வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



06/09/2013

ராசாவைப் பலிகடாவாக்க மாட்டோம்


அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைப் பலிகடாவாக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியது: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் திமுக சார்பில் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. இது ஆ.ராசாவைப் பலிகடாவாக்கச் செய்யப்படும் முயற்சியா என்று கருணாநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நாங்கள் யாரையும் பலிகடாவாக்க மாட்டோம். ராசாவைப் பலிகடாவாக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தர மாட்டோம்.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப் படுகின்றனர்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைகள் முடிந்து அறிக்கை கொடுக்கவுள்ள நேரம் இது. அதில் பிரச்னை ஏற்படாமல் இருப்பது நல்லது என்றார் கருணாநிதி.
ராகுல்காந்தியிடம் கனிமொழி கூட்டணி தொடர்பாகப் பேசியதாகச் செய்தி வந்துள்ளதே என்ற கேள்விக்கு, அதில் உண்மையில்லை என்றார் கருணாநிதி.
சேது சமுத்திரத் திட்டத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படிதான் செயல்பட முடியும் என்று காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர் ஒருவர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு உதவியாக மத்திய அரசு அளிக்கும் கருத்தும் இருக்க வேண்டும்.
சேது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பற்றி ஞானதேசிகன் கவலைப்படத் தொடங்கியிருப்பது பாராட்டத்தக்கது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels