அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மகளிர் அணி அறிவித்துள்ளது.
திமுக மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று கலை ஞர் அரங்கில் நடந்தது. மகளிர் அணி தலைவர் நூர்ஜகான்பேகம் தலைமை தாங்கினார்.
திமுக துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன், மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, மகளிர் அணி துணை தலைவர்கள் காஞ்சனா கமலநாதன், விஜயா தாயன்பன் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி செயலாளர் புதுக் கோட்டை விஜயா வரவேற்றார். மகளிர் தொண் டர் அணி செயலாளர் காரல்மார்க்ஸ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டா லின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தில் கொலை, கொள்ளை அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. சட்டம் ஒழுங்கை சீர்கெட வைத்திருக்கும் அதிமுக ஆட்சியை கண்டிக்கிறோம். ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 4,000 கோடி வரி போட்டு தமிழக மக்களை வாட்டி வதைத்து விட்டு பால் விலை, பேருந்து கட்டணத்தை உயர்த்தி, இமாலய அளவில் மின்சார கட்டணத்தை உயர்த்தி, மின்சார தட்டுப்பாட்டை தீர்க்க வகையில்லாது தமிழகத்தை திக்குமுக்காடச் செய்தவர் ஜெயலலிதா.
விண்ணை முட்டுகிற விலைவாசி உயர்வு, காய்கறி மற்றும் எண்ணை பொருட்களின் விலை உயர்த்தி ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அதிமுக அரசை கண்டிக்கும் வகையில், திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் கண்டனப் போராட்டம் நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைநகரங்களில் ஒரே நாளில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரச்சாரக் குழு சார்பில் தமிழகத்தை 4 மண்டலமாகப் பிரித்து மகளிர் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment