கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்டாலின்
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் - கழகப் பொருளாளருமானதளபதி மு.க.ஸ்டாலின், தமது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர்கள் வழங்கினார்.
(8-2-2014) மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்காக கொளத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின் தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.5 இலட்சம் வீதம், ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
அந்த நிதியிலிருந்து, முதற்கட்டமாக கொளத்தூர் சட்டமன்றத தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இரு கால்களும் பாதிக்கப்பட்ட சுய தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் நான்கு பேர்களுக்கு, தலா 53 ஆயிரம் ரூபாடீநு வீதம் மொத்தம் 2.12 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார பொருத்திய ஸ்கூட்டர்களை கொளத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று (8-2-2014) கொளத்தூர், சட்டமன்றஉறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகடிநச்சியில் ஏ.பாலாஜி,.சுகுணா, வி.ருக்மாங் கதன்,கீ.கணேசன் ஆகிய நான்குமாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு அளித்தப்பேட்டியில் தளபதி மு.க.ஸ்டாலின் “1996ஆம் ஆண்டு தலைவர்கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்த போது, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட் டுத் திட்ட நிதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டுக்கு ரூ.2 கோடி வீதம் 6 கோடியில், ரூ. 5.64 கோடி ஒதுக்கீடு செடீநுயப்பட்டு, அப்பணிகளுக்கான திட்டங்கள், பேருந்து
நிலையத்திற்கு சில வசதிகள், நிழற்குடை அமைத்தல், அங்கன்வாடி மற்றும் சத்துணவுக் கூடங்கள் கட்டுதல், சமூக நலக் கூடங்கள் கட்டுதல், இடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், சாலைகள் சீரமைத்தல், மாநகராட்சியில்
பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், அரசு மருத்துவமனைக்கு சோலார் வசதி பொருத்துதல் என பல்வேறு பணிகளுக்கு ரிந்துரைக் கடிதங்கள் அனுப்பப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த ரூ. 5.64 கோடி நிதியிலிருந்து இதுவரை ரூ.18 இலட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, 66வது வார்டு, கிருஷ்ணா நகரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட செய்யப்பட்ட எஞ்சியுள்ள ரூ. 5.46 கோடி மதிப்பிலான திட்டம் இதுவரையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பாக, சட்டமன்றத்திலும் பேசிட அனுமதிப்பதில்லை. பேச முயற்சித்தால் அவையிலிருந்து வெளியேற்றப்படுகிறோம். எனவே சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, இந்தப் பிரச்சினை குறித்து
நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா? என ஆலோசித்து வருகிறோம்.” என்று மு.க.ஸ்டாலின் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன், வழக்கறிஞர் இரா.கிரிராஜன்,பகுதிச் செயலாளர் முரளி, மாமன்ற உறுப்பினர் ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன், வழக்கறிஞர் இரா.கிரிராஜன்,பகுதிச் செயலாளர் முரளி, மாமன்ற உறுப்பினர் ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment