திருச்சி என்றாலே, திருப்புமுனை
மாநாடுதானே? (4)
கழகம் நடத்திய மாநாடுகளை - ஒவ்வொரு மாநாட்டிற்கும் தலைமையேற்று நடத்தியவர்களை, மாநாட்டுத் திறப்பாளர்களை, அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரைகளைத் தொகுத்தாலே கழக மாநாடுகளின் வரலாறு குறித்த மிகப் பெரிய நூலாகும்.
திருச்சியில் இரண்டாவது மாநில மாநாட்டை 1956இல் நடத்திய கழகம், மூன்றாவது மாநில மாநாட்டை மதுரையில் 1961ஆம் ஆண்டு ஜூலை 13, 14, 15, 16 ஆகிய நாட்களிலும், நான்காவது மாநில மாநாட்டை சென்னையில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 ஜனவரி 1 ஆகிய நாட்களிலும் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடத்தியது.
மதுரையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மூன்றாவது மாநில மாநாட்டை அருமை நண்பர் முத்து அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து நடத்தினார். மாநாட்டின் திறப்பாளர் திரு. கே.ஏ. மதியழகன். கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் நான் அந்த மாநாட்டின் பொருளாளராக இருந்தேன். மாநாட்டின் முதல் நாள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.
இராசேந்திரன் நடித்த "தென் பாண்டி வீரன்” நாடகமும், இரண்டாம் நாள் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி நடித்த "தமிழ் வாழத் தலை கொடுத்தான்” நாடகமும், மூன்றாம் நாள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "சுமை தாங்கி” நாடகமும் நடைபெற்றன.
மதுரையில் நடைபெற்ற அந்த மூன்றாவது மாநில நாட்டில், "விடுதலை வேட்கை” என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அந்த மாநாட்டிற்குச் சிறப்புப் பார்வையாளராக வந்திருந்த கர்நாடக மாநில உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. மேடப்பா
அவர்கள் தி.மு. கழகத்தைப் பற்றி ஆங்கிலத்திலே சிறப்பானதோர் உரையாற்றினார். அந்த மாநாட்டில் கழகப் பொருளாளர் என்ற முறையில் நிதி வசூல் பற்றி தெரிவித்து எனக்குத் தரப்பட்ட தலைப்பின் மீது உரையாற்றினேன். அண்ணா அவர்கள் பேசும்போது, தேர்தல்கள் பற்றியும் கூட்டணி பற்றியும் குறிப்பிட்டது முக்கியமானதாகும். அது வருமாறு :- "தேர்தல்கள், மிக முக்கியமானவைதான்; அதற் காகத் தேர்தல் நன்மையைக் கருதி எந்தக் கட்சியும், தனது அடிப்படைக் கொள்கைகளை விட்டுவிட முடியாது. 1956ஆம்
ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில் கூடியிருந்த மக்கள், தி.மு.கழகம் தேர்தலில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். கழகம் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, 17 இலட்சத்திற்கும் அதிகமான வாக்கு களைப் பெற்று, 15 உறுப்பினர்களை சட்டசபையில் வீற்றிருக்கச் செய்தது. தி.மு. கழகம் எதிர்க்கட்சியாக இருந்து ஆற்றி வந்திருக்கும் அரும்பணிகள் அனைத் தையும், நடுநிலையாளர் அனைவரும் நன்குணர்வர். சட்டமன்றத்தில் நம்மவர் ஆற்றியுள்ள பணிகள் மக்களின் நன் மதிப்பைப்
பெற்றிருக்கின்றன. கழகம், தனது பாராளுமன்றப் பணியைத் தொடர்ந்து நடத்து வது என்ற
முடிவுக்கு வந்துள்ளது. அடுத்துவரும் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கையை முன் வைத்துப் போட்டியிடும்”
என்றெல்லாம் அந்த மாநாட்டின் முன்னுரையாகத் தெரிவித்ததோடு, "நீண்ட நேரம் இன்று உங்களுக்கு நல்லுரையாற்றும் நிலையில் நான் இல்லை. நான் இங்கு உங்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், என் உள்ளமும் நினைப்பும் அண்மையில் திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய நினைவாகவே இருக்கிறது. நான் விரைவில் அங்கு செல்ல வேண்டியவனாக இருக்கிறேன். எனவே, எனது உரையை முடிப்பதற்கு முன்பு நீங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்களோ, அதைப் பெற்றுக் கொண்டுதான் அங்கு செல்லப்போகிறேன். அது நாம் அளிக்கும் முதல்
உதவியாக இருக்கக்கூடும். மக்களின் இன்பதுன்பமே நமது நோக்கமாகவும், கவலையாகவும் இருந்து வருகிறது. தஞ்சைப் புயல் நிவாரண நிதிக்குத் தம்பி கருணாநிதி எடுத்துக் கொண்ட முயற்சியை நாம் மறக்க முடியாது. இருபத்து ஐயாயிரம் ரூபாய் திரட்டித்
தந்தார். வேட்டி, புடவையாக இவைகளை அளித்தோம். இப்பொழுதும் நாம் நமது கடமையை நமது மக்களுக்காகச் செய்ய வேண்டி வந்துள்ளது. வெள்ள நிதிக்கு நிதி அளிப்பவர்கள் உடன்வந்து என்னிடம் அளிக்கலாம்” என்றெல்லாம் உரையாற்றினார். (பூம்புகார் பதிப்பகம் வெளியிட் டுள்ள பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் என்ற நூலில் அண்ணா அவர்களின் இந்தப் பேச்சு இடம் பெற்றுள்ளது).
