வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



09/10/2013

 ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஏரியாவே கடந்த வாரக் கடைசியில் பரபரப்பா இருந்திருக்குது.''

""வழக்கு நடப்பது செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள ஸ்பெஷல் கோர்ட்டில்தானே, ஹைகோர்ட் ஏரியா ஏன் பரபரப்பாகணும்?''

""சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ஜெ. சார்பில் அவரோட வக்கீல்கள் அனுப்பிய ஒரு புகார்மனுதான் இந்த பரபரப்புக்கு காரணம். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்னை வாய்தாதோறும் ஆஜராகச் சொல்லி ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். என் பணிச்சுமைகளை உணர்ந்து, நான் ஒவ்வொரு வாய்தாவுக்கும் ஆஜராகத் தேவையில்லை என சுப்ரீம்கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. அதை மதிக்காமல் சிறப்பு நீதிமன்ற புதிய நீதிபதி முடிகவுடர் அக்டோபர் 30-ந் தேதி ஆஜராகவேண்டும் என்றும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இது சட்டப்படியும் நியாயப்படியும் தவறு' இதுதான் ஜெ. தரப்பிலான புகார் மனு. இதைப் பற்றி கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலாவிடம் போன சனிக்கிழமையன்னைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் விளக்கம் கேட்க, இது தொடர்பான அறிக்கைகளை அனுப்பும்படி ஹைகோர்ட் பதிவாளர், செஷன்ஸ் கோர்ட் பதிவாளர் குமுதினியிடம் கேட்க அதைத் தொடர்ந்துதான் பரபரப்பு அதிகமானது.''

""என்ன பரபரப்பு?''

""ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி முடிகவுடர் என்ன உத்தரவிட்டார் என 3ந் தேதி நடந்த கோர்ட் நடவடிக்கைகளின் அடிப்படையில் குமுதினி ஒரு ரெக்கார்டை ஹைகோர்ட் பதிவாளருக்கு அனுப்பினார். அதில் முடிகவுடர் பிறப்பித்த உத்தரவு தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒவ்வொரு வாய்தாவின்போதும் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜரானால்தான் அவர் மீதான வழக்கில் என்ன நடக்கிறது என அவரால் புரிந்து கொள்ளமுடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளும் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து வேறெந்த உத்தரவும் இதுவரை வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் எப்படி வழக்கை நடத்துகிறார்கள் என்பதை நேரில் பார்ப்பது குற்றம்சாட்டப்பட்டோரின் நலன்களுக்கு நல்லது. எனவே அக்டோபர் 30-ந் தேதி குற்றம் சாட் டப்பட்ட 4 பேரும் நேரில் ஆஜராகவேண்டும்னு தெளிவா இருந்தது. செஷன்ஸ் கோர்ட் பதிவாளர் குமுதினி அனுப்பிய ரிப்போர்ட்டை கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு ஹைகோர்ட் பதிவாளர் அனுப்பி வைக்க, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் ஜெ.வின் வக்கீல்கள் அனுப்பிய மனுவுக்கும் ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி முடிகவுடர் தன்னோட உத்தரவில் தெரிவித்திருப்பதற்கும் முரண்பாடு இருப்பதை ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா பார்த்துட்டு, அது உண்மையான்னு தெரிந்து கொள்ள ரெகார்டுகளைத் தேடச் சொல்லிட் டார்.''

""அதாவது, சொத்துக்குவிப்பு கேஸில் நேரில் ஆஜராவதிலிருந்து ஜெ.வுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறதாங்கிறது சம் பந்தமான ரெகார்டுகளை கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி கேட்டிருக்காரு.. அப்படித்தானே?''

