வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/10/2013

சென்னை மேயர் சைதை துரைசாமி கடந்த வாரம் நடந்த மாநகராட்சி 

கூட்டத்தில் தி.மு.க.வினர் மேயராக இருந்த போது நிவர்த்தி செய்யப்படாமல் 

நிலுவையில் இருக்கும் நிதி பற்றி பொய்யான புகார் கூறினார்.


இது தொடர்பாக மேயர் சைதை துரைசாமி மீது தி.மு.க. பொருளார் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின், முன்னாள் மேயர் அண்ணன் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சார்பில் சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி கோபாலன், வருகிற 22–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இது குறித்து முன்னாள் மேயர் அண்ணன் மா.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 28–ந் தேதி நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி புகார் கூறியுள்ளார்.

1996 முதல் 2001 வரை தளபதி அவர்கள் மேயராக இருந்த போது ரூ.292 கோடியும், 2006 முதல் 2011 வரை நான் மேயராக இருந்த போது ரூ.125 கோடியும் நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாக புகார் கூறினார்.

மறுநாளே நான் வெளியிட்ட அறிக்கையில், நிலுவையில் உள்ள நிதி என்றால் பொருள் என்ன? அதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? மேயருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு, இது தொடர்பாக நேரடி விவாதத்துக்கு தயார் என்று கூறி இருந்தேன்.

பொதுவான இடத்துக்கு அவர் வர தயங்கினால் தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார் என்றும் நான் கூறி இருந்தேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாக தணிக்கை அறிக்கை விவரங்களை அரசுதான் அறிவிக்க வேண்டும்.

ஆனால், இப்போது நிவர்த்தி செய்யப்படாத நிலுவையில் உள்ள தொகை என்ற விஷயம் புதிய விவாதமாக வந்துள்ளது. மேயர், அவருக்கு உள்ள கடமைகளான அடிப்படை வசதிகளை செய்யாமல் என் மீதும், தளபதி அவர்கள் மீதும் குற்றம் சாட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அவர் நேரடியாக விவாதத்துக்கு வராததால் எனது சார்பிலும், தளபதி அவர்கள் சார்பிலும் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளோம். எங்கள் மீது அவர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுளை கோர்ட்டிலாவது வந்து சொல்லட்டும் என்பதற்காகத்தான் கோர்ட்டை நாடி உள்ளோம்.

எங்கள் மீது தேவை இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவது அவதூறு ஆகும். இதற்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment


Labels