வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

19/09/2014

பெரம்பலூர் தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு திமுக சார்பாக நிவாரண உதவி!


பெரம்பலூர், செப்.19:
பெரம்பலூரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கு திமுக சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் நகராட்சியில் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் அமைந் துள்ள திருநகரில் கடந்த 17ம்தேதி மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் 6 குடிசைவீடுகள், 1 ஓட்டுவீடு, 1 கல்நார்வீடு உள்பட மொத்தம் 8 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் தரேஸ் அகமது, டிஆர்ஓ ராஜன்துரை, சப்&கலெக்டர், நகராட்சித்தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று திமுக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா திருநகர் பகுதிக்குச் சென்று தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் ஆறுதல்கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் துரைசாமி, ஒன்றியச் செயலாளர் கள் ராஜ்குமார், ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிக்கண்ணன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் செந்தில்நாதன், வடக்குமாதவி அண்ணாதுரை, நகராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், பாரி, ஒஜீர், சபியுல்லா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
  மேலும் பெரம்பலூர் தூய பாத்திமா தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக பங்குகுரு அடைக்கலசாமி தலைமையில், அருட்சகோதரி ஆனந்தி, பள்ளித் தலைமை ஆசிரியை டெய்சி, உதவித் தலைமை ஆசிரியை புஷ்பா மற்றும் ஆசிரியைகள் நிவார ணப் பொருட்களை வழங்கினர்.

No comments:

Post a Comment

Labels