வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



06/09/2013

காவிரியில் புதிய அணைகளை கட்டுவதற்கு கர்நாடகம் திட்டமிட்டிருந்தால் 

அதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர் 

கூறியுள்ளார்.


தலைவர் கலைஞர் கேள்வி பதில் அறிக்கை: 

கேள்வி :- வல்லூர் அனல்மின் நிலையத்தின் 2ம் பிரிவு இன்னும் இரண்டொரு மாதங்களில் செயல்பாட்டிற்கு வந்து விடும் என்று கூறப்படுகிறதே?

பதில் :- பொன்னேரிக்கு அருகில் உள்ள வல்லூரில் ரூ. 9 ஆயிரம் கோடி செலவில், தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 3 அலகுகளை அமைக்க திமுக ஆட்சி யில் முடிவு செய்து, 2008ம் ஆண்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. டிசம்பர் மாதத்தில் முதல் பிரிவு துவங்கி 300&350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2ம் பிரிவு இரண்டொரு மாதங்களில் அந்தப் பணிகளும் முடிவுற்று மின் உற்பத்தி தொடங்கும். அதன் தொடர்ச்சியாக 3ம் பிரிவும் செயல்பாட்டிற்கு வந்துவிடும். 

கேள்வி :- அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, தூக்குத் தண்டனை கூடாது என்ற உங்கள் கருத்தினை பலர் ஆதரித்ததாகச் செய்தி வந்ததே?

பதில் :- ஆமாம், அந்தக் கருத்தின்படி இந்திய வாக்காளர்களில் பெரும் பகுதியினர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டு மென்று கருத்து தெரிவித்துள்ளனர். 18 மாநிலங்களில் உள்ள 267 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. 

அதன்படி அகில இந்திய அளவில் 40 சதவீதத்தினர் முழுவதுமாகவோ, ஓரளவிற்கோ தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், ஆயுள் தண்டனை போதும் என்றும் கூறியிருக்கிறார்கள். நகரத்தில் வாழ்வோரில் 47 சதவீதத்தினரும், இளைஞர்களில் 43 சதவீதத்தினரும் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மரண தண்டனை தொடர வேண்டு மென்று இதைவிடக் குறைவானவர்களே கூறியதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.


கேள்வி :- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தற்போது 30% பணியிடங்கள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறதே?

பதில் :- தமிழகத்தில் 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. 2012 மே மாதம் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 3,120 உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 22 கல்லூரி களில் உள்ள 500க்கும் குறைவான பணி இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாம். ஆசிரியர் பணி இடங்கள் இவ்வாறு உரிய காலத்தில் நிரப்பப்படாமல் இருப்பதால், பெரும்பாலான கல்லூரிகளில் வகுப்புகள் முறையாக நடப்பதில்லை என்றும்; ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு உள்நோக்கத்தோடு ஏதோ புதிய நடைமுறையை புகுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

கேள்வி :- தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே?

பதில் :- மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் குமாரி செல்ஜா மக்களவையில் கூறும் போது, இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை தனியார் நிறுவனங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறோம். அவர்கள் இதனை தீவிரமாக கருத்தில் கொள்ளாவிட்டால் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். 2006ம் ஆண்டு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின் போதே, திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்; இதை நடைமுறைப்படுத்த விரைந்து ஆவன செய்ய வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறேன்.முதல்வர் ஜெயலலிதா 1&9&2013ல் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவுப் பிரச்னையில் நீங்கள் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறாரே?விரிவாக நான் அறிக்கை விடுத்திருந்தேன். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பிரதமரிடம் நேரில் பேசுவதாகவே பேட்டியளித்தார். மாநிலங்களவையில் கூட, திமுக, அதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். 

ஆனால் இதற்காக முதலில் பதைபதைத்து அறிக்கை விட வேண்டிய தமிழக அரசும், அதன் முதல்வரும் இந்த நேரம் வரை வாய் திறக்கவில்லை என்பதில் இருந்தே கச்சத்தீவுப் பிரச்னையில் உண்மையில் துரோகம் இழைப்பவர்கள் யார் என்று தெரியவில் லையா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்ன? 

கேள்வி :- கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் நீர் மின்நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருப்பதை குறிப்பிட்டு, தமிழக முதல்வர் அப்படி எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?

பதில் :- கர்நாடக அரசு அப்படிப்பட்ட முயற்சிகளில், அதாவது 3 அணைகளைக் கட்டுவதற்கான ஏற்பாட்டில் ஈடுபடுமேயானால் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று; திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே, மேகதாது திட்டத்தை தேவகவுடா கர்நாடக முதல்வராக இருந்த போது, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவித்த போதே தமிழக அரசின் சார்பில் அதை கடுமையாக எதிர்த்தவன் நான். இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறேன். இந்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்படி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவிடம் தெரிவித்திருக்கிறேன். 

இவ்வாறு தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels