வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/01/2014

எம்.ஜி.ஆர். ஆதரித்த திட்டத்தை இப்போது ஜெயலலிதா மறுக்கிறாரா? கலைஞர் கேள்வி!
திமுக தலைவர் கலைஞர் 08.01.2014 புதன்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே?
கலைஞர் :- சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் ஒரு மூத்த வழக்கறிஞரை தமிழக அரசின் சார்பில் முறையாக வாதாட வைக்க முன்வராத அ.தி.மு.க. அரசுதான் சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறது.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இதே ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில் பக்கம் 33இல், “தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும்.
இத்திட்டத் திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று திட்டவட்டமாகக் கூறி விட்டு, தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அவர் அ.தி.மு.க.வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களே ஆதரித்த திட்டத்தை இப்போது ஜெயலலிதா மறுக்கிறாரா?

No comments:

Post a Comment


Labels