திமுக மகளிர் அணி கூட்டம் - தீர்மானங்கள்
தி.மு.க. மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத் திலுள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. மாநில மகளிர் அணி தலைவர் நூர்ஜகான்பேகம் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. சிறப்பு ரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
’’கலைஞர் ஆட்சியில்தான் ஆணுக்குச் சமமாக பெண்ணுக்கும் சொத்துரிமை; பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மூலம் பெண் கல்வியை ஊக்கப்படுத்தத் திட்டம், மகப்பேறு நிதி உதவித் திட்டம், கல்வியில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை; உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு என்பதெல்லாம் திராவிட இயக்கம் நடத்திவரும் தொடர் சமூகப் புரட்சியாலும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியாலும்தான் சாதிக்க முடிந்தது எனும் உணர்வோடும் லட்சிய நோக்கோடும் பணியாற்ற வேண்டும்.
ஊனமுற்றவர்களை ‘‘மாற்றுத் திறனாளிகள்” என மதித்து தனி துறையாக மாற்றிக் காட்டியவர் கலைஞர்.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய கலைஞர் அவர்களை இக்கூட்டம் நன்றியுடன் நினைவு கூர்கிறது.
அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து மகளிர் அணிச் சார்பில் தலைமைக் கழக அனுமதி பெற்று சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் ஒரே நாளில் மாபெரும் உண்ணா விரதப் போராட்டம் நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment