வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

22/04/2015

மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜரானது முறைகேடானது: உச்சநீதிமன்ற அமர்வு திட்டவட்டம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜரானது முறைகேடானது தான் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் முன் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் தமது வாதத்தை தொடர்ந்தார். பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிகாரம் உள்ளதாக கூறினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கு கர்நாடக  மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பிறகு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று தெரிவித்தனர். பவானி சிங் ஆஜரானது முறைகேடானது  தான் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் ஆனாலும் மறு விசாரணைக்கு உத்தரவிட்டால் விசாரணை நீதிபதியை சந்தேகிக்கும் படி ஆகிவிடும் என்றனர். பவானி  சிங் முறைகேடாக வாதாடிய போதிலும் நீதிபதிகள் அப்படியே ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கமாட்டார் என்று கூறிப்பிட்ட நீதிபதிகள் மற்ற விசயங்களையும் ஆய்வு செய்து தான் அவர் தீர்ப்பு அளிப்பார் என்று தெரிவித்தனர். தற்போதைய நிலையில் ஏன் மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினர். 

அன்பழகன் தரப்பு எழுத்துபூர்வமான வாதங்களை முன்வைக்க விரும்பினால் அதற்கு தாங்களாக முன்வந்து அனுமதி வழங்குவதாக கூறினார். இதுபற்றி அன்பழகன் தரப்பு கருத்தை நீதிபதிகள் கேட்ட போது நீண்ட வாதத்துக்கு பின் அதை வழக்கறிஞர் அந்தி அர்ஜீனா ஏற்றுக்கொண்டார். வரும் திங்கள் கிழமைக்குள் எழுத்துபூர்மான வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். கூடுதல் வாதம் செய்ய விரும்பினால் மனு அளிக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் தீர்பை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Labels