வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



27/09/2013

நம் தலைவர் கலைஞர் மற்றும் தளபதி ஆகியோரின் பெருமைகளை முன்னெடுத்துச் சென்று அதை மக்கள் மன்றத்தில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் பரப்புரை செய்து, அவர்களது பிம்பங்களை உன்னதமான ஒரு பொக்கிஷமாக இளைஞர்கள் மனதில் பதியம் போடுவதும் ஒரு ஆகச் சிறந்த கழகப்பணியாகும். 

நம் கழக எதிரிகளான ஆரியப்படையினர், நம் கழகத்தை அழித்தொழிக்க போர் தொடுக்கும் போது, முதல் கட்டமாக செய்வது நம் தலைவர்களின் பிம்பங்களை சிதைப்பது தான். அதை நாம் தகர்த்தெறிந்து, நம் கழகம் முன் எப்பொழுதையும் விட சிறப்பாக வெற்றி நடை போடுவதற்கு தலைவர் கலைஞர் மற்றும் அன்புத் தளபதி ஆகியோரின் செயல்பாடுகளை உயர்த்தியெல்லாம் சொல்லத் தேவையில்லை, உள்ளது உள்ளபடி சொன்னாலே போதும்.... நம் கழகம் புத்துணர்வுடன் விண்ணில் பறக்கும்.....!!!

அப்படிப்பட்ட அருமையான உன்னத பணியினை, நம் தலைவர் கலைஞர் அவர்கள் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் மத்தியில் ஆற்றிய வரலாற்றில் நிலை பெற வேண்டிய உரையினை ஒரே நூலாகத் தொகுத்து ஒவ்வொரு கழக உடன்பிறப்புக்களின் இல்லங்களிலும் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூலினை....

நம் கழகத்தின் மாணவரணி மாநிலச் செயலாளர் மதிப்பிற்குறிய அண்ணன் கடலூர் இள. புகழேந்தி அவர்கள் உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். அந்த நூலினைப் பற்றிய “நூல் திறனாய்வு கருத்தரங்கம்” நிகழ்விற்கான அழைப்பினைத்தான் மாணவரணி மாநில துணை அமைப்பாளர் தோழர் பூவை. ஜெரால்டு அவர்கள் இங்கே பிரசுரித்திருக்கின்றார்கள்.

வாய்ப்புள்ள நம் கழக உடன்பிறப்புக்கள் அனைவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் மற்றும் தளபதி அவர்களின் புகழ் பரப்பும் உன்னதமான பணியில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment


Labels