திமுக இளைஞர் அணி கூட்டம் : தீர்மானங்கள் - படங்கள்
தி.மு.க. இளைஞர் அணி கூட்டம் இன்று காலை சென்னை, அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில், கழகப் பொருளாளரும், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் : 1
தந்தைப் பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக உதயமான நாள் ஆகியவை இணைந்த “முப்பெரும் விழா” கருணாநிதி தலைமையில் ஆண்டு தோறும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் தொடர்ச்சியாக, தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் தமிழகமெங்கும் திமுகவின் கொள்கைகளையும், கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் மக்களிடையே விளக்கிடுவதோடு, நிர்வாகத்திறனற்ற ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் அவலங்களை பட்டியலிட்டு அவைகளை எளிய முறையில் அச்சிட்டு, வீடு வீடாக விநியோகிப்பதோடு, ஆங்காங்கே பல்வேறு கோணங்களில் வியூகம் அமைத்து செயலாற்றிட இன்றே திட்டமிட்டு, பிரச்சாரப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்வதோடு, முதற்கட்டப் பிரச்சாரப் பணிகளை 24-9-2013ஆம் தேதி முதல் 30-9-2013ஆம் தேதி வரை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு, தமிழகம் முழுவதும் நடத்திட கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 2
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் கருணாநிதியின் பிறந்தநாளினை கொண்டாடிடும் வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெறும் மாணவ,மாணவியர்க்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோலவே பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளினை கொண்டாடிடும் வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்குபெறும் பேச்சுப் போட்டி-கட்டுரைப் போட்டி-கவிதை ஒப்பித்தல் போட்டி ஆகிய போட்டிகளை மாவட்ட அளவிலான முதல்நிலைப் போட்டிகளை அக்டோபர் 19, 20 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் முதல் கட்டமாகவும், அக்டோபர் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் நடத்தி, மாநில அளவிலான போட்டிகளை நவம்பர் 9, 10 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 3
பேரறிஞர் அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாளினையொட்டி தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான முதல் நிலைப் பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகளில் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்பதற்கு ஏற்றவாறு, ஒவ்வொறு மாவட்டத்திலும் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சென்று ஆசிரியப்பெருமக்களையும், மாணவச்செல்வங்கள் அவர்தம் பெற்றோர்களையும் அணுகி நிகழ்ச்சி விவரங்களை முறையாக தெரிவிப் பதுடன் அதிக அளவில் மாணவச் செல்வங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிக ளின் ஒத்துழைப்போடு எழுச்சியுடன் நடத்திட வேண்டுமென அமைப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment