தமிழனுக்காகவும், தமிழ்மொழிக்காகவும்
பாடுபட்டு வருபவர் கலைஞர்: கனிமொழி பேச்சு
தஞ்சை மாவட்ட, நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கணேசமூர்த்தி வரவேற்றார்.
நகர தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உபயதுல்லா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளரும், மத்திய மந்திரியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில தலைவர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘’சிறப்பு மிக்க தமிழ் மொழிக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணித்த தியாகிகளுக் காகத்தான் இந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் மொழிக் காகவும், தமிழனுக்காகவும் இன்றள வும் பாடுபட்டு வருபவர் கருணாநிதி ஒருவர்தான். சமீபத்தில் மத்திய அரசு இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளில் சில மாற்றங் களைக் கொண்டு வந்தது.
அதில் கேள்வித்தாள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் தான் இருக்கும் என்று புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆங்கிலமும், இந்தியும் தெரிந்த மாணவ, மாணவிகள் எளிதில் தேர்வை எதிர்கொள்வார்கள்.
ஆனால் பல்வேறு திறமைகளும் இருந்தும் ஆங்கிலமும், இந்தியும் தெரியாத மாணவமாணவிகள் எத்தனை யோ பேர் இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றத்தால் அவர்களால் இந்த தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கலைஞர் ஒருவர்தான் மத்திய அரசுக்கு தனது எண்ணத்தை யோசனையாக எடுத்துக் கூறினார். கேள்வித்தாள் அந்தந்த மாநில மொழிகளிலும் இடம்பெற வேண்டும், அப்போதுதான் திறமையா னவர்களை வெளிக்கொணர முடியும் என்று அவர் மத்திய அரசு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மொழியை பாதுகாக்க உலக அளவில் நிலைநிறுத்த ஒவ்வொரு தமிழனும் பாடுபட வேண்டும். தமிழ னுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் இன்றளவும் பாடுபட்டு வருகின்ற நமது தலைவர் கலைஞரையும், தி.மு.க.வையும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதற்கு இன்றிலிருந்தே ஒவ்வொரு தி.மு.க. தொண்டரும் பாடுபட வேண்டும்’’ என்று பேசினார்.

No comments:
Post a Comment