திருக்கழுக்குன்றம் கோவிலில் கலைஞர் கல்வெட்டு அகற்றம் : தி.மு.க. ஆர்ப்பாட்டம் ரத்து
திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் தாழக்கோவிலில் 1971–ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணி தொடக்க விழாவில் அப்போதைய முதலமைச்சரான தி.மு.க. தலைவர் கலைஞர் நேரில் சென்று கோவில் திருப்பணியை தொடங்கி வைத்தார்.
இந்த திருப்பணி தொடக்க விழா நினைவாக அமைக்கப்பட்ட கல்வெட்டை அப்போது கலைஞர் திறந்து வைத்தார். கல்வெட்டில் கலைஞர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த கோவில் குட முழுக்கு விழா நாளை (15–ந்தேதி) நடைபெறுகிறது. இந்த நிலையில் குடமுழுக்கு கல்வெட்டை அமைப்பதற்காக ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த கலைஞர் கல் வெட்டை அவசர அவசரமாக இரவோடு இரவாக அகற்றினார்கள்.
இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சினையை மாவட்ட கலெக்டர் மற்றும் அறநிலை யத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் கொண்டு சென்றார். கல்வெட்டை அதே இடத்தில் வைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் திருக்கழுக் குன்றத்தில் பதட்டமான சூழ்நிலை உருவானது.உடனே அதிகாரிகள் அகற்றப்பட்ட கருணாநிதி கல்வெட்டை அதே இடத்தில் நேற்று கொண்டு வந்து வைத்தனர். இதனால் தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment