வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

02/10/2013

தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி - எதிரி உங்கள் வாயில் போட்டுள்ள தவிட்டை மென்றுகொண்டு இருக்காதீர்கள்! 
Photo: நன்றி  - திராவிடப் புரட்சி

தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி - எதிரி உங்கள் வாயில் போட்டுள்ள தவிட்டை மென்றுகொண்டு இருக்காதீர்கள்!  

பி.ஜே.பியோடு தி.மு.க கூட்டணி வைக்கப்போகிறது.... வைக்கப்போகிறது... என்று பார்ப்பனிய பத்திரிக்கை கிளப்பி விட விவாதங்கள் ஆங்காங்கே நடக்கிறது.

'கலைஞர் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார், அவருக்கு தேர்தல் வெற்றி மட்டுமே முக்கியம், அவர் ஏற்கனவே பி.ஜே.பியோடு கூட்டணி வைக்கவில்லையா?' என்று வாதத்திற்கு வலு சேர்க்க வரலாறு வேறு பேசுகிறார்கள்.

குழம்பிப்போன தி.மு.க ஆதரவாளர்கள் (கழக பொறுப்பாளர்கள் இவர்களைப் போல அவசரகுடுக்கைகள் அல்ல, எனவே இவர்கள் ஆதரவாளர்கள் மட்டுமே)  சிலர்.... 'தேர்தல் வெற்றிக்காக கலைஞர் யாரோடு கூட்டணி வைத்தாலும் சரி நாங்கள் ஏற்றுக்கொள்வோம், கூட்டணி தர்மம் காப்போம்!" என்று அவசர அவசரமாக பிதற்றுகிறார்கள். அதை ஏற்க மறுப்பவர்கள், ‘அப்படி ஒரு கூட்டணி வைத்தால் நாங்கள் தி.மு.கவிற்கு எதிராக வாக்களிப்போம்’ என்று ஆவேசப்படுகிறார்கள்.

இந்த குழப்பத்தைத்தானே எதிர்பார்த்து சிலர் புரளியை கிளப்பிவிட்டார்கள்.

இந்த புரளியும், அது சார்ந்த தி.மு.க ஆதரவாளர்களின் கருத்தும் மறைமுகமாக என்ன சொல்லுகிறது. தி.மு.கவிற்கோ அதன் தலைவர் கலைஞருக்கோ எந்த கொள்கையும் இல்லை! தேர்தலில் வெற்றிபெற்று பதவியை பெறுவதை தவிர இவர்களுக்கு வேறு லட்சியமே இல்லை! என்பது போலவே இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தி.மு.கவின் வெற்றி மட்டுமே எங்கள் குறி வேறு எதுவும் இல்லை என்பது போல முரட்டு விவாதம் செய்பவர்கள் அரசியல் வியாபாரிகளைப் போலப் பேசுகிறார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகள் இருக்கலாம் ஆனால் தவறானதை வியாபாரம் செய்யகூடாது என்பது வியாபாரத்திற்கே பொருந்தக்கூடிய ஒன்று எனும் போது, அரசியலில் அதை விட அதிக கவனமாக முடிவெடுப்பார்கள் என்பதை ஏன் சிந்திக்க தயங்குகிறீர்கள்?

அரிசி, பருப்பு, புளி ஆகியவற்றை விற்பதை விட கஞ்சா, அபின் ஆகியவற்றை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பது போல பேசுகிறார்கள் வெற்றி மட்டுமே வேண்டும் என்று அரசியல் வியாபாரிகளைப் பேசுபவர்கள்.

தி.மு.கவிற்கு ஆதரவளிப்பதே பி.ஜே.பியை எதிர்க்கத்தான் என்பதுபோல அந்த கூட்டணியை ஏற்க மறுப்பவர்கள் பேசுகிறார்கள்.

பி.ஜே.பியோடு அன்று கூட்டணி வைத்தபோது பிரதமராக வாஜ்பாய் இருந்தார். கலைஞர் குறைந்த பட்ச செயல் திட்டத்தை முன்னிறுத்தி அதன் அடிப்படையில் ஆதரவளித்தார், ஆட்சியில் பங்கேற்றார். கொள்கைக்கு முரணானவற்றை கண்டித்தார்கள், ஒருநாள் வெளியே வந்தே விட்டார்கள்.

வாஜ்பாயும் மோடியும் ஒன்றா? கலைஞர் மோடியை வாஜ்பாயை போல கருதி ஏற்றுக்கொள்வாரா?

அண்ணாவின் கனவுத் திட்டமாம் சேது சமுத்திர திட்டம் தற்போது கலைஞரின் உறுதியான திட்டமாக மாறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக உள்ள பி.ஜே.பியோடு கூட்டணி வைக்க சாத்தியமுள்ளதா?

அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் விதமாக நிறைவேற்றப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு ஆதரவாக பி.ஜே.பி இருக்குமா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று ஊதி பெரிதாக்கிய கட்சியும் மேல் சொன்ன பலவற்றில் தி.மு.கவிற்கு எதிராக தனது பங்களிப்பை திறம்பட வழங்கிய சுப்பிரமணியன் சாமி அங்கு இருக்கும் நிலையில் இது சாத்தியமா?

இப்படி கொள்கை, எதார்த்தம் என்ற பலவகையில் முரண்கள் இருக்கும்போது.... அவசரப்பட்டு யாரோ கிளப்பிய புரளியை வைத்து இத்தனை விவாதங்களை செய்யலாமா?   

இதையெல்லாம் கூட்டணி என்று ஒன்று முடிவு செய்த பிறகு பேசுங்கள், ஆதரவு தெரிவியுங்கள், எதிர்ப்பை தெரிவியுங்கள் எதையாவது செய்யுங்கள். அதுவரை எதிரிகள் வாயில் போட்ட தவிட்டை மென்றுகொண்டு இருக்காதீர்கள். நீங்கள் தவிட்டை மேல்லுவதை எதிரிகள் இரசிக்கலாம் ஆனால் எனக்கு என்னவோ பார்க்க நன்றாக இல்லை!

-    திராவிடப் புரட்சி

-
         நன்றி - திராவிடப் புரட்சி

No comments:

Post a Comment

Labels