வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

27/08/2014

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்ற பணியில் தடையிட முடியாது: கர்நாடக ஐகோர்ட்


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதா தரப்பு மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துக் குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் பணியில் தடையிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு தடை கோரியும், சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டுச்சதி என்ற வாசகம் உள்ளது, இது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகையில் கூட்டுச்சதி என்ற வாசகத்தை சேர்த்துள்ளனர். அந்த வாசகத்தை நீக்க வேண்டும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோர் தரப்பில் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான வாதம், பிரதிவாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதற்கான தீர்ப்பை பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்கா, மூல வழக்கின் தீர்ப்பின்போது தருகிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு அளித்திருந்தனர். இந்த மனு புதன்கிழமை மாலை 3 மணிக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஜாவித் ரகீம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் பணியில் தடையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். 

மனு மீதான தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் மீண்டும் மீண்டும் கேட்டதால், வழக்கை வரும் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஜாவித் ரகீம் ஒத்திவைத்தார்

No comments:

Post a Comment

Labels