கேள்வி :- மருத்துவமனைகள் பற்றிய புகார்கள் ஏராளமாகத் தொடர்ந்து ஏடு களில் வந்து கொண்டே இருக்கின்றனவே? பதில் :- """"அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அவ்வளவும் சொத்தை"" என்பதைப் போல இந்த ஆட்சியில் எந்தத் துறைகளில்தான் புகார்கள் இல்லாமல் இருக்கின்றன? அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள், மருந்துகள், மாத்திரைகள் என்று அனைத்திலும் பற்றாக் குறை நிலவுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 12,366 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 8,706 துணை சுகாதார நிலையங்கள், 1,614 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 237 துணை மாவட்ட மருத்துவமனைகளும் அடங்கும்.127 தாய் சேய் நல மையங்களில் இருக்க வேண்டிய 890 டாக்டர்களில் 390 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 18 மருத்துவக் கல்லூரிகளில் இருக்க வேண்டிய 980 டாக்டர்களில், 564 சிறப்பு டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபோலவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் 530 சிறப்பு டாக்டர்கள் இருக்க வேண்டும். இதில் 130 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 இலட்சம் வெளி நோயாளிகளும், 35 ஆயிரம் உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகிறார்கள். சுமார் 22 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகின் றார்கள். ஆனால் சராசரியாக 60 சதவிகிதத் திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ராமனாதபுரம், நாகப்பட்டினம், திருவண்ணா மலை உட்பட பல மாவட்டங்களில் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 சதவிகிதம் பணியிடங்களில் டாக்டர்கள் இல்லை. மாநிலத்தில் உள்ள 18 மருத்துவக் கல்லூரிகளில் 75 சதவிகித சிறப்பு டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. டாக்டர்களைப் போலவே, செவிலியர்கள், மருந்தாளுனர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று பல ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில மருந்தாளுனர் சங்க நிர்வாகி ஒருவரே, """"கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள இந்திய மருத்துவக் கழகத்திலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருந்து, மாத்திரைகள் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் சர்க்கரை, இருதயம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முக்கிய சிகிச்சை பெறுவோருக்கு மருந்துகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது"" என்று கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment