கி.வீரமணியின் வாகனத்தை தாக்கிய வன்முறை கும்பல்: தடுக்காத காவல்துறை: கலைஞர் கண்டனம்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 28.09.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணியின் வாகனத்தை வன்முறைக் கும்பல் தாக்கியுள்ளது. கொடிகளை சாய்த்தும், சுவரொட்டிகளை கிழித்தும் வெறியாட்டம் நடத்தியிருக்கிறது.
அச்செயல்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையும், காலிகளுக்கு துணை போய் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள்கையை கடைசி மூச்சு வரை, வன்முறை சிறிதும் கலக்காமல் பரப்பி வந்த தந்தை பெரியால் வாழ்ந்த மண்ணில் அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இடப்படிப்பட்ட வன்முறைகளுக்கு துணை போவது இது முதல்முறை இல்லை என்றாலும், ஜனநாயகத்திலும் கருத்துச் சுதந்திரத்திலும் நம்பிக்ளை உள்ளோர் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த செயலைக் கண்டிக்க வேண்டியது அவர்களது கடமையாகும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment