வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



02/10/2013

இந்த நாட்டில் அன்று முதல் இன்று வரை சிறுபான்மை மக்களுக்காகவும்,பிற்படுத்தப்ப்பட்ட மக்களுக்காகவும், ஆதி திராவிட மக்களுக்காகவும், பழங்குடி மக்களுக்காகவும், மலைவாழ் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் அந்த மக்களுக்காக பல போராட்டங்களையும், பல சலுகைகளையும், நல்ல பல திட்டங்களையும் தந்து பாதுகாவளர்களாக இருப்பது திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான்..!! இந்த மக்களுக்கு எதிரான பா.ஜ.க வின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டப் பின் கடுமையான எதிர்ப்பை அந்த கட்சிக்கு எதிராக கொண்டு செல்லும் தார்மீக பொருப்பு திராவிடர் கழகத்துக்கும், நமது திராவிட முன்னேற்றக் கழகத்திற்க்கும்தான் மற்ற இயக்கத்தை விட அதிகளவு உள்ளது. இருந்தும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் நமது திராவிட முன்னேற்றக் கழகம் பா.ஜ.க. வை ஆதரிக்கும் என்று எழுதுவதால் எங்களை பிற இயக்கத்தாலும், எந்தக் கட்சிகளையும் சாராத சில நடுநிலைவாதிகளாலும் கேட்கப்படும், விமர்சிக்கப்படும், அர்ச்சிக்கப் படும் வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாதவை..!! தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் சாணக்கியர், பெரியாரின் பிள்ளை, அண்ணாவின் தம்பி, உடன் பிறப்புகளுக்கெல்லாம் சகோதரர். அவர் தெளிவான முடிவை எடுத்து என்றென்றும் இந்த நூற்றாண்டின் வரலாற்று நாயகன் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்வார் என்பது நிச்சயம்..!!.

No comments:

Post a Comment


Labels