வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

04/05/2016

ஏமாற்றாதே, ஏமாற்றாதே.. ஏமாறாதே, ஏமாறாதே.. ஜெயலலிதாவிற்காகவே எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார்: ஸ்டாலின்


இந்தியாவிலேயே ஊழலுக்கு 4 வருடம் சிறை தண்டனை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே சொந்த மக்கள் துயரத்தில் இருக்கும் போது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா. இந்த ஜெயலலிதாவிற்காகவே அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர்., “ஏமாற்றாதே, ஏமாற்றாதே.. ஏமாறாதே, ஏமாறாதே’ என்று பாடியிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துப் பேசினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதியில் உள்ள தம்மம்பட்டியில் திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷிணியை ஆதரித்து பேசிய மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ, கவலையே படாத, சிந்திக்காத ஒரு ஆட்சியை ஜெயலலிதா நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில், அமைதியும் இல்லை; வளமும் இல்லை; வளர்ச்சியும் இல்லை. ஆனால் மேடை மேடையாக கிளிப் பிள்ளை போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகம் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்தது.

மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டார்கள்.
2000 -கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
400க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காவிரியில் இதுவரை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கவில்லை.
கெயில் திட்டத்தால் இந்த மேற்கு மாவட்ட விவசாயிகள் அனைவரும் வேதனையில் இருக்கிறார்கள். அத்திட்டத்தை எதிர்த்து அதிமுக எம்.பி.க்கள் குழு டெல்லி செல்லவில்லை.
முல்லைப் பெரியாறு அணைக்கு C.I.S.F பாதுகாப்பு கிடைக்கவில்லை.
அதையெல்லாம் விட கொடுமையாக இன்றைக்கு லட்சக்கணக்கான மாணவர்கள், வருங்கால இளைய தலைமுறையினர் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வால் தடுமாறி நிற்கிறார்கள்.

இதையெல்லாம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஜெயலலிதா இன்று ஊர் ஊராக பொய்களை பேசி வருகிறார்.
ஆக, ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக போலீசார் துணையோடு, அதிகாரிகளின் உதவியோடு அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் பணம் பதுக்கப்படுகிறது. இதை அறிந்த தேர்தல் ஆணையம் சில போலீஸ் அதிகாரிகளை மாற்றியவுடன், அதுகூட முழுமையாக மாற்றவில்லை இருந்தாலும் அதிமுக எம்.பி.க்கள் குழு, அதுவும் தம்பித்துரை தலைமையில் கேரளாவுக்கு ஓடுகிறார்கள். அங்கு சென்று டெல்லி தேர்தல் கமிஷனரை சந்தித்து, அதிகாரிகளை மாற்றுவது தவறு என்று வாதிடுகிறார்கள். ஆக இனி பணம் கொடுக்க முடியாது என்பதால் ஆர்.கே. நகர் உட்பட 234 தொகுதிகளிலும் தோல்வி உறுதி என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

இதே அதிமுகவினர் 2011 தேர்தலில் தி.மு.க. ஆட்சி நடந்தபோது அதிகாரிகளை மாற்றினார்கள். அப்போது அவர்களை மாற்ற வேண்டாம் என்று நாங்கள் சொல்லாமல், தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றுதான் சொன்னோம். அப்போது எந்த கட்சியும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, 144 அமுல்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் 2011 மற்றும் 2014 தேர்தல்களில் 144 தடையுத்தரவு போட்டு தேர்தலை நடத்தப்பட்டது.

டான்சி ஊழல் வழக்கு வந்தபோது ஜெயலலிதாவுக்கு தண்டனையும் கிடைத்து பதவியும் போனது. இப்போது எப்படி பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் பதவி போனதோ அதே போல அன்றும் பதவி போனது. பிறகு விடுதலை பெற்றார். அந்த விடுதலை எப்படி கிடைத்தது என்றால், அரசுக்கு சொந்தமான நிலத்தை வாங்கியது தவறு, திருப்பி கொடுத்தால் விடுதலை என்று சொன்னதும், தான் திருடியதை ஒப்புகொண்டதால் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோல பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கு
வெளி நாட்டில் இருந்து வந்த பிறந்த நாள் பரிசு ஊழல் வழக்கு
சொத்துக் குவிப்பு வழக்கு

என்று பல்வேறு ஊழல் வழக்குகளை மூடி மறைத்து விட்டு, “மகாராணி” போல ஜெயலலிதா ஊழல் பற்றி பேசுகிறார்.
வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியபோது, ஒட்டியானம் சகிதமாக உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் உலா வந்ததை நகை கடையே நடந்து வருதே என்று பேசிக்கொண்டார்கள். அந்தளவுக்கு கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

அதுமட்டுமல்ல மகாமகம் குளத்தில் உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் நாற்காலி போட்டு அமர்ந்தபடி, இருவரும் இருவரும் மாறி மாறி வெள்ளி குடத்தில் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றி கொண்டார்கள். இதெல்லாம் ஒரு முதல்வர் செய்யும் வேலையா ? 

”ஜெயா ஊற்ற சசி ஊற்ற, சசி ஊற்ற ஜெயா ஊற்ற” மாறி மாறி ஊற்றினார்கள். “அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினாள்” என்று சொல்வார்களே அதைப்போல நடந்தது. அதை முற்றும் துறந்த முனிவர்களும் நோக்கினார்கள். இந்த காட்சியை பார்க்க முந்தியடித்து வந்த பல நூறு பேர் இறந்தார்கள்.

இப்படிப்பட்ட ஜெயலலிதாவிற்கு கலைஞரைப் பார்த்து குடும்ப ஆட்சி என்று சொல்ல என்ன தகுதியிருக்கிறது. அவர் அடித்த ஊழல் பணத்தில்,

சூப்பர் டூப்பர் நடத்தி பைனான்ஸ் தொழில்
ஆஞ்ஜநேயா பிரின்டர்ஸ் நடத்தி பிரின்டிங் தொழில்.
ஊழல் பணத்திற்கு “நமது எம்.ஜி.ஆர்” பத்திரிக்கை தொழில்.
தன் “குடும்ப” உறுப்பினர்களுக்காக ஜெயா தொலைக் காட்சி ஆரம்பித்து தொழில்
தனக்கும், சசிகலா குடும்பத்திற்கும் மிடாஸ் மதுபான ஆலை தொழில்.
இளவரசியின் மகனுக்காகவே 1000 கோடி ரூபாயில் ஜாஸ் சினிமா தியேட்டர்களை மிரட்டி வாங்கி சினிமா தொழில்.

ஏற்கனவே ஊழல் செய்து 4 ஆண்டு சிறை 100 கோடி ரூபாய் அபராதம் விதித்த பிறகும், 1000 கோடியில் சினிமா தியேட்டர்களை வாங்குகிறார்கள் என்றால், இப்படி பதவியை பயன்படுத்தி ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக மட்டும் ஆட்சி செய்கிறார்கள். மேலும்,

முட்டை வாங்கியதில் 500 கோடி ஊழல்,
ஆவின் பாலில் 1000 கோடி ஊழல்,
லேப்டாப் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ஊழல்.
ஓடாத மிக்ஸி, கிரைண்டர், பேன் கொடுத்து 8 ஆயிரம் கோடி ஊழல்,
கிரானைட்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஊழல்,
மின்கொள்முதலில் 1 லட்சம் கோடி ஊழல்,
தாதுமணலில் 1 லட்சம் கோடி ஊழல்,
இப்படி இந்தியாவிலேயே ஊழலுக்காக 4 ஆண்டு சிறை 100 கோடி அபராதம் பெற்று பதவியிழந்த இந்தியாவின் ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா.
இந்தியாவிலேயே ஊழலுக்கு 4 வருடம் சிறை தண்டனை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா.
“போட்ட கையெழுத்து என்னுடையது அல்ல” என்று இந்தியாவிலேயே சொன்ன ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா.
“ஊழல் பணத்தை பிறந்த நாள் பரிசாக வாங்கி” தன் வங்கிக் கணக்கிலேயே போட்டுக் கொண்ட ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா.
“தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன் கையெழுத்தே இல்லை” என்று கூறி உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா.
இந்தியாவிலேயே சொந்த மக்கள் துயரத்தில் இருக்கும் போது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா.

இப்படிப்பட்டவர் திமுகவை பற்றி பேசுகிறார். 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டேன் என்கிறார். எந்தெந்த கம்பெனிகளுடன் போட்டார் ? எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார் ? பட்டியல் வெளியிடத் தயாரா ? 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு 98 புரிந்துணர்வுகள் போடப்பட்டது என்கிறார். இதிலாவது எத்தனை கம்பெனிகள் வந்தன ? எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது ? சொல்லுவதற்கு தெம்பு, திராணி, துப்பு இருக்கிறதா ?
2400 விவசாயிகள் தற்கொலை,
நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்தார்கள்.
அதிமுக ஆட்சியில் 14 மணி நேரம் மின்வெட்டு,
தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன,
சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

“மூன்றே மாதத்தில் மின் வெட்டு பிரச்சினையை தீர்ப்பேன்” என்ற ஜெயலலிதா, இன்றும் மின் வெட்டு பிரச்சினையை தீர்க்கவில்லை. திடீரென்று 7485 மெகாவாட் மின்சாரத்தை அதிமுக ஆட்சியில் தயாரித்து விட்டதாக அபாண்ட பொய்யை கோவையில் அவிழ்த்து விட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் ஒரு புதிய மின்திட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஒரு மெகாவாட் மின்சாரம் கூட தயாரிக்கப்படவில்லை. இந்த உண்மையை மறைக்க தி.மு.க. மின் திட்டங்களில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை தன் ஆட்சியின் சாதனையாக சொந்தம் கொண்டாடுகிறார்.

இந்த ஜெயலலிதாவிற்காகவே அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர்., “ஏமாற்றாதே, ஏமாற்றாதே.. ஏமாறாதே, ஏமாறாதே’ என்று பாடியிருக்கிறார்.

திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது அதை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றத்தை அணுகாத காரணத்தால் நடத்த முடியாமல் போய் விட்டது.

நமக்கு நாமே பயணத்தின் போது அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நண்பர்களை சந்தித்தபோது, உறுதியாக ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்போம், மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும், மா நில அரசு உறுதுணையாக இருக்க வேண்டும், இல்லையென்றால் மதுரையில் என் தலைமையில் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தோம். அதன் பிறகு மத்திய அரசு இதில் தலையிட்டு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்ததால் போராட்டம் தள்ளி போடப்பட்டது.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டை சட்டரீதியாகவும் கொண்டு வர இந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கழக அரசு அமைந்ததும் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, தான் சொன்னதையெல்லாம் நிறைவேற்றி விட்டதாகவும், சொல்லாததை கூட நிறைவேற்றி இருப்பதாகவும் ஜெயலலிதா ஊர் ஊராகச் சென்று சொல்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுகவா அல்லது அதிமுக வா என்று பொதுமேடையில் ஆதாரங்களோடு விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா தயாரா. ஆக எல்லா இடங்களிலும் பொய்களை மட்டுமே பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்

No comments:

Post a Comment

Labels