வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



10/01/2014

ஜெயா அரசுக்குச் சரியான மூக்கறுப்பு! கலைஞர் அறிக்கை!

திமுக தலைவர் கலைஞர் 08.01.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,
கேள்வி :- திருச்சியிலிருந்து காரைக்குடி வரை சாலை அமைக்க கழக ஆட்சியில் அனுமதி கொடுத்து, அதற்கு அ.தி.மு.க. அரசு தடை விதித்ததை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறதே?
கலைஞர் :- வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பு. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை 126 கி.மீ. தூரத்திற்கு 400 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு தி.மு.கழக ஆட்சியில் தடையில்லாச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது. 
அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டதும், இந்தத் திட்டத்திற்கே தடை விதித்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதை விசாரித்த தனி நீதிபதி தமிழக அரசின் உத்தரவுக்குத்தடை விதித்தார். அதை எதிர்த்து, தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். நீதிபதி ராஜா அளித்த தீர்ப்பில்; ஏற்கனவே தமிழக (தி.மு.கழக) அரசு அளித்த ஒப்புதலை, இந்த அரசு மாற்றியது தவறானது என்றும், திட்டத்துக்கு அ.தி.மு.க. அரசு விதித்த தடையை ரத்து செய்தும் தீர்ப்பளித்திருக்கிறார்.
ஜெயா அரசுக்கு நேர்ந்த சரியான மூக்கறுப்பு இது! இனியாவது அ.தி.மு.க. அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலைத் திட்டங்களுக்கு, குறுக்குச் சால் ஓட்டாமல், முறையாக ஒத்துழைத்தால், ஏற்கனவே தொடங்கப்பட்ட மதுரவாயல் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவு பெற்று, தமிழகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels