறிக்கை கொடுத்துள்ளார்.
அரசுவிதிக்கும் இந்தக் கூடுதல் தொகையை நுகர்வோரிடமிருந்து வசூலித்துக் கொடுக்கும் மின்வாரிய அலுவலர்களுக்கு தரப்பட வேண்டிய ஊதிய உயர்வினைத் தருவதற்கு மட்டும் அரசு மறுப்பது ஏன்? பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்காகவும், பக்கம் பக்கமாக விளம்பரங்களைத் தருவதற்காகவும், அரசாங்கப் பணத்தைக் கோடி கோடியாக அள்ளி வீசிச் செலவழிக்கும் அ.தி.மு.க. அரசு, உண்மையாகப் பாடுபடும் தொழிலாளர்களின் வயிற்றில் இப்படி அடிக்கிறதே என்று மின்வாரியப் பணியாளர்கள் குமுறுகிறார்கள். குறைந்தபட்சம் 25 சதவிகித அளவிற்காவது அடிப்படை ஊதியத்தை உயர்த்திடவும், அலவன்ஸ்களைக் கணிசமாக உயர்த்திட வேண்டுமென்றும் தொழிலாளர்கள்வலியுறுத்துகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் நேற்றையதினம் 25 சதவிகித அளவி ற்கு ஊதிய உயர்வினை அளிக்க வேண்டுமென்று அறிக்கை கொடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட எந்தச் சங்கமும் அ.தி.மு.க. அரசால் வழங்கப்படுவதாகக் கூறப்படும் 5 சதவிகித ஊதிய உயர்வினை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த நிலையில் தமிழக அரசு மின்வாரிய அலுவலர் களும் நம்மவர்கள்தான் என்ற எண்ணத்தோடு,விரைவில் அவர்களுடன் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்து, குறைந்தபட்சம் 25சதவிகித அளவிற்காவது உயர்த்திட முன்வர வேண்டும்.’’
No comments:
Post a Comment