வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/01/2014

ஜெயலலிதாவை தமிழக அமைச்சர்கள் வருங்கால பிரதமர் என்று புகழ்கிறார்களே? கலைஞர் பதில்!

 

திமுக தலைவர் கலைஞர் 08.01.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,
கேள்வி :- காவல் துறை, மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களை திருச்சி மத்திய சிறையில் நைஜீரியக் கைதிகள் சிறைப்பிடித்ததாக செய்தி வெளியாகியிருக்கிறதே?
கலைஞர் :- மலேசியாவைச் சேர்ந்த தமிழர் கருணைராஜை முகாம் சிறையிலே அடைப்பதற்காக காவல் துறை ஆய்வாளர்கள் நிக்சன், வரதராஜன், கியூ பிரிவு உதவி ஆய்வாளர் மாரிமுத்து, தலைமைக் காவலர் முருகன், முகாம் சிறப்பு வட்டாட்சியர் பெரியசாமி ஆகியோர் சென்ற போது, அவர்களை அந்தச் சிறையிலே ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த நைஜீரியக் கைதிகள் இருபது பேர் சிறைப்பிடித்துக் கொண்டார்கள். அதன் பின்னர் காவல் துறையின் உயர் அதிகாரிகள் சென்று சமரசம் பேசி அவர்களை மீட்டிருக்கிறார்கள். சிறைத் துறை அ.தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகிறது என்பதற்கு தக்கதோர் உதாரணம் இது.
கேள்வி :- 32 தமிழக மீனவர்கள் காவல் எட்டாவது முறையாக இலங்கையில் நீட்டிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர் :- அதனைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் எட்டாவது முறையாக பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஒரு செய்தியும் ஏடுகளில் வந்திருக்குமே!
கேள்வி :- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக அமைச்சர்கள் எல்லாம் வருங்கால பிரதமர் என்று புகழ்கிறார்களே?
கலைஞர் :- அப்படியாவது தமிழகத்திற்கு விடிவு வராதா என்று அவர்களும் நினைக்கிறார்கள் போலும்! இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels