வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/10/2013

மெஜாரிட்டி" ஆட்சி என்றால் எதுவும் செய்யலாமோ? 

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. 
29-9-2013 தேதிய """"தினமலர்"" பத்திரிகையில் """"கொலை, கொள்ளையில் சென்னை """"டாப்"" என்ற 
தலைப்பில் அரைப் பக்கத்திற்கு செய்தி வெளியாகி யுள்ளது. அதில், """"தமிழகத்தில் கொலை, கொள்ளை, 
திருட்டு, செயின் பறிப்பு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 19ஆம்தேதி மாநிலம் 
முழுவதும் 12 கொலைச் சம்பவங்கள் ஒரே நாளில் நடந்தன. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 
1,806 பேரும், இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை 1,044 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். புள்ளி 
விவரங்களின்படி ஒரு மாதத்துக்கு சராசரியாக 100லிருந்து 120 பேர் வரை கொடூரமாகக் 
கொல்லப்பட்டுள்ளனர். கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, காயம் ஏற்படுத்துதல் 
போன்ற குற்றச் செயல்களில் தமிழக அளவில் சென்னை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 
சென்னையில் சொத்துத் தொடர்பான கொலைகள், கடந்த ஆண்டு 85 சம்பவங்களும், இந்த ஆண்டில் 
கடந்த ஜூலை மாதம் வரை 70 சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 
116 கொலைகள், 1,261 திருட்டுகள், 300 கொள்ளைகள், 54 வழிப்பறிகள் சென்னையில் நடந்துள்ளன. 
இது தவிர, தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்களிலும் சென்னைதான் முதல் இடம்"" - இவை 
அ.தி.மு.க. ஆட்சிக்கு """"தினமலர்"" எழுதியுள்ள பாராட்டுரை. 
இதே 29-9-2013 நாளில் """"தி இந்து"" தமிழ் நாளேட்டில், """"திகில் நகரமாகியது வேலூர் - ஒரே 
நாளில் அடுத்தடுத்த கொலை முயற்சி சம்பவங்கள்"" என்ற தலைப்பில், """"வேலூரில் வெள்ளிக்கிழமை 
மாலையில் அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் உட்பட அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை முயற்சி 
சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் 
நடந்த இந்தக் கொலை முயற்சி சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வேலூரில் கடந்த ஆண்டு 
அக்டோபர் மாதம் பா.ஜ.க. மாநில மருத்துவரணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, 2013 ஜூலை 1ம் 
தேதிஇந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் இருவரும் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிப் 
படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் 
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள 
ஓட்டல் துர்கா பவனில் பலர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 10 பேர் 
கொண்ட ஒரு கும்பல் நேரடியாக ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள ஒரு டேபிளில் 
பேசிக் கொண்டிருந்தவர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென சாப்பிட்டுக் 
கொண்டிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கிய கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து 
வைத்திருந்த கத்தியால் வெட்டத் தொடங்கினர். 3 பேருக்கு விழுந்த வெட்டுக் காயங்களைப் பார்த்ததும் 2
டிபன் சாப்பிட வந்த மற்றவர்கள், அலறல் சத்தத்துடன் ஓட்டலை விட்டு ஓடத் தொடங்கினர். இதற்கு 
நடுவில் வெட்டுக் காயத்துடன் இருந்த ஒருவரை அந்தக் கும்பல் கடத்திச் செல்லவே; பரபரத்தது ஓட்டல். 

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இரவு 8 மணி யளவில் தொரப்பாடி பகுதியில் """"குரங்கு குல்லா"" 
அணிந்து வந்த 2 பேர், 49வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சுகுமாரை வெட்டி விட்டுத் தப்பினர். ஒரே 
நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை முயற்சி சம்பவங்கள் பொதுமக்களுக்கு ஒரு பக்கம் 
திகில் உணர்வை ஏற்படுத்தினாலும், போலீசாரும் சற்றுக் கலக்கமடைந்துள்ளனர்"" என்று விரிவாகச் 
செய்தி வந்துள்ளது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் டெல்லி சென்ற அ.தி.மு.க. அமைச்சர் 
ஒருவர் """"தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழகமே அமைதிப் பூங்காவாகத் 
திகழ்கிறது"" என்று முதலமைச்சரின் உரையை அங்கே படித்து, இங்கேயுள்ள அனைத்து ஏடுகளுக்கும் 
அந்தப் பேச்சினை அனுப்பி வெளியிடச் செய்திருக்கிறார்கள். 
அடுத்து இந்த ஆட்சியில் தடையை மீறி குட்கா, ஜர்தா போன்றவை அமோகமாக விற்பனை 
செய்யப்படுவதாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் 
கூறப்படுகிறது. இந்தப் பொருள்களை தடையை மீறி விற்றால் பொருள்கள் பறிமுதல்
செய்யப்படுவதோடு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை 
செய்துள்ளது. ஆனால் இந்தத் தடை விதிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகியும், குட்கா, 
ஜர்தாவின் விற்பனை தற்போது அமோகமாக நடைபெறுவதாகவும், அதன் விலை பல மடங்கு உயர்ந்து 
விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் அமோகமாக நடைபெறுவது, குட்கா - 
ஜர்தா விற்பனையும், """"டாஸ்மாக்"" விற்பனையும் மட்டும்தான்! இதுவும் நூறாண்டு பேசும் சாதனைகளில்
ஒன்றென ஆளும் கட்சியினர் உற்சாகம் கொள்ளலாம்! விளம்பரம் கூடச் செய்து கொள்ளலாம்! 
இந்த அழகில் காவல் துறை நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தொடர்ந்து பதினைந்து 
நாட்களாக வரும் செய்திகளை நீயும் படித்திருப்பாய்! கடந்த 2004ஆம் ஆண்டு சந்தன மரக் கடத்தல் 
வீரப்பன் காவல் துறையின் அதிரடிப் படையினரால் கொல்லப்பட்ட போது, ஆட்சியிலே இருந்த அ.தி.மு.க. 
அரசு, அந்த அதிரடிப்படையில் பணி யாற்றியதாக காவலர் முதல் ஐ.ஜி. வரை சுமார் 1000 பணி 
யாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் ரொக்கத் தொகையும், 
அவர்கள் பணியாற்றிய நகரம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் இலவச வீட்டு மனைகளும் 
வழங்கியது. மேலும், காவல் துறை அரசாணை எண்கள் 1252/2004 நாள் 
29-10-2004 மற்றும் 1396/2004 நாள் 6-12-2004 மூலம் அதே 1000 பணியாளர்களுக்கு ஒரு கட்ட 
சிறப்புப் பதவி உயர்வையும் அ.தி.மு.க. அரசு வழங்கியது. 
மேற்படி சிறப்புச் சலுகைகளும், பதவி உயர்வும் பெற்ற அந்த 1000 நபர்களில் அ.தி.மு.க. அரசுக்கு 
வேண்டப்பட்டவர்களும், அப்போது ஆட்சியாளர் களுக்கு நெருக்கமாக இருந்த காவல் துறை 
அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களும் அடங்குவர் என்று காவல் துறையைச் சேர்ந்த வேறு சிலரால் 
கூறப்பட்டது. சலுகை பெற்றவர்களில் பலர் காட்டுக்கே செல்லாமல் போயஸ் தோட்டத்தில் மராமத்துப் 
பணிகள் செய்து வந்தவர்கள் என்றும் பல முனைகளிலே இருந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. 
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட காவல் துறையில் இவ்வாறு ஆயிரம் 
நபர்களுக்கு மட்டும் சிறப்புப் பதவி உயர்வு வழங்கப்பட்டதால், பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டது 
மட்டுமன்றி, பதவி உயர்வு பெற்ற நபர்களை விட, பணி மூப்பு பெற்ற நபர்கள் காவலர் முதல் 
கண்காணிப்பாளர் வரை, தாங்கள் செய்யாத தவறுக்காக, பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டு 
வருத்தமடைந்தனர். அதைப் பற்றி அந்தப் பெரும்பான்மையான காவல் துறை நண்பர்கள், அ.தி.மு.க. 
அரசு தங்களுக்கு வேண்டிய ஆயிரம் பேருக்குப் பதவி உயர்வு வழங்கியதால், தங்களுக்கு உரிய 
காலத்தில் வர வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் போய் விட்டது என்று முதலமைச்சர் பொறுப்பிலே 
இருந்த என்னிடம் நேரடியாகவே புகார் கூறினார்கள். நானும் அதுபற்றி உயர்மட்ட அதிகாரிகளிடம் கூறி, 
அவர்களின் துயரத்தைப் போக்குவதற்கு வழி வகை காண வேண்டுமென்று தெரிவித்தேன். 
காவல் துறைப் பணியாளர் சம்மந்தப்பட்ட சட்டங்களான Tamil Nadu Police Service Rules, 
Tamil Nadu Police Subordinate Service Rules ஆகியவற்றில் இத்தகைய பதவி உயர்வுகளுக்கு
வழிவகை ஏதும் இல்லை என்று தெரிவித்தபோதும், வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்யாமல், 
2007ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியில் பெருந்தன்மையோடு, சிறப்பு பதவி உயர்வுகளைப் 
பெற்றவர்களுக்கும், இதரப் பணியாளர்களுக்கும் பணி மூப்பு சம்மந்தமாக சீராய்வு செய்து சட்டத்தில் 3
பரிந்துரைத்துள்ளபடி 3-10-2007 அன்று ஓர் அரசாணையினை வெளியிட்டது. அதன்படி அதிரடிப் 
படையினருக்கு ஒரு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்படும் என்றும் முந்தைய சீனியாரிட்டி 
வரும்போதுதான் அடுத்த பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. 
இந்த அரசாணையை எதிர்த்து சிறப்புப் பதவி உயர்வு பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 
பல """"ரிட்"" மனுக்களைத் தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு திரு. 
வெங்கட்ராமன், 14-10-2009 அன்று அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து, தி.மு.க. அரசு கொண்டு 
வந்த அரசாணை சரியானது என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து """"ரிட் அப்பீல்"" மனுக்கள் 
தாக்கல் செய்யப்பட்டன. 
இதற்கிடையே 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு ஏற்கனவே சிறப்பு பதவி உயர்வு 
பெற்ற காவல் துறையைச் சேர்ந்த 1000 பேருக்கு மேலும் பதவி உயர்வு வழங்கக்கூடிய வகையில், சட்ட 
விரோதமாக 
ஓர் அரசாணையை, 3-5-2012 அன்று வெளியிட்டது. ஆனால் """"ரிட் அப்பீல்"" வழக்குகளை; இரண்டு 
நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து 5-4-2013 அன்று தள்ளுபடி 
செய்தது. அந்தத் தீர்ப்பில் அ.தி.மு.க. அரசு 3-5-2012 இல் பிறப்பித்த அரசாணையை ரத்து 
செய்ததோடு, அரசையும் அதற்காக விமர்சனம் செய்திருந்தது. மேலும் அந்தத் தீர்ப்பில் தி.மு.கழக 
ஆட்சியில் கொண்டு வந்த அரசாணை நிலைநிறுத்தப்பட்டு, அதன்படி காவல் துறைப் 
பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென்றும் உத்தரவு அளிக்கப்பட்டது. 
ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், வீரப்பன் தேடுதல் 
வேட்டையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு இரண்டு பதவி உயர்வு அளிக்க மீண்டும் அ.தி.மு.க. 
அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இந்த அரசு மீது போலீஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் உட்பட 
32 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதை நீதிபதி மாண்புமிகு கிருபாகரன் 
அவர்கள் விசாரித்து, அரசு வழக்கறிஞரிடம் காலி இடங்கள் 88ஐயும் நிரப்பி விட்டு நீதிமன்றத்தில் 
தெரிவிக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவைத் தானாகப் பிறப்பிக்கும் 
என்றும் கடந்த மாதக் கடைசியில் ஆணை பிறப்பித்தார். 
ஆனால் அரசு வழக்கறிஞர், டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு தற்போதைய நிலையில் அளிக்க 
முடியாது என்று கூறினார். மனுதாரர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கடந்த மூன்றாண்டுகளாக 
பதவி உயர்வு கிடைக்காமல் டி.எஸ்.பி.க்கள் இருக்கிறார்கள் என்றும், பலர் பதவி உயர்வு பெறாமலேயே 
ஓய்வு பெற்று விட்டார்கள் என்றும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் 
கொண்டார். 
27-9-2013 அன்று இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதியரசர் கிருபாகரன், """"டி.எஸ்.பி.யாகப் 
பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பதவி உயர்வு கிடைக் காமல் பதவி ஓய்வு பெற்று விட்டனர். 
தற்போது கூடுதல் எஸ்.பி. பதவிக்கு 78 காலி இடங்கள் உள்ளன. இந்தக் காலி இடங்களை அரசு 
உடனே நிரப்ப வேண்டும். இல்லா விட்டால் இந்த ஆண்டு இறுதியில் 53 டி.எஸ்.பி.க்கள் பதவி உயர்வு 
கிடைக்காமல் ஓய்வு பெற்று விடுவார்கள். இவர்களுக்கு இரண்டு வாரத்தில் பதவி உயர்வு அளிக்க
வேண்டும். இந்தப் பதவி உயர்வு தற்காலிகமானது. வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு இந்த உத்தரவு 
கட்டுப்பட வேண்டும். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட டி.எஸ்.பி. பெயர்களையும் இந்தப் பதவி 
உயர்வு வழங்கும்போது பரிசீலனை செய்து உரிய உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்"" என்று 
உத்தரவிட்டார். 
இந்தத் தீர்ப்புக்குப் பின், 29-9-2013 அன்று தமிழக அரசு அவசர அவசரமாக விடுமுறை நாளில் 
98 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து ஆணை பிறப்பித்தது. அந்தப் 
பட்டியலில், வீரப்பன் தேடுதல் படையில் இருந்ததாகக் கூறி பதவி உயர்வு பெற்றவர்களான, புழல் உதவி 
கமிஷனர் கந்தசாமி, சென்னை நகர காவல் துறை நலப்பிரிவு உதவி கமிஷனர் திருமலைச்சாமி, 
முதல்வர் பாதுகாப்புப் பிரிவு டி.எஸ்.பி., பெருமாள்சாமி, முதல்வரின் சிறப்புப் பாதுகாப்பு படைப் பிரிவு 
டி.எஸ்.பி. வீரப்பெருமாள் ஆகியோர் உட்பட இடம் பெற்றனர். இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணையில் பல
குளறுபடிகள் இருந்ததாகச் செய்தி வந்தது. உதாரணமாக கடலூர் மாவட்டத் தலைமையிட கூடுதல் 
எஸ்.பி.யாக ராஜன் என்பவர் இருந்தார். ஆனால் அவர் பணியாற்றி வந்த இடம் காலியாக இருப்பதாகக் 
கருதி, அந்த இடத்திற்கு முரளி என்பவரை நியமித்தார்கள். அதே மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவுக்கு 4
ஜேக்கப் மாணிக்கராஜ் என்பவர் கூடுதல் எஸ்.பி.யாக இருக்கிறார். அவர் இடத்திற்கு சீனிவாசன் 
என்பவரை நியமித்திருந்தார்கள். 
நீதிமன்றம் அ.தி.மு.க. அரசின் உத்தரவை ரத்து செய்து, இரண்டு பதவி உயர்வு கொடுக்கக் கூடாது 
என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அதையும் மீறி 20 பேருக்கு பதவி உயர்வு ஆணை 
பிறப்பிக்கப்பட்டதால், உள்துறைச் செயலாளர், மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு 
வழக்குத் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. வழக்கு தொடர்ந்த இன்ஸ்பெக்டர் கவுதமன் என்பவர் 
திடீரென்று சில நாட்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டாராம். வழக்குத் 
தொடர்ந்த மற்றொரு இன்ஸ்பெக்டரான யாகூப் என்பவரும் திடீரென மாற்றப்பட்டுள்ளாராம். 
இதில் ஒருசில காவல் துறை நண்பர்கள் தெரிவிக் கும் தகவல், ராஜராஜன், முதல் அமைச்சருக்கு 
பாதுகாப்புப் பணி மேற்கொண்ட பெருமாள்சாமி, வீர பெருமாள் ஆகியோரும் வீரப்பன்
அதிரடிப்படையிலே இருந்ததாகக் கூறி பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும், அவர்களுக்கு மேலும் 
பதவி உயர்வு அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான், உயர் நீதிமன்ற உத்தரவைக்கூட 
நிறைவேற்றாமல், அந்தத் தீர்ப்பையே அவமதிக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாடு காவல் துறைப் 
பணியாளர் சட்டத்தைத் திருத்தம் செய்து அரசாணை எண். 550/2013 வெளியிடப்பட்டது என்றும் 
சொல்லப்படுகிறது. 
இந்தச் சட்டத் திருத்த ஆணையை எதிர்த்து, பாதிக்கப்பட்ட இதர காவல் துறை அதிகாரிகள் 
மொத்தம் ஐந்து ரிட் மனுக்களையும், ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனுவையும் தாக்கல் செய்து, அவை நீதி 
மன்றங்களில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அ.தி.மு.க. அரசு கடந்த மாதம் அவசர அவசரமாக 
காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இந்தப் பதவி உயர்வைப் 
பெற்றவர்களில் பலர் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும், அவர்களுக்கு அவசர 
அவசரமாகப் பதவி உயர்வு செய்ததில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டதாக வும் கடந்த பத்து 
நாட்களாக பத்திரிகைகளில் செய்தி வருகின்றன. 
இதுபோலவே மற்றொரு வழக்கு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2011ஆம் ஆண்டு 
14 டி.எஸ்.பி.க்களைத் தேர்வு செய்தது. அதில் முறைகேடு என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் 
தொடர்ந்த போது, அதை ஏற்றுக் கொண்டு அந்த நியமனம் செல்லாது என்று தீர்ப்புக் கூறப்பட்டது. 
அந்த 14 பேரும் அப்பீல் செய்ததை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் 
அப்பீல் செய்து கொண்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை உத்தரவு 
பிறப்பிக்க வில்லை. வழக்கு விசாரணையைத் தள்ளிவைத் துள்ளது. ஆனால் அந்த 14 டி.எஸ்.பி.க்களும் 
உயர்நீதி மன்ற உத்தரவிற்கு மாறாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நியமனம் 
செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவது நீதிமன்ற 
உத்தரவை மீறிய செயலாகும். தற்போது அந்த 14 டி.எஸ்.பி.க்களுக்கும் கூடுதல் எஸ்.பி.யாக அ.தி.மு.க. 
அரசு பதவி உயர்வு அளித்திருக்கிறதாம். இதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் 
தொடரப்பட்டுள்ளது. 
காவல் துறை நிர்வாகம் எவ்வாறெல்லாம் ஆட்டுவித்தபடிச் செயல்படுகிறது என்பதற்கு இந்த 
உதாரணங்களே போதுமென நினைக்கிறேன். இந்தத் தவறுகள் கழக ஆட்சியில் நடைபெற்று, 
இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சியிலே இருந்திருந்தால், அவருடைய அறிக்கையில் 
எப்படி யெல்லாம் கழக அரசைத் தாக்கி எழுதியிருப்பார்? """"இந்த மைனாரிட்டி ஆட்சியில் காவல் 
துறைக்குப் பொறுப்பேற் றிருப்பவர் இன்றைக்கே பதவியை விட்டு விலகிட வேண்டும்"" என்று 
கொக்கரித்திருப்பார். """"மெஜாரிட்டி"" ஆட்சி என்பதால் எதுவும் செய்யலாமோ?

No comments:

Post a Comment


Labels