""ஆமாங்க தலைவரே.. … இது சம்பந்தமா போன சனிக்கிழமை நைட் வரைக்கும் ஸ்பெஷல் கோர்ட் பதிவாளர் குமுதினி ஜெ. வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா ரெகார்டுகளையும் புரட்டி பார்த்தும் அப்படியொரு உத்தரவு சம்பந்தமான ரெகார்டு எதையும் கண்டுபிடிக்க முடியலையாம். இதையடுத்து, ஜெ.வின் வக்கீல்கள்கிட்டே கோர்ட் ஊழியர்கள் பேசி, அந்த உத்தரவு பற்றி விவரம் கேட்டிருக்காங்க. அதற்கு ஜெ. வக்கீல்கள், இந்த சொத்துக் குவிப்பு கேஸ் பெங்களூருவுக்கு மாற்றலாகி வந்தபிறகு இதுவரை விசாரித்த நீதிபதிகள் பச்சாபுரே தொடங்கி பாலகிருஷ்ணாவரை எல்லோரிடமும் ஜெ. நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளதுன்னு சொல்லித்தான் வாய்தா வாங்கியிருக்கோம். உத்தரவு நகல் எதுவும் இப்ப எங்ககிட்ட இல்லைன்னு சொல்லியிருக்காங்க. இந்த விவரம் அறிந்த குமுதினி, ஹைகோர்ட்டுக்கு முழுமையா ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். இதனடிப்படையில், தமிழக முதல்வர் ஜெ தரப்பின் புகாரில் உண்மையில்லை. நீதிபதி முடிகவுடர் சட்டப்படி செயல்பட்டுள்ளார்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடக ஹைகோர்ட் ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.''

""நீதிபதி முடிகவுடர் சட்டப்படியான கெடுபிடியுடன் செயல்படுவதில் ஜெ தரப்பு வக்கீல்கள் ஷாக் ஆகியிருப்பாங்களே.''…

""தற்காலிக நீதிபதியான முடிகவுடர் விரைவில் மாற்றப்பட்டு புது நீதிபதி நியமிக்கப்படுவாருங்கிற எதிர்பார்ப்பு அவங்களுக்கு இருக்குது. கர்நாடக அரசும் அம்மாநில ஹைகோர்ட்டும் சேர்ந்து ஆலோசித்து நியமிக்க வேண்டிய புது நீதிபதி களுக்கான பேனலில் 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்குது. அதில் முடிகவுடர் பேரு இல்லையாம். ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா பெயரும் இல்லை. அரசு வக்கீல் பவானிசிங் நீடிப்பார். புது நீதிபதி யாருங்கிறதைப் பொறுத்து இந்த கேஸில் அடுத்தகட்ட பரபரப்பு அதிக மாகும்.''

""எப்படியாவது இந்த வழக்கில் விரைவாகத் தீர்ப்பு வரணும், அது சாதகமா வரணும்ங் கிறதுதானே ஜெ. தரப்பின் எதிர்பார்ப்பு!''

""தலைவரே.. அதைப் பற்றி நாம ஏற்கனவே பேசியிருக்கோம். பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த இந்த வழக்கு ஒரு தடையா இருக்கக் கூடாதுங்கிறதுதான் ஜெ.வின் கணக்கு. வரும் 30-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத தலைவர்களின் மாநாட்டை சி.பி.எம். கட்சி முன் னெடுக்குது. அதில் ஜெ. கலந்துக்கணும்னு பிரகாஷ் காரத் அழைச்சிருக்காரு. ஜெ.வோ தன்னை பிரதமர் வேட்பாளரா அறிவிக்கணும்ங்கிறதை வலியுறுத்தி யிருக்கார். இப்ப அதை அறிவிப்பதில் சிரமம் இருக் குதுன்னு இடதுசாரிகள் தரப்பில் சொல்லியிருக்காங்க. ஜெ.வோ பிரதமர் வேட்பாளரா தன்னை அறிவிச்சா தான் ஜனவரி முதல் ஆல் இண்டியா டூர் அடித்து பிரச்சாரம் செய்ய முடியும்னு நினைக்கிறாராம். இடதுசாரிகள் சாதகமான பதிலைச் சொல்லாததால் ஜெ.வும் அந்த மாநாட்டில் கலந்துக்கிறது சம்பந்தமா உறுதியான பதில் எதுவும் சொல்லலையாம். அதே நேரத்தில், மோடி தரப்பிலிருந்து அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ளப்படுது.''

No comments:

Post a Comment


Labels