மதுரை, திருப்பரங்குன்றத்தில் 1961ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது மாநில பொது மாநாட்டிற்கும், 1966ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது மாநில பொது மாநாட்டிற்கும் இடையில் தி.மு. கழகத்தின் சார்பில் 20 மாநாடுகள் - 8 மாவட்ட மாநாடுகள்; 5 இந்தி எதிர்ப்பு மாநாடுகள்; 3 மாணவர் தி.மு.க. மாநாடுகள்; 3 வட்டார தி.மு.க. மாநாடுகள்; 1 தேர்தல் சிறப்பு மாநாடு என்ற பெயர்களில் நடைபெற்றன. நான்காவது மாநில பொது
மாநாடுதான் விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாநாடு. 1967 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற மாநாடு அது. திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.
அண்ணா அவர்கள் தலைமை தாங்கிய அந்த மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றிடும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. கொடியேற்றிடும் பொறுப்பு காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. கழகத்தின் வளர்ச்சிக்கென
தங்கள் உயிரையே காணிக்கையாக்கிய தீரமறவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தியாகிகள் கோட்டத்தினை சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு திறந்து வைத்தார். கலைக்
கண்காட்சியினைத் திறந்து வைத்திடும் பொறுப்பை திரு. ஏ. கோவிந்தசாமி ஏற்றிருந் தார். அந்தப் பொது மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக சென்னைத் தீவுத் திடலை விட்டுப் புறப்பட்ட அன்றைய ஊர்வலத்தில் ஏறத்தாழ மூன்று இலட்சம் பேராவது கலந்து கொண்டிருப்பர். அது சென்றிட்ட பாதையின் இரு மருங்கிலும் மாடிக் கட்டிடங்களிலும் மரக்கிளைகளிலும்
அமர்ந்த வண்ணம் அதன் அணிவகுப்பு மாட்சியைப் பார்த்துக் களித்திட்டோர் எண்ணிக்
கையோ பல இலட்சம் இருக்கும்.
மாநாட்டின் பொறுப்பாளர் நாவலர்; வரவேற்புக் குழுத் தலைவர் - நான் அன்பொழுக "நீலம்” என்று அழைக்கின்ற நீலநாராயணன் - செயலாளர்கள் மன்னை ப.நாராயணசாமி, ஈ.ஆர். கிருஷ்ணன், சி.வி.எம். அண்ணாமலை, கோ. செங்குட்டுவன் (இவர் யார் தெரியுமா? தற்போது நாடாளுமன்றக் கழகக் குழுவின் தலைவராக இருக்கும் தம்பி டி.ஆர். பாலுவின்
மாமனார் தான் இவர்) - தொண்டர் படைத் தலைவர் கே.எம். கண்ணபிரான் (கவிஞர் வேழவேந்தனின் மாமனார்) - தொண்டர் படைத் தலைவர்கள் சு. பாலன், எஸ்.வி. வேலு, நல்லதம்பி, சாகுல் அமீது, அலமேலு அப்பாதுரை.
பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய ஊர்வலம் இரவு 9.30 மணிக்குத்தான் போளூர் சுப்பிரமணியம் பெயரில் அமைந்த மாநாட்டுப் பந்தலை அடைந்தது. "தினமணி” நாளேடு அப்போதெல்லாம் நடுநிலை நாளிதழாக இருந்தது. அது அந்த ஊர்வலத்தைப் பற்றி எழுதும்போது, "சென்னை நகரில் தி.மு.க.வின் செல்வாக்கு எவ்வளவு என்பதைப் பற்றி வாக்குப் பெட்டிகள்தான் தீர்ப்பளிக்க முடியும். பிப்ரவரி (1967) கடைசி வாரத்தில் அந்தத்
தீர்ப்பு தெரிந்து விடும். ஆனால் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு தீர்ப்பளிக்க முடியுமென்றால் நகரில், தி.மு.க. வெற்றி பெற்று விட்டது என்று சொல்லி விடலாம். அவ்வளவு பிரும்மாண்டமான முறையில் ஊர்வலம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது” என்று தெரிவித்திருந்தது.
அந்த மாநாடு நடைபெறுவதற்கு ஒரு திங்களுக்கு முன்பு, மாவட்டங்கள் தோறும் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் பகல், இரவு பாராது, ஊன் உறக்கத்தை
அறவே மறந்து சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அந்த அலைச்சலோ அதனால் சாதாரணமாக ஏற்படும் களைப்போ சிறிதும் தெரிய வில்லை. ஆனால் தற்போது நம்முடைய பொருளாளர் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, "அய்யோ! இப்படி
அலைகிறானே” என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்தக் கூட்டங்களை முடித்து விட்டு நான் சென்னைக்குத் திரும்பினால், திரும்பிய அரைமணி நேரத்திற்குள்ளாக அண்ணாவின் அருகிலே இருப்பேன். ஒரு முறை அப்படித்தான். அவரைச் சந்திக்க சென்ற
என்னிடம் "ஏறு, காரிலே” என்றார். "எங்கே அண்ணா, எதற்கு அண்ணா?” என்றெல்லாம் கேட்கவில்லை, அப்படிக் கேட்டுப் பழக்கமும் இல்லை. அண்ணாவே தொடர்ந்தார்.
"மாநாட்டுக்காக ஓர் இடத்தைப் பார்த்து வைத்திருக் கிறேன். அதை உனக்கு காட்டிவிட வேண்டும் என்று நினைத்தேன். அங்கேதான் இப்போது நாம் போகிறோம்” என்றார் அண்ணா. மாநாட்டிற்காகப் பார்த்து அண்ணாவே தேர்ந்தெடுத்த இடத்தை என்னிடம் கொண்டு போய் காட்ட வேண்டும் என்பதற்காக அண்ணா என்னை அழைத்துச் சென்றாரே, அந்த நினைவே தற்போது என்னைக் கலங்க வைக்கிறது; கதறி அழ வேண்டும்
போலத் தோன்றுகிறது!
காரில் சில மைல்கள் கடந்த பிறகு, நின்றது. அண்ணா இறங்கினார். அது ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பரந்த வெளி. அதைக்காட்டி, "இதுதான் மாநாட்டிற்காக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம்” என்றார். எனக்கே சற்று மலைப்பாக, திகைப்பாக இருந்தது. பார்க்கும் இடம் எல்லாம் பள்ளங்கள், மேடுகள், குன்றின் முகடுகள் போல்
கற்களின் குவியல்கள். இடையிடையே மரம், செடி, கொடி, கள்ளிப் புதர்கள்! "இங்குதான் மாநாட்டை நடத்தியாக வேண்டும். இந்த இடம் மாநாடு நடைபெறுவதற்குரிய எழிலான பூமியாக மாற வேண்டும்” என்றார் அண்ணா. பிறகென்ன? அண்ணா ஆணையிட்டு விட்ட பிறகு, அதற்கு அட்டியேது? தயக்கம் ஏது? கழகத் தோழர்களின் கடின உழைப்பால், அந்த இடம் ஒரு சில நாட்களில் "நீலமேகம் நகர்” ஆகியது. அதுபற்றி மாநாட் டில் நான் குறிப்பிடும்போது, "நண்பர்களே! காடாகக் கிடந்த இந்த இடத்தை - கருநாகங்கள் ஊர்ந்து
கொண் டிருந்த இந்த இடத்தை - தொட்டால் தேளும், தீண்டினால் நட்டுவாக்கிளியும் வரவேற்றுக் கொண் டிருந்த இந்த இடத்தை பதினைந்தே நாட்களில் எழில் மிக்க பூமியாக, நீங்கள் எல்லோரும் அமர்ந்து களிக்கும் இடமாக, மாநாட்டுப் பந்தலாக மாற்றியிருக்கிறோம்.
இதே நேரத்தில் அறிஞர் அண்ணா ஆணையிட்டால் நடைபெறும் ஆட்சியினால் காடாகிப் போய்விட்ட இந்த நாட்டை, ஏன் எழில் மிக்க பூமியாக மாற்ற முடியாது என்று என்னரும் நண்பர்களே, நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்கள்! நீங்கள் கேட்கின்ற அந்தக் கேள்விகளின் எதிரொலி நாடாளுவோரின் செவிப் பறைகளைத் தட்டட்டும், அவர்கள் எல்லாம் நம் காலம் முடிவடைந்து விட்டது என்ற கணக்கைப் பார்த்துக்
கொள்ளட்டும், பிரிவுபசாரப் பத்திரத்தை தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வாங்கிக் கொள்ள அவர்கள் தயாராகிக் கொள்ளட்டும்” என்றெல்லாம் குறிப்பிட்டேன்.
தி.மு. கழக மாநாடு என்ற போதிலும், அதில் மூதறிஞர் இராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கேரள மாநிலத் தலைவர்களான முகமது கோயா, தங்கல் ஆகியோரும் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர். அந்த மாநாட்டில் ராஜாஜி பேசும்போது, "இந்த அணி நிச்சயம் வெற்றி பெறும். எனது வாழ்நாளில் எனது கட்சியை அல்லது கூட்டத்தைச் சேராத மக்கள் என்னிடம்
இவ்வளவு பற்று வைத்திருப்பதை நான் பார்த்ததே கிடையாது. அதை நான் இப்போது என் கண் முன்னால் காண்கிறேன். தி.மு.க. தம்பிகளுக்கும் அவர்களது பேரன்மார்களுக் கும் எனது மனப்பூர்வமான ஆசி” என்றார்.
அந்த விருகம்பாக்கம் மாநாட்டில்தான், கழகப் பொருளாளர் என்ற முறையில் பொதுமக்களிடமிருந்து திரட்டிய தேர்தல் நிதி பதினொரு இலட்சம் ரூபாயை அண்ணா அவர்களிடம் அளித்திடும் பெரும் பேற்றினைப் பெற்றேன். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், தேர்தல் நிதிக்கென வகுத்துக் கொள்ளப்பட்ட இலக்கு பத்து இலட்சம் ரூபாய்தான். அதனையே முழுமையாகத் திரட்டிட முடியுமா என்று நானே நெஞ்சம் குழம்பிய
நேரங்களும் உண்டு. ஆனால் அந்த இலக்கையும் தாண்டி ஒரு இலட்சம் கூடுதலாகவே அண்ணாவிடம் சேர்த்தேன். அதைப்பற்றி அண்ணா அவர்களே மாநாட்டில்
வேட்பாளர்களை அறிவிக்கும்போது குறிப்பிட்டார்.
"....... பதினொரு இலட்சம் ரூபாயை, தம்பி கருணாநிதி என்னிடம் தந்தார். அவர் பேசும்போது, "அந்தத் தொகையைச் சேர்க்க முடியுமா?” என்று தன் விழிகள் வியப்பால் விரிந்தன என்றார். "தம்பீ! உனக்கு "நிதி” என்று பெயரிட்டார்களே உன் தாயார், சும்மாவா வைத்தார்கள்? தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பொருள் உள்ளவை என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். உன் தாயார் உனக்கு "நிதி” என்று பெயரிட்டதே, உன்னை நாட்டு மக்கள் "நிதி"யாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றுதான். இன்றைக்கு இந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்திருந் தால், உனக்கு இட்ட பெயர் வீணாகி விடவில்லை என்று உன் தாயார் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்? பத்து லட்சம் ரூபாய் கேட்டதற்கு பதினொரு இலட்சமே கொடுத்திருக்கிறாய்! ஆனால் மக்கள் சிக்க வேண்டிய நேரத்தில் உன்னிடம் சிக்கியிருந்தால் நீ இன்னமும் அதிகம் சேர்த்திருப்பாய்” என்று அண்ணா அவர்கள் கூறியதோடு நின்றிடவில்லை.
1967 பிப்ரவரி திங்களில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட கழக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட போது, மற்ற
வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் அந்தந்தத் தொகுதிகளைக் குறிப்பிட்டு, அவைகளுக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்லி வந்த அண்ணா,
"சைதாப்பேட்டை. . .” என்று சொல்லி விட்டு கணப் பொழுது அமைதியாக இருந்தார். பின்னர் "பதினொரு இலட்சம்” என்றார். அந்த மாநாட்டுப் பந்தலிலே இருந்த அத்தனை பேரும் எழுந்து கரவொலி எழுப்பினர். அது நான் திரட்டிய நிதிக்காக அல்ல, அதை பேரறிஞர் அண்ணா அவர்கள் தன் நெஞ்சார அவருக்கே உரிய தனித் தன்மையோடு பாராட்டியதற்காக! இப்படி எத்தனை எத்தனையோ நினைவுகள் அலைஅலையாக வந்து
என்னை நெகிழச் செய்கின்றன! அனைத்தையும் விவரித்திட இங்கே இடம் போதுமா? கழகம் நடத்திய அந்த நான்காவது பொது மாநில மாநாடே மாபெரும் வெற்றி மாநாடாக மாறியது. தேர்தலில் தி.மு. கழகம் மாபெரும் வெற்றியைப் பெற்று, தமிழகத்தில்
மாற்றத்திற்கு வித்திட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறிட காரணமான மாநாடாகவும் அமைந்தது.
ஆனால் அந்த நான்காவது மாநில மாநாடுதான் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட கடைசி மாநாடு என்பது எங்களுக்கு அப்போது தெரியாமல்தான் போய்விட்டது.
நடைபெற்ற நான்காவது மாநில மாநாட்டைப் பற்றியே கூறிக் கொண்டிருந்தால், நடைபெற வேண்டிய பத்தாவது மாநில மாநாடு என்ன ஆவது? பத்தாவது மாநில
மாநாட்டின் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. தம்பி நேரு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பந்தல் சிவாவையும், ஓவியர் ஜெ.பி. கிருஷ்ணாவையும்
நேரிலேயே அழைத்துக் கொண்டு என்னிடம் வந்துவிட்டார். பந்தலைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களாக எடுத்து "ஆல்பம்” தயாரித்துக் கொண்டு வந்து காட்டினார். காலையிலேயே வந்து விட்டதாகவும், பொருளாளருடன் அமர்ந்து மாநாட்டில்
பணியாற்றிடு வதற்கான பல்வேறு குழுக்களில் யார் யாரை இடம் பெறச் செய்யலாம் என்பதற்கான பட்டியலையும் என்னிடம் காட்டி ஒப்புதல் பெற்றார். வரவேற்புக் குழு என்றும், நிதிக் குழு என்றும், தீர்மானக் குழு என்றும், மலர்க் குழு என்றும், உபசரிப்புக் குழு என்றும், பிரச்சாரக் குழு என்றும், பந்தல் குழு என்றும், மேடைக் குழு என்றும், அலங்காரக் குழு என்றும், விளம்பரக் குழு என்றும், தொண்டர் அணி என்றும், மகளிர் அணி என்றும், மகளிர் தொண்டர் அணி என்றும், மாநாட்டு அலுவலகப் பொறுப்பாளர்கள் என்றும் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு "முரசொலி”யில் வெளியிடப் பட்டுள்ளன. அந்தந்தக் குழுக்களிலே
இடம் பெற்ற வர்கள் தங்கள் பணிகளை திறம்படச் செய்திடுவர் என்ற நம்பிக்கை எனக்கு
உள்ளது.
மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் நான் செய்தியாளர்களிடம் கூறியது போல, சிறப்பாகவும், முறையாகவும் நடைபெற்று வருகின்றன. வரவேற்புக் குழுத் தலைவர் கே.என்.நேரு பந்தலைச் சுற்றிப் பார்த்து வர, மோட்டார்சைக்கிளில் புறப்படுவதைப் பத்திரிகைகளில் வெளிவந்த படங்களிலேயே பார்த்திருப்பாயே; அந்த அளவிற்கு பந்தல் நீளமாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். மாநாட்டிற்கு முன்பாக என்னை ஒரு முறை ஏற்பாடுகளைப் பார்க்க திருச்சிக்கு வரவேண்டுமென்றார்! அண்ணனுக்கு அறுபது வயது என்று அவருக்கு நினைப்பு? தம்பிகளின் பணியிலே சந்தேகம் இருந்தால்தானே முன்கூட்டிச் சென்று பார்க்க வேண்டும்!
மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறும் நேரத்தில் உன்னுடைய வருகையை நம்பி, பத்து இலட்சம் பேர் திரளுவார்கள் என்று அறிவித்திருக்கிறோம். எனவே உன் பயணத்தில் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்! திருமண அழைப்பிதழ்களில்தான்,
"குடும்பத்தினரோடும், உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் முன்கூட்டியே வந்திருந்து சிறப்பிக்க வேண்டும்” என்றெல்லாம் குறிப்பிட்டு அழைப்பார்கள். நான் மாநாட்டிற்காக அழைக்கிறேன், குடும்பத்தின ரோடும், உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் முன் கூட்டியே வந்திருந்து இரண்டு நாள் மாநாட்டினையும் வெற்றிகரமாக நடத்திடப் பெரிதும் விரும்பி அழைக்கிறேன்!
(தொடரும்)

No comments:
Post a Comment